Tuesday 17 January 2012

ஆங்கிலம் துணுக்குகள் 20


ஆங்கிலம் துணுக்குகள் 20 (tw)

நாம் கடந்த பதிவில் "to, too and two" போன்ற சொற்களின் ஒப்பொலிகள் (homophones) தொடர்பான ஒரு பாடத்தைப் பார்த்தோம். அதில் "Two" எனும் சொல் பற்றியும் பார்த்தோம். இச்சொல் தொடர்பான சில சுவையான தகவல்களை இன்று பார்ப்போம்.

இந்த "two" எனும் சொல்லில் "o" எழுத்தை அகற்றிவிட்டு, "tw" எனும் எழுத்துக்களின் பயன்பாட்டை சற்று உன்னிப்பாக அவதானித்தீர்களானால், அவ்விரண்டு எழுத்துக்களே "இரண்டு" எனும் பொருள் தருபவைகளாக இருப்பதை காணலாம். ஆங்கிலத்தில் அவ்வாறான சொற்கள் ஏராளம் உள்ளன.

இங்கே சில சொற்கள் உங்களுக்காக:

Twain: இரண்டு அல்லது "இரண்டு" நபர்.

Twins: ஒரே நேரத்தில் பிறந்த "இரண்டு" பேர்.

Twice: ஒரே வேலையை "இரண்டு" முறை செய்தல். "இரண்டு மடங்கு" என்பதை குறிக்கவும் பயன்படும்.

Twilight: இருட்டு வெளிச்சம் "இரண்டு" க்கும் இடையிலான மங்கிய நேரம்.

Twelve: பத்துடன் "இரண்டு" கூட்டினால் (10+2=12) வரும் தொகை.

Twenty: "இரண்டு" பத்தை கூட்டினால் (10x2=20) வரும் தொகை.

Twig: ஒரு மரக்கொப்பின் "இரண்டு" சிறு கிளைகள்.

Tweezers: உலோகத்திலான "இரண்டு" பிடிகளைக் கொண்ட ஒரு சாதனம். தமிழில் "சாமணம்" என்பர்.

Between: "இரண்டு" க்கு இடையில் என்பதைக் குறிக்கும் சொல்.

Tweedledum: பெயரளவில் மட்டும் வேறுப்பட்டு, மற்ற எல்லாவகையில் ஒன்றோடொன்று வேறுப்பாடற்று ஒத்திருக்கும் "இரண்டு" பொருற்கள் அல்லது நபர்கள். (two people or things that are not different from each other.)

உங்கள் அகராதியில் தேடிப்பாருங்கள்; மேலும் இதுப்போன்ற சொற்கள் இருக்கும். இதுப்போன்ற சுவையான விடயங்களூடாக ஆங்கிலம் கற்கும் போது அவை எளிதாக மனதில் பதியக் கூடியதாக இருக்கும். அத்துடன் ஆங்கில சொல்வளத்தை பெருக்கிக்கொள்ளவும் உதவும்.

இது ஒரு துணுக்குப் பாடமாகும்.

No comments:

Post a Comment