Monday, 30 January 2012

தமிழர் வரலாறு 1923-2009

1923

தன்னாட்சி கட்சியைத் தோற்கடித்து பனகல் அரசர் தலைமையில் அமைச்சரவை செயல்பட்டது.

1924

ஜான் மார்சல் (1876-1958) சிந்து சமவெளி புதைப்பொருள் ஆராய்ச்சியில் ஈடுப்பட்டார்.

1925

தந்தை பெரியாரின் வைக்கம் போராட்டம்.

1926

தன்னாட்சி கட்சி ஆதரவுடன் சுயேட்சையான சுப்புராயன் அமைச்சரவையை ஏற்படுத்தினார்.

1927-1981

கவிஞர் கண்ணதாசன் "சங்க இலக்கியத்தைத் தங்க இலக்கியமாய் மனதில் தங்க வைத்தவன்" இக்கவிஞன். இராமநாதபுரம் சிறுகூடற்பட்டியில் பிறந்தவர். பேரறிஞர் அண்ணா பாசறையில் பாடம் படித்தவர். "காற்றுக்கு மரணமில்லை, கண்ணதாசன் கவிதைக்கும் மரணமில்லை". ஆனாலும் இவர் 1981ல் அமெரிக்காவில் தன் உடல் துறந்தார்.

1930

முனுசாமி தலைமையில் நீதிக் கட்சி பதவிக்கு வந்தது.

1930-1959

பட்டுக் கோட்டை கலியாணசுந்தரம் மக்கள் கவிஞன். புரட்சி கவிஞர் பாரதிதாசன் தலைமையில் திருமணம் செய்து கொண்டவர். தன் பாடல்களால் தமிழ்த் திரையுலகில் ஓர் எழுச்சியை ஏற்படுத்தினார்.

1931

காமராஜர் மீது கொலைசதி, வெடி குண்டு வழக்கு. வ.உ.சி. வாதாடி காமராஜரையும் தொண்டர்களையும் காப்பாற்றினார்

1932

சட்ட மறுப்பு இயக்கம் தொடக்கம். போப்பிலி அரசர் முதலமைச்சர் பதவி ஏற்றார்.

1932

அக்டோபர் 1 ஆம் நாள் சட்ட மறுப்பு நாள் திருப்பூர் குமரன் என்னும் குமாரசாமி தொண்டர்களுடன் கொடியேந்தி வந்தேமாதரம் முழங்கினார். காவல் துறையினரால் அடித்து கொல்லப்பட்டார். கொடி காத்த குமரன் அமரர் ஆனார். இராஜாஜி தலைமையில் உப்புச்சத்தியாகிரகம் திருமறைக்காடு (வேதாரண்யம்) யாத்திரை. ஓமந்தூர் இராமசாமி. ஓ.வி.அழகேசன், சர்தார் வேதரத்தினம், பம்பாய் தமிழ் பிரதிநிதி சுப்பிரமணியம் உள்ளிட்ட நூறு தொண்டர்கள் "கத்தியின்றி இரத்தமின்றி யுத்தமொன்று வருகுது"- நாமக்கல் கவிஞர் பாடலைப் பாடினார்கள்.

1934

போப்பிலி அரசர் முதலமைச்சர் ஆனார்.

1937

1937 வரை நீதிக்கட்சியினர் பதவியில் நீடித்தனர். நீதிக்கட்சியினரின் சாதனைகள். ஓர் இனத்தாரின் ஏகபோக பதவிக் குத்தகையை ஒழித்தது. உயர் பதவிகள் எளிதில் எல்லா இனத்தாருக்கும் கிடைக்க வழி வகுத்தது.

எளியோர் கல்வி பெற கட்டணச் சலுகையும் நிதி உதவியும் அளித்தது. பேரூர்களுக்கும், சிற்றூர்களுக்கும் கல்வி கிடைக்க தொடக்கப்பள்ளி கொண்டு வரப்பட்டது. மதிய உணவுத் திட்டம் வகுக்கப்பட்டது.

1925

ஆந்திர பல்கலைக்கழகம் உருவாகியது.

1928

அண்ணாமலைப் பல்கலைக் கழகம் உருவாகியது. தொழில் சட்டம், தொழில் விரிவாக்கம், தொழில் வளர்ச்சி, தொழில் நுட்ப ஆய்வு ஆகியவற்றிற்கு உதவியது. தேவதாசி முறையை ஒழிக்க சட்டமியற்றப்பட்டது.

1921

பெண்ணுக்கு வாக்குரிமைச் சட்டம் கொண்டு வரப்பட்டது.

1937

சி.இராஜகோபாலாச்சாரியார் தலைமையில் அமைச்சர் அவை சென்னை மாநிலத்தில் சுயாட்சியை நட்த்தியது. மதுவிலக்குச் சட்டத்தால் மக்களுக்கு நன்மை செய்தது.

1938

ஆலயம் புகும் சட்டம் சாமான்யர்களுக்கு சமய விடுதலை அளித்தது இந்தி கொள்கை இந்தி எதிர்ப்பை வரவழைத்தது. இந்தி எதிர்ப்பு கொள்கையால் பெரியார் சிறைக்குச் சென்றார்.

1938

தமிழியக்கம் இராசக்காமங்கலத்தில் தோன்றியது. இந்திக் கொள்கையின் தூண்டுதலால் திராவிட நாடு கொள்கை உருவானது.

1939

தாளமுத்து. மொழி காக்கும் பணியில் தன்னுயிர் ஈந்தத் தமிழர்.

1939

இரண்டாம் உலகப் போர் ஆரம்பம்.

1940

திராவிடநாடு கொள்கை வடிவம் பெற்றது.

1942

'வெள்ளையனே வெளியேறு' போராட்டம் வலுபெற்றது.

1944

சேலம் மாநாட்டில் திராவிடக் கழகம் உருவானது.

1945

மத்தானியேல் நாகர்கோவிலில் திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரசை உருவாக்கினார். தமிழ்ப் பகுதிகளைத் தாய்த் தமிழகத்துடன் இணைக்கும் இயக்கம் முழுவடிவில் இயங்கியது. 1945 நாகசாகியில் அமெரிக்கா அணுகுண்டு போட்டது. இரண்டாம் உலகப் போர் முடிவு. இறந்தோர் எண்ணிக்கை 6 மில்லியன்.

1947

காவல் துறையினர் திட்டமிட்டு தாய்த் தமிழக இயக்கத்தை ஒழிக்க முனைந்தனர். மக்கள் பொங்கி எழுந்தனர். மாங்காட்டுச் செல்லையா, தேவசகாயம் காவல் துறையினரால் கொல்லப்பட்டனர்.

1947

ஓமந்தூர் இராமசாமியின் தலைமையில் அமைச்சரவை ஏற்பட்டது.

1947

ஆகஸ்ட்டு திங்கள் 14 ஆம் நாள் நள்ளிரவு 12 மணிக்கு இந்தியா வெள்ளையரிடமிருந்து விடுதலை பெற்றது. திராவிட பண்பாடு தொடர்பானவர்கள் பெரும்பாலோர் தமிழகத்தில் சமூகத் தீமைகளாலும், சாதித் தீமைகளாலும் நசுங்கித் தீர்வுகாணாது தவித்தனர் என்பது வரலாற்று உண்மையானது. மனோன்மணியம் சுந்தர்ம், ந.கந்தையா திராவிடர் பண்பாட்டுப் பழமையை, பெருமையை நிலை நிறுத்துவதில் கவனம் செலுத்தினர்.

1948

நாட்டின் தந்தை மகாத்மா, கோட்சே என்ற இந்து வட இந்தியரால் சனவரி 30 ஆம் நாள் சுட்டுக் கொல்லப்பட்டார்.

1948

இலங்கை ஆங்கிலக் கட்டுக்குள் உட்பட்ட தனி நாடாகியது.

1948

மிராசு, ஜமீன் முறை ஒழிக்கப்பட்டது.

1949

திராவிட முன்னெற்றக் கழகம், "அண்ணா" என தமிழர்களால் பெருமையுடன் அழைக்கப்பெறும் தமிழ்ப் பேரறிஞர் சி.என்.அண்ணாதுரை தலைமையில் உருவானது.

1949

அம்பேத்கர் முன்னணியில் இந்திய அரசியல் சட்டம் எழுதப்பட்டது. தீண்டாமை ஒழிப்புச் சட்டமும் நிறைவேறியது.

1949

குமாரசாமி ராஜாவின் அமைச்சரவை பொறுப்பு ஏற்றது.

திராவிடர் கழகம். சமூகச்சீர்திருத்தப் பணிகளைத் தீவிரப்படுத்தியது. மூட நம்பிக்கைகள் திராவிடர்களின் தாழ்வுக்குக் காரணம் என்பதை முன் வைத்தது. தீண்டாமை ஒழிப்பில் தீவிரம் காட்டியது. பெண்ணுரிமை, மகளிர் கல்வி, விருப்ப மணம், விதவை மணம், அனாதை இல்லம், கருணை இல்லம், என்பன கழகத்தின் முக்கிய நோக்கங்களாயின.

1952

இராஜாஜி தலைமையில் ஆட்சி. குலக் கல்வித் திட்டத்தைக் கொண்டு வரும் பணியில் தோல்வியுற்று பதவியை இழந்தார்.

1952

தமிழரசுக் கழகத்தின் தலைவர் ம.பொ.சிவஞானம் சித்தூர் மாவட்டப் பகுதிகளை தமிழகத்துடன் இணைக்க உரிமைக்குரல் எழுப்பினார்.

1954

ஏப்ரல் 13 ஆம் நாள் பெரியாரின் நல்லாசியுடன் தமிழர் தலைவர் கு.காமராஜர் முதல்வரானார். "ஏழைக்குக் கல்விக் கண் திறந்தவர்" காமராஜர் என்ற புகழ் இவரைச் சூழ்ந்தது.

1955

அறிவியல் மேதை ஐன்ஸ்டீன் (1879 - 1955) மறைவு. தமிழ்நாடு கண்ட நடராசர் சிலையே உலகின் தலைசிறந்த வேலைப்பாடு என்றவர் இவர்.

1961

சென்னை மாநிலத்தை "தமிழ் நாடு" என்று பெயர் மாற்றல் செய்ய வேண்டுமென 78 நாட்கள் உண்ணா நோன்பு கொண்டு தன்னுயிரையும் ஈந்த தமிழர் "சங்கரலிங்கம் மான்பு தமிழகத்தைக் கண்ணீர்க் கடலில் மூழ்கடித்தது.

1962

காமராஜரின் அமைச்சரவை மூன்றாம் முறை பதவி ஏற்றது. அகில இந்திய அளவில் காமராஜர் திட்டம் வந்தது. காமராஜர் கட்சிப் பணி ஆற்றச் சென்றார்.

1962

அக்டோபர் 3 ஆம் நாள் பக்தவத்சலம் தலைமையில் அமைச்சரவை.

1963

அறிஞர் அண்ணா தலைமையில் இந்தி எதிர்ப்புப் போர் அரசியல் சட்ட எரிப்பு.

1964

மொழி காக்க திருச்சியில் தமிழ் மகன் சின்னச்சாமியின் தியாகத் தீக்குளிப்பு.

1964

ஜனவரி 26 ஆம் நாள் மொழி காக்கும் போராட்டத்தில் தன்னுயிரினையே தந்த தமிழ்மகன் சிவலிங்கம் சென்னையில் தீக்குளிப்பு.

1965

ஜனவரி 26 ஆம் நாளை இந்தித் திணிப்பு நாள் என அறிவித்து, திராவிடர் முன்னேற்றக் கழகம் துக்க நாளென்று அறிவித்து அமைதி ஊர்வலம் நடத்தியது.

1967

மார்ச் 6 ஆம் நாள் தமிழ்நாட்டில் 138 சட்டமன்ற இடங்களுடன் திராவிட முன்னேற்றக் கழகம் அறிஞர் அண்ணாதுரையின் தலைமையில் ஆட்சியில் அமர்ந்தது. உடன் "கடமை, கண்ணியம், கட்டுப்பாடு"ம் தமிழக ஆட்சியில் அமர்ந்தது. இரண்டாவது உலகத் தமிழ் மாநாட்டினை சென்னையில் நட்த்தினார். சென்னை மாநிலம் 1967 ஜூலை 18 ஆம் நாள் "தமிழ்நாடு" எனப் பெயர் மாற்றம் பெற்றது. இப்பணி எதிர்நோக்கி தன்னுயிர் ஈன்ற சங்கரலிங்கம் மனம் அமைதி அடைந்திருக்கும். சுயமரியாதைத் திருமணச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. 1965ல் மொழி காத்தல் என்ற உறுதியுடன் தம் உயிர் ஈந்த தமிழர்க்கு மதிப்பளித்து இருமொழிச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இந்திக்குத் தமிழ் மண்ணில் இடம் இல்லை என்ற நிலை முடிவானது.

1969

பிப்ரவரி 3 ஆம் நாள் அண்ணா மறைந்தார். நாவலர் நெடுஞ்செழியன் தற்காலிக முதல்வராகப் பணி ஆற்றினார். தொடர்ந்து முறையாக கலைஞர் மு.கருணாநிதி தமிழகத்தின் முதல்வரானார்.

திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் தமிழுக்கும் தமிழ்ப் பண்பாட்டிற்கும், மீட்பும், உயர்விடமும் கிடைத்தன. உயர் கல்வியையும், நிர்வாக நடைமுறைகளையும் எளிமை ஆக்கியது. தமிழர் பண்பாட்டுப் பாரம்பரியத்தை மீட்டு உலகுக்கு எடுத்தியம்ப உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தைச் சென்னையில் நிறுவினர். கோயில்களில் தமிழை வழிபாட்டு மொழியாக்கினர். மாநிலங்களுக்கு சுயாட்சி கோரினர்.

1972

அக்டோபர் 15 ஆம் நாள் எம்.ஜி.இராமச்சந்திரன் தலைமையில் அண்ணா திராவிட முண்ணேற்றக் கழகம் தோன்றியது.

1977

தி.மு.க. அரசு இந்திய அரசினால் பதவி நீக்கம் செய்யப்பட்டது, மக்களாட்சி முறையில் ஏற்பட்ட களங்கம்.

1977

எம்.ஜி.இராமச்சந்திரன் தமிழகத்தின் முதல்வரானார்.

1978

பள்ளிக் குழந்தைகளுக்கு சத்துண்வுத் திட்டம் மீண்டும் கொண்டு வரப்பட்டது. சிங்கள நாட்டிலிருந்து 100,000 தமிழர்கள் குடியுரிமை நீக்கப்பட்டு தமிழ் நாட்டிற்கு அனுப்பப்பட்டனர். இந்திய அரசும் தமிழர் சம்மதமின்றி இதற்கு உடன்பட்டு ஒத்துழைத்தது.

1981

ஐந்தாவது உலகத் தமிழ் மாநாடு நடத்தப்பட்டது. தஞ்சை, திருச்சி, கோயம்புத்தூரில் பல்கலைக்கழகங்கள் தோன்றின. தஞ்சையில் தமிழ்ப் பல்கலைக்கழகம், கொடைக்கானலில் பெண்களுக்கு அன்னை தெரசா பல்கலைக்கழகம், திருச்சியில் - பாரதிதாசனார் பல்கலைக்கழகம் கோயம்புத்தூரில் - பாரதியார் பல்கலைக்கழகம்.

1983

புத்த மதம் சார்ந்த சிங்கள வெறியர்கள் தமிழ்ஈழ மண்ணில் வெறியாட்டம். 37 தமிழர்கள் ஈழச்சிறையில் படுகொலை செய்யப்பட்டனர். சாத்வீகம் சாத்தியமில்லை என்ற நிலையில் தமிழர்கள் மேதகு. வேலுப்பிள்ளை பிரபாகரன் தலைமையில் ஆயுதம் தாங்கிய மறவர் பொறுப்பெற்றனர்.

" தமிழீழ விடுதலைப் புலிகள்" தமிழீழ தமிழர் உரிமை காக்கும் பணியில் தம் விலை மதிக்கவொண்ணா உயிர்க்கொடைக்கும் தயாராயினர்.

1983

பெண்களுக்கான பொறியியற் கல்லூரி உலகில் முதல் முறையாக தந்தை பெரியார் - மணியம்மை பெயரில் வல்லம், தஞ்சையில் நிறுவப்பட்டது.

1990

கிழக்கு, மேற்கு ஜெர்மனியின் "பெர்லின் தடுப்புச் சுவர்" பிப்ரவரி 12 ஆம் நாள் தகர்க்கப்பட்டது.


1990

உருசிய நாடு பொது உடைமை நிலை மாற்றப்பட்டு பல்வேறு கூறுகளாக, 12 குடியரசு நாடுகளாயின.

1992

ஜெயராமன் ஜெயலலிதா தமிழகத்தின் முதல்வரானார்.

1997

கலைஞர் மு.கருணாநிதி தமிழக்த்தின் முதல்வரானார்.

2000

உலக மக்கட் தொகை 6200 மில்லியன். தமிழ் நாட்டின் மக்கட் தொகை 42 மில்லியன். உலக வாழ் தமிழர் எண்ணிக்கை 70 - 75 மில்லியன்.

2001

ஜெயராமன் ஜெயலலிதா தமிழகத்தின் முதல்வரானார்.

2006

கலைஞர் மு.கருணாநிதி தமிழகத்தின் முதல்வரானார்.

2009

இலங்கையில் "தமிழீழ விடுதலைப் புலிகள்"  தலைவர் மேதகு.வேலுபிள்ளை பிரபாகரன் அவர்கள் கொல்லப்பட்டார் என்ற செய்தியை சிங்கள இராணுவம் வெளியிட்டது. ஆனால் சில நாட்களில், அவர் உயிருடன் இருப்பதாக "தமிழீழ விடுதலைப் புலிகள்" அமைப்பினுடைய அதிகாரப்பூர்வ இணையதளம் அறிக்கை வெளியிட்டது.

No comments:

Post a Comment