ஆங்கில பாடப் பயிற்சி 13 (Future Continuous Tense)
வணக்கம் உறவுகளே! இன்று நாம் Grammar Patterns -1 றில் பதினொன்று மற்றும் பன்னிரண்டவதாக அமைந்திருக்கும் வாக்கியங்களை விரிவாக கற்கப் போகின்றோம்.
நீங்கள் எமது பாடங்களை தொடர்ந்துக் கற்று வருபவராயின் இன்று என்னப் பாடம் என்பதை நீங்களாகவே அறிந்திருந்திருப்பீர்கள். அதாவது Grammar Patterns-1 இன் ஒவ்வொரு வாக்கியங்களும் ஒவ்வொரு பாடங்களாக விரிவடையும் என்று நாம் ஏற்கெனவே கூறியிருந்தோம். அதனடிப்படையில் இதுவரை நாம் விரிவாகக் கற்றவை.
1. I do a Job.
2. I am doing a job.
3. I did a job.
4. I didn't do a job.
5. I will do a job.
6. I won't do a job.
7. Usually I don't do a job.
8. I am not doing a job.
9. I was doing a job.
10. I wasn't doing a job.
இன்று விரிவாக கற்கப் போவது பதினொன்று மற்றும் பன்னிரண்டாவது வாக்கியங்களையாகும்.
இந்த ஆங்கிலம் வலைத்தளத்திற்கு நீங்கள் புதிதாக வருகைத் தந்தவரானால் உங்கள் பயிற்சிகளை இலக்க வரிசைக் கிரமத்தில் தொடரும்படி கேட்டுக் கொள்கின்றோம். முக்கியமாகக் "கிரமர் பெட்டன்களை" மனப்பாடம் செய்துக் கொள்ளுங்கள். அதுவே இந்த ஆங்கில பயிற்சி நெறியைத் தொடர எளிதாக இருக்கும்.
சரி இன்றையப் பாடத்திற்குச் செல்வோம்.நீங்கள் எமது பாடங்களை தொடர்ந்துக் கற்று வருபவராயின் இன்று என்னப் பாடம் என்பதை நீங்களாகவே அறிந்திருந்திருப்பீர்கள். அதாவது Grammar Patterns-1 இன் ஒவ்வொரு வாக்கியங்களும் ஒவ்வொரு பாடங்களாக விரிவடையும் என்று நாம் ஏற்கெனவே கூறியிருந்தோம். அதனடிப்படையில் இதுவரை நாம் விரிவாகக் கற்றவை.
1. I do a Job.
2. I am doing a job.
3. I did a job.
4. I didn't do a job.
5. I will do a job.
6. I won't do a job.
7. Usually I don't do a job.
8. I am not doing a job.
9. I was doing a job.
10. I wasn't doing a job.
இன்று விரிவாக கற்கப் போவது பதினொன்று மற்றும் பன்னிரண்டாவது வாக்கியங்களையாகும்.
இந்த ஆங்கிலம் வலைத்தளத்திற்கு நீங்கள் புதிதாக வருகைத் தந்தவரானால் உங்கள் பயிற்சிகளை இலக்க வரிசைக் கிரமத்தில் தொடரும்படி கேட்டுக் கொள்கின்றோம். முக்கியமாகக் "கிரமர் பெட்டன்களை" மனப்பாடம் செய்துக் கொள்ளுங்கள். அதுவே இந்த ஆங்கில பயிற்சி நெறியைத் தொடர எளிதாக இருக்கும்.
11. I will be doing a job.
நான் செய்துக் கொண்டிருப்பேன் ஒரு வேலை.
12. I won't be doing a job.
நான் செய்துக் கொண்டிருக்கமாட்டேன் ஒரு வேலை.
இவ்விரு வாக்கியங்களும் எதிர்காலத் தொடர்வினை வாக்கியங்களாகும். இவற்றை ஆங்கிலத்தில் "Future Continuous Tense" அல்லது "Future Progress Tense" என்பர்.
இந்த எதிர்காலத் தொடர்வினையின் பயன்பாடானது ஒரு செயல் அல்லது நிகழ்வு எதிர்காலத்தில் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் நடந்துக்கொண்டிருக்கும் என்பதை முன்கூட்டியே வெளிப்படுத்துவதாகும். (The future continuous tense expresses action at a particular moment in the future.)
Positive (Affirmative)
Subject + Auxiliary verb + Auxiliary verb + Main verb with ing
I /You /He /She /It / We / You /They + will + be + doing a job. இவற்றில் "Subject" வாக்கியத்தின் முன்னால் உள்ளது.
Negative
Subject + Auxiliary verb + Auxiliary verb + not + Main verb with ing
I /You /He /She /It /You /We /They + won’t + be + doing a job
Question (Interrogative)
Auxiliary verb + Subject + Auxiliary verb + Main verb with ing
Will + I /you /he /she /it /you /we /they + be + doing a job?
கவனிக்கவும்: இந்த எதிர்காலத் தொடர்வினை கேள்வியாகப் பயன்படும் பொழுது "Auxiliary verb" அதாவது "துணை வினை" இரண்டு இடத்தில் பயன்படுவதை அவதானியுங்கள்.
நாம் கற்ற கடந்தப் பாடங்களில் அநேகமாக ஒரு வாக்கியம் கேள்வியாக மாறும் பொழுது அதன் துணைவினை "Auxiliary verb" வாக்கியத்தின் ஆரம்பத்தில் வரும். ஆனால் இன்றையப் பாடத்தில் ஆரம்பத்திலும் அதன் பின் "Subject" " இற்குப் பின்னாலுமாக இரண்டு இடங்களில் வந்துள்ளது. இதை கவனித்துக்கொள்ளுங்கள். இது (invariable) மாற்ற இயலாதது.
கீழுள்ள உதாரணங்களையும் பாருங்கள்.
Will you be doing a job?
நீ செய்துக்கொண்டிருப்பாயா ஒரு வேலை?
Yes, I will be doing a job.
ஆம், நான் செய்துக்கொண்டிருப்பேன் ஒரு வேலை.
No, I won’t be doing a job.
இல்லை, நான் செய்துக்கொண்டிருக்கமாட்டேன் ஒரு வேலை.
Will you be speaking in English?
நீ பேசிக்கொண்டிருப்பாயா அங்கிலத்தில்?
Yes, I will be speaking in English.
ஆம், நான் பேசிக்கொண்டிருப்பேன் ஆங்கிலத்தில்
No, I won’t be speaking in English.
இல்லை, நான் பேசிக்கொண்டிருக்கமாட்டேன் ஆங்கிலத்தில்.
Will you be going to school?
நீ போயிக்கொண்டிருப்பாயா பாடசாலைக்கு?
Yes, I will be going to school.
ஆம், நான் போய்க்கொண்டிருப்பேன் பாடசாலைக்கு.
No, I won’t be going to school. (will + not)
இல்லை, நான் போய்க்கொண்டிருக்கமாட்டேன் பாடசாலைக்கு.
இப்போது மேலே நாம் கற்ற உதாரணங்களைப் பின்பற்றி கீழே இருக்கும் (Affirmative Sentence) வாக்கியங்களை கேள்விப் பதிலாக மாற்றி பயிற்சி செய்யுங்கள் பார்க்கலாம்.
சரி பயிற்சியைத் தொடருங்கள்.
1. I will be speaking in English.
நான் பேசிக்கொண்டிருப்பேன் ஆங்கிலத்தில்.
2. I will be sitting on the beach.
நான் அமர்ந்துக்கொண்டிருப்பேன் கடற்கரையில்.
3. I will be sun-bathing in Bali.
நான் சூரியக் குளியல் குளித்துக்கொண்டிருப்பேன் பாளியில்.
4. I will be coming back to home
நான் திரும்பி வந்துக்கொண்டிருப்பேன் வீட்டிற்கு.
5. I will be staying with my friend.
நான் இருந்துக்கொண்டிருப்பேன் எனது நண்பருடன்.
6. I will be celebrating my birthday.
நான் கொண்டாடிக்கொண்டிருப்பேன் எனது பிறந்தநாளை.
7. I will be signing the contract.
நான் கையொப்பமிட்டுக்கொண்டிருப்பேன் உடன்படிக்கை(யில்)
8. I will be playing tennis at 10 am.
நான் விளையாடிக்கொண்டிருப்பேன் டென்னிஸ் 10 மணிக்கு.
9. I will be lying on a beach tomorrow .
நான் சாய்ந்துக்கொண்டிருப்பேன் கடற்கரையில் நாளை.
10. I will be having dinner at home.
நான் (இரவு) சாப்பிட்டுக்கொண்டிருப்பேன் வீட்டில்.
11. I will be singing in the concert on Tuesday.
நான் பாடிக்கொண்டிருப்பேன் சங்கீதக் கச்சேரியில் செவ்வாய் கிழமை.
12. I will be going to Norway this summer.
நான் போய்க்கொண்டிருப்பேன் நோர்வேயிற்கு இந்த கோடை காலத்தைக் (கழிக்க)
13. I will be coming to work next week.
நான் வந்துக்கொண்டிருப்பேன் வேலைக்கு அடுத்த வாரம்.
14. I will be working this weekend.
நான் வேலைசெய்துக்கொண்டிருப்பேன் இந்த வாரக்கடைசியில்.
15. I will be sleeping in the hotel.
நான் நித்திரையடித்துக்கொண்டிருப்பேன் விடுதியில்.
16. I will be eating dinner with my friends this evening
நான் சாப்பிட்டுக்கொண்டிருப்பேன் எனது நண்பர்களுடன் இன்று மாலை.
17. I will be dancing at the party.
நான் ஆடிக்கொண்டிருப்பேன் விருந்துபசாரத்தில்.
18. I will be doing my duty.
நான் செய்துக்கொண்டிருப்பேன் எனது கடமையை.
19. I will be practicing English at night
நான் பயிற்சித்துக்கொண்டிருப்பேன் ஆங்கிலம் இரவில்.
20. I will be speaking English in the office
நான் பேசிக்கொண்டிருப்பேன் ஆங்கிலம் அலுவலகத்தில்.
21. I will be going to university.
நான் போய்க்கொண்டிருப்பேன் பல்கலைக்கழத்திற்கு.
22. I will be translating English to Tamil.
நான் மொழிமாற்றிக்கொண்டிருப்பேன் ஆங்கிலத்தை தமிழுக்கு.
23. I will be flying on the flight.
நான் பறந்துக்கொண்டிருப்பேன் விமானத்தில்.
24. I will be studying for the exam.
நான் படித்துக்கொண்டிருப்பேன் பரீட்சைக்காக.
25. I will be doing my homework.
நான் செய்துக்கொண்டிருப்பேன் எனது விட்டுப்பாடம்.
Homework:
A. மேலே நாம் கற்றச் சொற்களை You, He, She, It, We, You, They போன்ற சொற்களைப் பயன்படுத்தி வாக்கியங்களை அமையுங்கள்.
B. மேலுள்ள உதாரணங்களைப் பார்த்து இந்த 25 வாக்கியங்களையும் கேள்வி பதிலாக மாற்றிப் பயிற்சி செய்யுங்கள்.
C. இன்று நாம் கற்ற (Future Continuous Tense) எதிர்காலத் தொடர்வினை வாக்கியங்களைப் போல் நாளை, அடுத்த மாதம், அடுத்த ஆண்டு இதே நேரம் இதே திகதி என்னென்ன செய்துக்கொண்டிருப்பீர்கள் என்பதை சற்று நினைத்துப்பாருங்கள். பின் அவற்றைப் பட்டியலிட்டுக்கொண்டு அதனை நாம் இன்று பயிற்சி செய்ததுப் போன்று ஆங்கிலத்தில் எழுதிப் பயிற்சி செய்யுங்கள்.
கவனிக்கவும்:
இவ்வாறு தொடர் வாக்கியங்களாகவும் எழுதிப் பயிற்சி செய்யலாம்.
I will be waiting for you when your plane arrives tonight.
நான் காத்துக்கொண்டிருப்பேன் உனக்காக உனது விமான வந்தடையும் பொழுது இரவு.
Sarmilan will be playing on the computer when his mother comes home.
சர்மிலன் விளையாடிக்கொண்டிருப்பான் கணனியில் அவனது தாயார் வீட்டிற்கு வரும் பொழுது.
I will be studying when you come.
நான் படித்துக்கொண்டிருப்பேன் நீ வரும் பொழுது.
At the same time tomorrow I will be staying in America.
இதே நேரத்தில் நாளை நான் இருந்துக்கொண்டிருப்பேன் அமெரிக்காவில்.
No comments:
Post a Comment