வேகமாக கடந்து செல்லும் நாட்கள்,கணினி மையாக்கப்பட்ட உலகம் இதற்கு நடுவே நாம் தெரிந்து கொண்ட விஷயங்கள் கையளவு இருந்தாலும் தெரியாத விஷயங்கள் உலக அளவு உள்ளது.அந்த வகையில் நம் காதுகளை அடிக்கடி தொட்டு செல்லும் வார்த்தை தான் "பணவீக்கம்".முட்டை விற்கும் முகமது முதல் முள்ளங்கி விற்கும் முனியம்மா வரை இந்திய நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் தெரிந்து கொள்ளவேண்டிய செய்தி தான் இது.
பணவீக்கம் என்றால் என்ன? (What is meant by Inflation?)அனைத்து மக்களும் தெரிந்து கொள்ளும் வகையில் இந்த கட்டுரையை தொகுத்து உள்ளேன்.இதைப் படித்து நாட்டின் நாடித்துடிப்பை அறிந்து கொள்ளுங்கள்.
முன்பெல்லாம் 100 ரூபாய் எடுத்து சென்றால் பை நிறைய காய்கறி வாங்கலாம்,இப்போதெல்லாம் கை நிறைய கூட காய்கறியை வாங்கி வர முடியவில்லை.காரணம் நாட்டின் பணவீக்கம் தான்.உதாராணமாக,2000 ஆம் ஆண்டு ஒரு கிலோ வெங்காயம் விலை ரூ. 4 என்று வைத்துக்கொள்வோம். அதே ஒரு கிலோ வெங்காயத்தின் விலை தற்போது இருபது ரூபாய். இதன் மூலம் பணத்தின் மதிப்பு குறைந்து, பொருளின் விலை அதிகரித்து உள்ளது. இதையே பண வீக்கம் என்பார்கள்.அதே மாதிரி ஒரு நாட்டில் உற்பத்தியாகும் பொருட்களின் மதிப்பைவிட பணம்(ரூபாய் நோட்டுகள்)அதிகமானால் அதுவே பணவீக்கம்!
பணவீக்கம் எவ்வாறு ஏற்படுகிறது?நமது நாட்டில் ஆண்டுதோறும் பற்றாக்குறை பணம் அல்ல பட்ஜெட் தான். அதாவது வரவை விட செலவு அதிகம் என்பதுதான் உண்மை.
இப்படி வரும் செலவைச் சமாளிக்க அரசு வெறும் பண நோட்டுகளை அச்சடித்துத் தள்ளுகிறது. விளைவு? பணவீக்கம்!.( ஒரு நாட்டின் தங்க இருப்பை பொறுத்துதான் பணம் அச்சிடப்படுகிறது என்பது குறிப்பிடப்படுகிறது)
இதே மாதிரி சாதாரண மக்களுக்குத் தேவையான பொருட்களுக்கும் மின்சாரத்துக்கும் பஸ், ரயில் மற்றும் இதே போன்ற சேவைகளுக்கும் அளிக்கப்படும் மானியம் தொடர்ந்து வெட்டப்படுகிறது. விலை, கட்டணம் தொடர்ந்து உயர்த்தப்படுகிறது.
நமது நாட்டில் உள்ள கறுப்புப் பணத்தின் மதிப்பு ஒரு லட்சம் கோடி ரூபாயை தாண்டி விட்டதாக மதிப்பிடப்பட்டு உள்ளது.இதனால் நல்ல திட்டங்கள் கிடப்பில் போடப்படுகின்றன.காரணம் அரசியல்வாதி என்ற பெயரில் ஊழல் செய்யும் ஊழல்வாதிகள்.இதற்கு சிறந்த உதாரணம் ஸ்பெக்ட்ரம் ஊழல்.
வங்கிகள் மற்றும் ஏற்றுமதியாளர்களிடையே அமெரிக்க டாலரின் தேவை அதிகரித்து வருவதன் காரணமாக சர்வதேச சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.52.15 என்ற அதிகபட்ச மதிப்பை தொட்டுள்ளது. அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு அதிகரித்தாலும் பணவீக்கம் உயரும் என்பது குறிப்பிடத்தக்கது.
எப்படி பணவீக்கம் கணக்கிடப்படுகிறது?
இந்தியாவில் பண வீக்கத்தை கணக்கிட Wholesale Price Index (WPI) முறையை பயன்படுத்துகிறார்கள். ஆனால், மேலை நாடுகளில் Consumer Price Index (CPI)என்ற முறையை பயன்படுத்துகிறார்கள்.
WPI முறை 1902-லிருந்து நடை முறைக்கு வந்தது. இதனை கணக்கிட, மக்கள் தினமும் பயன்படுத்துகின்ற 435 அத்தியாவசிய பொருட்களை கணக்கில் எடுத்துக்கொள்கிறார்கள். இவ்வாறு கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்ட ஒவ்வொரு பொருளுக்கும் வெயிட்டேஜ் (Weightage) உண்டு. சந்தையில் இந்த பொருட்களின் விலை ஏற்ற இறக்கங்கள் மற்றும் அப்பொருட்களின் வெயிட்டேஜ் ஆகியவற்றை கொண்டு ஒவ்வொரு வாரமும் WPI மாறுபடும். அந்த மாறுதல் சதவிகிதமே பண வீக்கம் என்பார்கள். (WPI is calculated in weekly basis) இந்த 435 பொருட்களில், நாம் அதிகம் உபயோகிக்காத 100 பொருட்களும் அடங்கியுள்ளது தான் வருத்தத்திற்கு உள்ள விஷயம். முதலில் 1970ம் ஆண்டை அடிப் படை ஆண்டாகக் கணக்கில் எடுத்துக் கொண்டு இது கணக்கிடப்பட்டு வந்தது. பிறகு 1981-82 ஆண்டையும், தற்போது 1993-94ஆண்டையும் அடிப்படையாக வைத்து கணக்கிடப் படுகிறது. மூன்று விதமான பொருட்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகின்றன. முதலாவதாக உணவுப் பொருட்கள், பழங்கள், காய்கறிகள், பால், முட்டை,மாமிச வகைகள், மசாலா சாமான்கள், எண்ணெய் வித்துகள் போன்றவை. இரண்டாவதாக எரிபொருட்கள், எண்ணெய், மின்சாரம் போன்றவை. மூன்றாவதாக பிஸ்கட், சமையல் எண்ணெய், துணிமணிகள், பற்பசை,மதுபான வகைகள் போன்றவை. இது போன்று 435 பொருட்களின் விலைகளின் உயர்வு, தாழ்வு கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டு பணவீக்க சதவீதம் கண்டுபிடிக்கப்படுகிறது. இதில், முதல் கட்டப் பொருட்கள் 22.25சதவீதமும் (98 பொருட்கள்), எரிபொருட்கள் வகை 14.22 சதவீதமும் (19பொருட்கள்), மூன்றாவதாக உள்ள தயாரிப்பு பொருட்கள் 63.74 சதவீதமும் (318பொருட்கள்) எடுத்துக் கொள்ளப்படுகின்றன.மத்திய வர்த்தக அமைச்சகமும்,தொழில் துறை ஆலோசகரும் இதை கணக்கிடுகின்றனர். பொருட்களின் தேவை கூடும் போது, அதாவது மக்களின் வாங்கும் சக்தி கூடும் போது மறுபடி பணவீக்கம் வரும்.
ஓட்டும் போட்ட மக்களுக்கு அரசு செய்யும் தவறுகளை தட்டிக் கேட்க உரிமை இருக்கிறது,இருந்த போதிலும் ஆட்களை வைத்து மிரட்டும் அரசியல்வாதிகள் இருக்கும் வரையில் அநீதிகள் ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கும்.மண்ணில் மனிதர்களாய் விழும் விதைகள் ஒரு நாள் அசைக்கமுடியா ஆலமரமாய் வளரும் அநீதிகளுக்கு எதிராக.

No comments:
Post a Comment