Wednesday, 2 May 2012

தேங்காய் எண்ணெய் சருமத்தை


தலைக்கு தேய்க்கவும், உடலுக்கு தேய்க்கவும் எண்ணற்ற அழகு சாதனப் பொருட்கள் சந்தையில் விற்பனைக்கு குவிந்துள்ளன. விலை அதிகம் கொடுத்து அவற்றை வாங்கி உபயோகிப்பதன் மூலம் அதில் உள்ள ரசாயனப் பொருட்கள் எண்ணற்ற பக்க விளைவுகளை ஏற்படுத்துகின்றன. பண்டைய காலத்தில் மேனி பராமரிப்புக்கு தேங்காய் எண்ணெய்தான் அதிகம் பயன்படுத்தப்பட்டு வந்தது.
இன்றைய நவீன உலகில் பலரு‌ம் தே‌ங்கா‌ய் எ‌ண்ணெயை தலை‌யி‌ல் தே‌ய்‌ப்பதே இ‌ல்லை. தலை முடி ஒ‌ட்டி‌க் கொ‌ண்டு முக‌ம் அழுது வ‌ழியு‌ம் எ‌ன்பதே பலரும் முன்வைக்கும் காரணமாகும். ஆனா‌ல், தே‌ங்கா‌ய் எ‌ண்ணெயை‌ப் போ‌ன்று உடலு‌க்கு ந‌ன்மை செ‌ய்யு‌ம் ஒரு பொரு‌ள் வேறு எதுவுமே இ‌ல்லை என்பதே அழகியல் நிபுணர்களின் கருத்தாகும்.
சரும பாதுகாப்பு
தேங்காய் எண்ணெய் சருமத்தை பாதுகாப்பதில் மிகச்சிறந்த பலனைத் தருகிறது. சரும வறட்சியை போக்குவதில் சிறந்த மாய்ஸரைசராக செயல்படுகிறது. இதில் உள்ள கொழுப்புச்சத்து சரும சுருக்கத்தை போக்குகிறது. இதனால் சருமத்திற்கு எவ்வித பக்கவிளைவும் ஏற்படுவதில்லை. சரும நலனை பாதுகாப்பதில் விலைகுறைவான பாதுகாப்பான பொருள் தேங்காய் எண்ணெயாகும்.
தலையை பாதுகாக்கும்
தலை‌க்கு ரசாயனம் கலந்த கண்ட எண்ணெயை பூசுவதற்கு பதிலாக தே‌ங்கா‌ய் எ‌ண்ணெ‌ய் தே‌ய்‌த்து‌க் கொ‌ள்வது ‌மிகவு‌ம் ந‌ல்லது. இதனால் தலை‌யி‌ன் தோ‌ல் பகு‌தியை வற‌ண்டு ‌விடாம‌ல் தே‌ங்கா‌ய் எ‌ண்ணெ‌ய் பாதுகா‌க்கு‌ம். மேலு‌ம், கு‌ளி‌ப்பத‌ற்கு மு‌ன்பு‌ம் தே‌ங்கா‌ய் எ‌ண்ணெயை உட‌ல் முழுவது‌ம் பூ‌சி‌க் கொ‌ண்டு ஊற‌வி‌ட்டு‌க் கு‌ளி‌க்கலா‌ம்.
கூந்தல் பாதுகாப்பு
கூந்தலை பாதுகாப்பதில் தேங்காய் எண்ணெய்க்கு நிகர் எதுவுமில்லை. சுத்தமான தேங்காய் எண்ணெயை புரதச் சத்து காணப்படுகிறது. இந்த எண்ணெயை வாரம் ஒருமுறை தலையில் ஊறவைத்து குளிப்பதன் மூலம் கூந்தலின் வேர்க்கால்கள் பலமடையும், பொடுகுத் தொல்லைக்கு நிவாரணம் கிடைக்கும்.
மன அழுத்தம் நீக்கும்
பணிச்சூழல் காரணமாக மன அழுத்தம் ஏற்படுவது இயல்பு. இதனால் முகமானது களை இழந்து காணப்படும். தேங்காய் எண்ணெய் மன அழுத்தம் நீக்கி முகத்தை பொலிவாக்குகிறது. தேங்காய் எண்ணெயை ஊற்றி மசாஜ் செய்வதன் மூலம் உடலில் உள்ள தேவையற்ற வலிகள் நீங்கும்.
தோல் நோய்கள் நீக்கும்
தேங்காய் எண்ணெயில் உள்ள பாக்டீரிய எதிர்ப்புப் பொருள் தோல் பூஞ்சை நோய்களை கட்டுப்படுத்துகிறது. உடலுக்கு மட்டுல்லாது குடலுக்கும் பாதுகாப்பு தருகிறது. ஜீரண சக்தியை சீராக்கி மலச்சிக்கலை நீக்குகிறது. இதனால் தோல்களில், முகத்தில் கரும்புள்ளிகள் ஏற்படுவது நீங்குகிறது.
அ‌திகமாக மே‌க்-அ‌ப் போடு‌ம் பெ‌ண்க‌ள், இர‌வி‌ல் மு‌க‌த்தை சு‌த்த‌ம் செ‌‌ய்து‌ வி‌ட்டு தே‌ங்கா‌ய் எ‌ண்ணெயை தட‌வி‌க் கொ‌ண்டு படு‌க்கலா‌ம். இதனா‌ல் சரும‌த்‌தி‌ற்கு ந‌ல்ல பொ‌லிவு ‌கிடை‌க்கு‌ம்.
கேரள மாநிலத்தில் இன்றைக்கும் தேங்காய் எண்ணெயின் பயன்பாடு அதிகம் உள்ளது. மேனிக்கு உபயோகப்படுத்துவதோடு அன்றாட சமையலுக்கும் தேங்காய் எண்ணெய் உபயோகிப்பதே அவர்களின் அழகின் ரகசியமாகவும் உள்ளது.

No comments:

Post a Comment