Wednesday, 23 May 2012

வானெங்கும் பறவைகள்



கடந்த ஐந்து நாட்களாக திருச்சி எஸ்ஆர்வி பள்ளி நடத்திய மாணவர்களுக்கான சிறப்புப் பயிலரங்கில் கலந்து கொணடேன்.
இந்த முகாமில் எழுத்தாளர் வண்ணதாசன், எழுத்தாளர் தமிழ்செல்வன், பத்திரிக்கையாளர் ஞாநி, எழுத்தாளர் பவா.செல்லத்துரை, எழுத்தாளர் முத்துகிருஷ்ணன், கவிஞர் மனுஷ்யபுத்திரன், சரஸ்வதி மகால் நூலகர் பெருமாள், புகைப்படக்கலைஞர் வைட் ஆங்கிள் ரவிசங்கர், நாடக கலைஞர் பார்த்திபராஜா, ஒவியர் டிராட்ஸ்கி மருது, நடிகை ரோகிணி, பத்திரிக்கையாளர் கவின்மலர், கவிதா முரளிதரன், பெண்ணியசிந்தனையாளர் பத்மாவதி, விஜயா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டார்கள். பெரிய இலக்கியவிழா ஒன்று நடைபெற்றது போலவே முகாம் அமைந்திருந்தது.
மாணவர்களுடன் ஒன்றாகத் தங்கியிருந்து கதைகள் சொல்வது, எழுதுவது என இரண்டு தளங்களிலும் பேசி விவாதித்தது சந்தோஷமாக இருந்தது
இந்த முகாமை முன்னிட்டு பள்ளிமாணவர்கள் படிக்கும்படியாக தமிழின் சிறந்த  12 சிறுகதைகளைத் தொகுத்து தனி நூலாக உருவாக்கினேன், அதன் தலைப்பு வானெங்கும் பறவைகள், இந்நூலை எஸ்ஆர்வி பள்ளியே வெளியிட்டிருக்கிறது,
தமிழகத்தில் முதன்முறையாக ஒரு பள்ளி தனது மாணவர்களுக்காகத் தமிழின் சிறந்த சிறுகதைகளைத் தனிநூலாக வெளியிட்டிருப்பது பாராட்டிற்குரிய முன்னோடிச் செயலாகும்
இந்த முயற்சிக்குக் காரணமாக இருந்த முதல்வர் துளசிதாசன், மற்றும் பள்ளியின் நிர்வாகிகள் அனைவரையும் மனம் நிறைந்து பாராட்டுகிறேன்

No comments:

Post a Comment