Tuesday, 1 May 2012

மூன்று முடிச்சு தத்துவம்



தாலிக்கயிறை மூன்று முடிச்சாக போடுவதற்கு விளக்கம் இது.
முதல் முடிச்சு - பெண் தன் ஒழுக்கத்தில் உயிராக இருக்க வேண்டும்
2-ஆம் முடிச்சு - கணவனை மதித்து அவன் உயர்வுக்கு காரணமாக இருக்க வேண்டும்
3-ஆம் முடிச்சு - நல்ல குழந்தைகளைப் பெற்ற சிறந்த தாயாக பெருமை பெற வேண்டும்.
ஆக இந்த மூன்று காரணங்கள் தான் மூன்று முடிச்சு போடுவதற்கு காரணம் என்று சொல்கிறார்கள்.



பெண்ணுக்கு தாலிகயிற்றில் மூன்று முடிச்சு போடப்படுவது மூன்று விதமான உயர்ந்த சிந்தனையை அவளுக்கு நினைவுப்படுத்த அந்த மூன்று முடிச்சுகள் போடப்படுகின்றன.

ஒரு பெண் மணவாழ்க்கையில் அடியெடித்து வைக்க போகின்ற நேரம் மூன்று பேருடைய சிந்தனைகளும் ஆலோசனைகளும் தேவைப்படுகின்றன.
- முதலாவது தாயின் ஆலோசனை. 
- 2-ஆவது பாட்டி போன்ற உறவுள்ள மிகுந்த வயதான பெண்மணியின் ஆலோசனை.
- 3-ஆவது அந்த பெண்ணுக்கு சமவயதுள்ள இன்னோரு பெண்ணின் ஆலோசனை. இத்தகைய மூவர் தரும் ஆலோசனைகள் ஒரு பெண்ணின் மணவாழக்கையை சிறந்து விளங்க உறுதுணையாக அமைகின்றது.



- ஒரு பெண்ணுக்கு முதலாதாக தாயின் ஆலோசனையே மிக முக்கியமானது. வாழப்போகிற இடத்தில் த பெண் தனது பண்பாலும், அடக்கத்தாலும் தன் கணவன், மாமன், மாமியார், கணவனின் உடன் பிறந்தவர்கள் மற்றும் உற்றார் உறவினர்கள் அனைவரையும் எப்படி கவர வேண்டும் என்கிற அடிப்படையான விஷயத்தில் ஒரு தாயின் ஆலோசனை மிக முக்கியமானது.

- அடுத்ததாக பாட்டி போன்ற மூத்தோர்களின் ஆலோசனைகள். கணவனிடத்தில் எப்படியெல்லம் அணுகி பழக வேண்டும் என்கின்ற நுணுக்கத்தையும் தங்களது மகிழ்ச்சியான வாழ்நாள் இடையே தனது உடல் நல்த்தையும் தனது கணவனின் உடல் நலத்தையும் எப்படி பேணி பாதுக்காத்துக்கொள்ள வேண்டும் என்ற ஆறியுரைகளையும் பிள்ளைபேறு காலங்களில் எப்படி நடந்துக்கொள்ள வேண்டும் என்பதையும் இவர்கள் மூலம் வழங்கப்படும் ஆலோசனைகள்.

- கடைசியாக சகதோழிகளிடமிருந்து அந்தரங்க விசயங்களை வேடிக்கக விளையாட்டாக அறிய முடியும்.

இவ்விதமாக ஒரு பெண்ணின் வாழ்க்கையில் மிக முக்கியமான ஆலோசனைகள் பெற்று நிலையான மணவாழ்க்கை சீர்தூக்கி நடத்த இந்த மூன்று முடிச்சுகள் அவளுக்கு நினைவூட்ட சாதனமாக விளங்குகின்றது.

இப்படியும் ஒரு விளக்கம் சொல்லப்படுகிறது

தாலி கட்டிய பின் மணமகள் மணமகளின் உசந்தலையில் குங்குமத்தால் திலகமிடுவார். இது அவள் தன் கணவனுக்கே உரியவள் என்பதை எடுத்துக்காட்டவே. அத்தோடு அவ்விடத்தில் தான் மகா லட்சுமி வாசம் செய்கின்றாள்.

மாங்கல்யம் சூட்டும்போது கெட்டிமேளம் கொட்டுவது சபையில் உள்ளோர் யாராவது தும்முதல், அபசகுன வார்த்தைகள் பேசுதல் போன்றவை மணமக்களிற்குக் கேட்கக்கூடாது என்பதற்காகவே.

மஞ்சள் கயிற்றில் தாலி கட்டும் போது மூன்று முடிச்சுப் போடுவார்கள். இதற்கு ஒரு விளக்கம்.

முதலாவது முடிச்சு – கணவனுக்குக் கட்டுப்பட்டவள் அல்லது பிறந்த வீட்டிற்கு

இரண்டாவது முடிச்சு – தாய் தந்தையருக்குக் கட்டுப்பட்டவள் அல்லது புகுந்த வீட்டிற்கு.

மூன்றாம் முடிச்சு – தெய்வத்திற்குப் பயந்தவள்

தாலி கட்டும்போது தூவப்படும் அட்சதை மணமக்கள் தீய சக்திகளிடம் இருந்து காப்பதற்கும் வளமான வாழ்க்கை அமைவதற்கும் ஆசீர்வதிப்பதாகும். தாலி கட்டும்போது கைவிளக்கு ஏந்தி நிற்பது ஏனென்றால் தாலி கட்டியதற்கு விளக்கு ஏந்தியவர் ஒரு சான்றாவார். இன்னொரு விளக்கம் சகுனத் தடைகள் ஏற்படாமலிருக்க.

No comments:

Post a Comment