வைரஸ் புரோகிராம்கள் சரியாகச் செயல்படுகின்றனவா?
கம்ப்யூட்டர் பயன்படுத்தும் அனைவருக்கும் உள்ள பொதுவான ஒரு பயம் வைரஸ் தான். பல்வேறு வழிகளில், வகை வகையான அழிக்கும் சக்திகளுடன் வரும் வைரஸ்கள் நம்
செயல்பாட்டை முடக்கி வைப்பதுடன் நம்மைச் சார்ந்தவர்களின் கம்ப்யூட்டர்களையும் நாசம் செய்திடும் வகையில் பரவுகிறது. கம்ப்யூட்டர்களின் உள்ளே இருக்கும் புரோகிராம் களையும் கெடுக்கிறது.
இத்தகைய வைரஸ்களிடமிருந்து நம் கம்ப்யூட்டர்களைக் காத்திடவும் நமக்கு நிம்மதியான ஒரு வேலைப் பாதுகாப்பினைத் தரவும் அமைந்தவை தான் ஆண்டி வைரஸ் சாப்ட்வேர் என அழைக்கப்படும் வைரஸ்களுக்கு எதிரான புரோகிராம்கள்.
பெரும்பான்மையான கம்ப்யூட்டர்கள் இன்று இவை இல்லாமல் இயங்குவதில்லை. அப்படி அமைக்கப்பட்டு இயக்கப்பட்டாலும் குறிப்பிட்ட சில வைரஸ்களை சில ஆண்டி வைரஸ் புரோகிராம்களால் ஒன்றும் செய்திட இயலவில்லை. வைரஸ் புரோகிராம்களின் கட்டமைப்பு அவ்வாறு அமைக்கப்படுகிறது. இருப்பினும் வாடிக்கை யாளர்கள் தரும் அனுபவக் கருத்துக்களின் அடிப்படையில் அந்த ஆண்டி வைரஸ் புரோகிராம்கள் மேம்படுத் தப்பட்டு அதுவரை கண்டுபிடித்து அழிக்க முடியாத வைரஸ்களும் அழிக்கப்படுகின்றன.
ஒரு முறை நண்பர் ஒருவர் மிக நல்ல ஆண்டி வைரஸ் புரோகிராமினை வைத்து கம்ப்யூட்டரை இயக்குவதாகக் கூறிவிட்டு அந்நிலையிலும் எஸ்.வி.சி. ஹோஸ்ட் என்னும் ஆப்பரேட்டிங் சிஸ்டம் பைலைக் குறி வைத்துக் கெடுக்கும் வைரஸ் ஒன்று வந்திறங்கி பைல்களையும் போல்டர்களையும் எக்ஸிகூட்டபிள் பைலாக மாற்றிவிடுவதாக எழுதி இருந்தார். இதற்கு இன்னொரு நண்பர் பதில் கூறுகையில் அவர் பயன்படுத்தும் ஆண்டி வைரஸ் புரோகிராமிற்கு அந்த வைரஸ் அகப்படாது என்று கூறிவிட்டு பதிலாக இன்னொரு இலவச ஆண்டி வைரஸ் புரோகிராமினைப் பயன்படுத்துமாறு கூறினார். அது போலவே பயன்படுத்த வைரஸ் மறைந்தது. வைரஸை நீக்கிவிடுகிறோம்.
நிம்மதியாக மீண்டும் கம்ப்யூட்டரை இயக்கி செயல்படுத்தத் தொடங்கி விடுகிறோம். வைரஸை நீக்கும் பணி முடிந்தவுடன் அனைத்துமே முடிந்துவிடுகிறதா? முழுவதுமாகக் கம்ப்யூட்டரிலிருந்து வைரஸ் நீக்கப்பட்டுவிட்டதா? அறியாமல் வேறு டாகுமெண்ட் பைல்களை அழித்தவுடன் அது எங்காவது இருக்காதா என்று தேடி அழித்த பைல்களை மீண்டும் கொண்டு வரும் ரெகவரி புரோகிராம்கள் மூலம் பெற முயற்சிக்கிறோம் அல்லவா? அப்படியானால் இங்கு அழிக்கப்பட்ட வைரஸ் புரோகிராமும் கம்ப்யூட்டரில் தானே எங்காவது இருக்கும். இப்படி என்றாவது சிந்தித்திருக்கிறீர்களா? சிந்தனையே பகீர் என வயிற்றைக் கலக்குகிறது. எங்காவது ஒளிந்து இருந்து மீண்டும் வைரஸ் வந்துவிட்டால் என்ன செய்வது? இதனை எப்படி அறிவது? என்ற கேள்விகள் எழுகின்றன.
வைரஸாகச் செயல்பட்ட இ.எக்ஸ்.இ. பைல்கள் நீக்கப்பட்டாலும் அவற்றால் கம்ப்யூட்டரில் உள்ள வேறு பைல்களில் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்கள் அப்படியே இருக்கத்தான் செய்கின்றன. முதலாவதாக ரெஜிஸ்ட்ரி என்னும் கம்ப்யூட்டர் இயக்கத்தின் முதுகெலும்பான பைலில் பல மாற்றங்கள் ஏற்படுத்தப்படுகின்றன. பைல்கள் இயங்குவதற்கான தொடக்க நிலைகளில் வைரஸ் ஏற்படுத்திய மாற்றங்கள் அழியாமல் அப்படியே இருக்கின்றன. கூடுதலாக ஏற்படுத்தப்பட்ட டி.எல்.எல். மற்றும் ஐ.என்.ஐ. பைல்கள் (dll’s/inf) அப்படியே தங்கிவிடுகின்றன. இவை சும்மா இருப்பதில்லை; அவ்வப்போது இந்த பைல் இங்கு இல்லை; இதன் இயக்கத்தில் பிரச்னை உள்ளது என்று ஏதாவது தேவயற்ற பிழைச் செய்திகளைத் தந்து எரிச்சல் படுத்திக் கொண்டே இருக்கின்றன. இந்த வகையில் தற்போது இயங்கும் ஆண்டி வைரஸ் புரோகிராம்கள் முழுமையாகச் செயல்படுவதில்லை என்பது உண்மையே. இதற்கு நாம் தொடக்கத்திலிருந்தே சில செயல்பாடுகளை மேற்கொள்ள வேண்டும். அவற்றைக் காணலாம்.
1. வைரஸ் கம்ப்யூட்டரில் உள்ளது என்று தெரிந்தவுடன் முதலில் நெட்வொர்க்கிலிருந்து கம்ப்யூட்டரை கழட்டிவிடுங்கள். அலுவலகத்தில் உள்ள நெட்வொர்க் மட்டுமின்றி இன்டர்நெட்டிலிருந்தும் எடுத்துவிடுங்கள். இங்கு கழட்டி விடுங்கள் என்று சொல்வது நிஜமாகவே அதன் கேபிள்களை எடுத்துவிடுவதுதான். எனவே இன்டர்நெட் இணைப்பை டிஸ்கனெக்ட் செய்தால் மட்டும் போதாது. கேபிள்களையும் எடுத்துவிடுங்கள். யு.எஸ்.பி. டிரைவ், வெளியே இருந்து இணைத்து செயல்படும் ஹார்ட் டிஸ்க்குகள், சிடி ட்ரைவில் உள்ள சிடி என அனைத்தையும் நீக்குங்கள். ஏனென்றால் இவை வழியாக உங்கள் கம்ப்யூட்டரில் புகுந்த வைரஸ் மற்ற கம்ப்யூட்டர்களுக்குச் செல்லும்.
2. இப்போது கம்ப்யூட்டரில் உள்ள ஆண்டி வைரஸ் புரோகிராமை இயக்கி கம்ப்யூட்டரை ஸ்கேன் செய்திடுங்கள். சி டிரைவ் மட்டுமல்ல; அனைத்து டிரைவ்களையும் நிதானமாக ஸ்கேன் செய்திடுங்கள். இதற்கு உங்கள் ஆண்டி வைரஸ் புரோகிராம் தொடர்ந்து இன்டர்நெட் வழியாக அப்டேட் ஆகி இருக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் அவ்வாறு செய்த பிற கம்ப்யூட்டரிலிருந்து காப்பி செய்து இங்கே பயன்படுத்த வேண்டும். இது சரியாக வரவில்லை என்றால் வேறு வழியின்றி இன்டர்நெட் இணைப்பை ஏற்படுத்தி அப்டேட் செய்து பின் இணைப்பை நீக்குங்கள்.
3. இனி ஸ்கேன் செய்கையில் ஆண்டி வைரஸ் புரோகிராம் வைரஸ்களைக் கண்டுபிடித்து கிளீன் செய்திடவா? அழிக்கவா? குவாரண்டைன் என்னும் இடத்தில் வைக்கவா? என்று கேட்கும். இதில் மூன்றாவதுதான் நல்லது. ஏனென்றால் பைல் அழிக்கப்பட்டாலும் வைரஸ் பல இடங்களில் பதுங்கி இருக்கும்.வேறு ஏதாவது செயல்பாட்டின் போது மீண்டும் இயங்கத் தொடங்கலாம். எனவே குவாரண்டைன் எனப் போட்டுவிட்டால் அது எந்நிலையிலும் இயங்காது. இதற்காக ஆண்டி வைரஸ் புரோகிராம் செட்டிங்க் செய்திடுகையில் “Always quarantine the file” என்னும்படி செட் செய்திடலாம். இதனால் குறிப்பிட்ட வைரஸ் பைலின் பெயர், அது எந்த பைலில் மாற்றங்களை மேற்கொள்கிறது என்று எளிதாகப் பார்க்கலாம்.
4. சில வேளைகளில் உங்களுடைய ஆண்டி வைரஸ் புரோகிராம் குறிப்பிட்ட வைரஸ் அல்லது வைரஸ் பாதித்த பைலை அணுக முடியவில்லை (“Access is denied”) என்று செய்தி தரலாம். அப்படியானால் அதனால் இயங்கமுடியவில்லை என்றே பொருள். உடனடியாக ஸ்கேன் செய்வதனை நிறுத்தி “boot time scan” என்ற ஸ்கேனிங் தொடங்குங்கள். இது கம்ப்யூட்டரை ரீ ஸ்டார்ட் செய்து விண்டோஸ் இயங்குமுன் இயங்கத் தொடங்கிவிடும். இதனால் வைரஸ்கள் உட்பட எந்த புரோகிராமும் இயங்காது. அதே நேரத்தில் ஆண்டி வைரஸ்புரோகிராம் தன் பணியைச் செவ்வனே செய்திடும் வாய்ப்பு கிடைக்கிறது. வைரஸ்கள் அழிக்கப்பட்ட பின் System Restore பகுதியில் அமர்ந்து கொள்ளும். பல ஆண்டி வைரஸ் புரோகிராம்கள் தானாக அந்த பகுதியில் சென்று வைரஸ் இருக்கிறதா என்று தேடாது. நாமாகத்தான் அதனை சிஸ்டம் ரெஸ்டோர் பகுதியிலும் தேடும்படி செய்திட வேண்டும். எனவே “boot time scan” இயக்கம் இந்த பிரச்னையைத் தீர்த்து அனைத்து பகுதிகளிலும் தேடும்.
5. ஸ்கேனிங் முடிந்துவிட்டால் உங்கள் கம்ப்யூட்டர் வைரஸ் எதுவும் இல்லாத நிலையை அடைந்துவிட்டது என்று பொருள். இனி குவாரண்டைன் பகுதிக்குச் சென்று எந்த மாதிரி வைரஸ் இருந்தது; அது எந்த பகுதிகளில் சேதம் விளைவித்தது என்று அறியலாம். தவறிப் போய் கூட எந்த பைலையாவது “Restore” அல்லது கட் / காப்பி / பேஸ்ட் செய்திவிடாதீர்கள். உங்களுக்கு அதிர்ஷ்டம் இருந்தால் உங்கள் டேட்டா பைல்கள் மற்றும் புரோகிராம்கள் வைரஸால் பாதிக்கப்படாமல் இருக்கும். பொதுவாக இப்போது வரும் வைரஸ்கள் அழிக்கும் பணியில் இயங்காமல் உங்களிடம் உள்ள உங்கள் பெர்சனல் தகவல்கள், கிரெடிட் கார் ட் எண், பாஸ்வேர்ட் போன்றவற்றைப் பெறும் வகையிலேயே அமைக்கப்படுகின்றன.
6. வைரஸ்களை நீக்கியபின் என்ன செய்ய வேண்டும்? இனிமேல் தான் வைரஸ் ஏற்படுத்திய மாற்றங்களைக் கண்டு சரி செய்திடும் பணியினை மேற்கொள்ள வேண்டும். இப்போது வைரஸ் இல்லை என்பதால் துணிச்சலுடன் இந்த செயலில் இறங்கலாம். குவாரண்டைன் சென்று வைரஸின் பெயர் அல்லது பாதித்த பைல் குறித்த தகவல்களை அறிந்து கொள்ளுங்கள். இந்த பெயர் அல்லது அதன் அழிவு வேலை குறித்த குறிப்புகள் தாங்கி வரும் டெக்ஸ்ட்டை அப்படியே காப்பி செய்து கூகுள் அல்லது நீங்கள் பயன்படுத்தும் ஆண்டி வைரஸ் புரோகிராம் தந்த நிறுவனத்தின் இணைய தளத்தில் தேடும் பகுதியில் சென்று பேஸ்ட் செய்து தேடவும். இதற்கான குறிப்புகள் விலாவாரியாகத் தரப்பட்டிருக்கும். கூகுள் வழி சென்றால் இதனால் பாதிக்கப்பட்டவர்களின் அனுபவம் மற்றும் செம்மைப் படுத்தும் வழிகள் தரப்பட்டிருக்கும்.
7.பெரும்பாலும் ரெஜிஸ்ட்ரியில் வைரஸ் ஏற்படுத்திய வரிகளை நீக்க வேண்டியதிருக்கும். இதனை உங்களால் மேற்கொள்ள இயலாது என்று தோன்றினால் பல தளங்களில் இலவசமாக ரெஜிஸ்ட்ரி கிளீனிங் புரோகிராம்கள் கிடைக்கின்றன. அவற்றை இறக்கிப் பயன்படுத்தலாம். பாதிக்கப்பட்ட பைல்களை மட்டும் மீண்டும் ஸ்கேன் செய்திடலாம். பல ஆண்டி வைரஸ் புரோகிராம்கள் குறிப்பிட்ட சில வகை வைரஸ்களை கண்டுகொள்ளாது.
எனவே இந்நிலையில் இன்னொரு ஆண்டி வைரஸ் புரோகிராமினை இயக்குவது நல்லது. அல்லது இணையத்திலிருந்து இறக்காமல் பைல்களை ஸ்கேன் செய்து தரும் ஆன் லைன் பைல் ஸ்கேனர்களைப் பயன்படுத்தலாம். இவ்வகையில் பல இருந்தாலும் காஸ்பர் ஸ்கை ஆன்லைன் ஸ்கேனர் சிறப்பாக இயங்குகிறது. இதனை www.kaspersky.com/scanforvirus என்ற தளத்தில் பெறலாம். இறுதியாக உங்களால் நேரமின்மையோலா உங்கள் திறமை மீது நம்பிக்கை இல்லை என்றாலோ உடனே ஒரு டெக்னீஷியனை அழைத்து வைரஸ் நீக்கி பின் மற்ற பின் இயக்க வேலைகளையும் மேற்கொள்ளச் செய்யவும்.
கேள்விகளும் பதில்களும்
கேள்வி: என் நண்பர் அவரின் விண்டோஸ் எக்ஸ்புளோரர் தொகுப்பில் அட்ரஸ் பார்களில் சிலவற்றிற்கு அந்த முகவரிக்கான எண்களைப் போட்டு வைத்து கிளிக் செய்கிறார். அவருக்கு மட்டும் எப்படி முகவரிக்கான எண்கள் கிடைக்கின்றன?
பதில்: இன்டர்நெட் முகவரிக்கான எண்களை அனைத்திற்கும் உங்கள் நண்பர் போடவில்லையே. ஒரு சிலவற்றிற்கு ஏற்கனவே போட்டுவைத்து அவை ஹிஸ்டரியில் இருப்பதால் அட்ரஸ் பாரில் கர்சர் போனவுடன் முகவரி எண்களில் கிடைக்கிறது. இதனை இரு வழிகளில் பெறலாம். முதலாவதாக நீங்கள் எழுத்துக்களினால் ஆன முகவரியினை அமைத்து தேடிப் பிடித்துப் பார்க்கையில் இன்டர்நெட் எக்ஸ்புளோரரின் இடது அடிப்பாகத்தில் அந்த முகவரிக்கான எண்கள் தெரியும். அதனை அப்படியே எழுதி வைத்து மீண்டும் முகவரிக்காக பயன்படுத்தலாம். அல்லது நேரடியாகவே கண்டுபிடிக்கலாம். முதலில் இணையத் தொடர்பை ஏற்படுத்துங்கள். பின்னர் Start பட்டன் அழுத்தி கிடைக்கும் மெனுவில் Run பிரிவில் கிளிக் செய்திடவும்.
இப்போது கிடைக்கும் Run விண்டோவில் cmd என டைப் செய்திடவும். இனி உங்களுக்கு டாஸ் பிராம்ப்ட் கருப்பு கட்டத்தில் கிடைக்கும். அதில் tracert என டைப் செய்து (trace route என்பதின் சுருக்கம்) இடம் விடாமல் நீங்கள் எண் காணவிரும்பும் முகவரியினைத் தவறில்லாமல் டைப் செய்து என்டர் அழுத்தவும். உடனே முதல் வரியிலேயே அடைப்புக் குறிக்குள் எண் கிடைக்கும். ஆனால் அந்த சர்வரை அடைய என்ன சர்வர்கள் வழியாக ரூட் செல்கிறது என்று வேகமாகக் காட்டப்பட்டு இறுதியிலும் அந்த இணைய தளத்திற்கான முகவரி எண்களில் கிடைக்கும்.
கேள்வி: நான் சிடியில் சில பாடல்களை எழுத முற்படுகையில் பபர் அன்டர் ரன் என்ற செய்தி வந்தது. அதன்பின் பாடல்களை எழுத முடியவில்லை. அந்த சிடியும் பயனற்றுப் போய்விட்டது. இதனால் தொடர்ந்து சிடி டிரைவினைப் பயன்படுத்த அச்சமாக இருக்கிறது. இது எதனால் ஏற்பட்டது? எதில் குறை?
பதில்: பிரச்னைக்குச் சுருக்கமான காரணத்தைச் சொல்லட்டுமா? சிடி எழுதுகையில் உங்கள் கம்ப்யூட்டரின் ஹார்ட் டிரைவிலிருந்து தகவல்கள் அதன் வேகத்திற்கு ஏற்ற வகையில் செல்லவில்லை. இதைச் சற்று விபரமாகப் பார்ப்போமா! சிடி –ஆர் டிரைவ்கள் உங்கள் ஹார்ட் டிரைவிலிருந்து தகவல்களை அல்லது பாடல் பைல்களை பபர் எனப்படும் மெமரி ஏரியாவில் சிடியில் எழுதும் முன் போட்டு வைக்கின்றன. இந்த ஏற்பாட்டின் அடிப்படை என்னவென்றால் தகவல்கள் சீரான ஓட்டத்தில் சிடிக்கு எழுதச் செல்ல வேண்டும் என்பதுதான். நீங்கள் ஒரு சிடியில் தகவல்களை எழுதும்போது (எரிக்கும்போது – பர்னிங் சிடி) அது ஜஸ்ட் லைக் தேட் என்று சொல்லும் வேகத்தில் நடைபெறுகிறது. மெமரி ஏரியாவான பபரில் தகவல்கள் தங்கி இருக்கும் வரை சிடி டிரைவ் அவற்றை சிடியில் எழுத முடியும். இந்த பபர் ஏரியா காலியாகி அந்த இடத்தில் தகவல்கள் நிரப்பப்படாமல் போவதற்கும் வாய்ப்பு உள்ளது. பொதுவாக இந்நிலை கம்ப்யூட்டர் வேறு வேலைகளில் ஈடுபட்டிருந்தால், அதாவது வேறு புரோகிராம்கள் இயங்கிக் கொண்டிருந்தால், ஏற்படலாம். அப்போது சிடி டிரைவில் சுழன்று கொண்டிருக்கும் சிடியில் எழுத தகவல்கள் கிடைக்காது. ஒரு சிடி எழுதப்படுகையில் அதன் ஒவ்வொரு செக்ஷனுக்கும் போதுமான தகவல்கள் சென்று கொண்டிருக்க வேண்டும். இல்லையேல் எழுதும் பணியில் தடங்கல் ஏற்படும். டிஸ்க்கும் குப்பைக்குப் போகும் நிலைக்குத் தள்ளப்படும். எனவே சிடியில் எழுதுகையில் வேறு புரோகிராம்களை இயக்காமல் இருப்பது நல்லது. குறிப்பாக உங்கள் ஸ்கிரீன் சேவர் இயங்குவதனையும் நிறுத்துவது நல்லது.
ஒரே பிரசன்டேஷனில் பல ஸ்லைட் டிசைன்ஸ்
ஒரு பவர்பாய்ண்ட் பிரசன்டேஷனில் பலர் ஒரே ஒரு ஸ்லைட் டிசைனை மட்டுமே கையாள்வார்கள். ஸ்லைடில் காட்டப்படும் விபரங்கள் முற்றிலும் மாறினாலும் அனைத்து ஒரே வகை ஸ்லைட் டிசைனிலேயே இருக்கும். ஏனென்றால் ஒரே ஸ்லைட் டிசைன்தான் ஒரு பிரசன்டேஷன் பைலில் வர முடியும் என இவர்கள் நம்புவதே இதற்குக் காரணம். வெவ்வேறு ஸ்லைட் பிரசன்டேஷனை ஒரு பவர்பாய்ண்ட் பிரசன்டேஷனில் கொண்டு வர முடியும். அதற்கான வழிகளை இங்கு காண்போம்.
மிகப் பெரிய அளவில் அதிக எண்ணிக்கையுள்ள ஸ்லைடுகளைக் கொண்டு பிரசன்டேஷன் பைல்களைத் தயாரிப்பவர்களுக்கு இந்த உதவியாக இருக்கும். ஸ்லைட் டிசைனை மாற்றுவதால் அதன் மூலம் சொல்லப்படும் கருத்து அல்லது தகவல் மாறியுள்ளது என்று காட்சி மாறுவதன் மூலம் சொல்ல முடிகிறது. இதற்காக நாம் ஒவ்வொரு ஸ்லைடிற்கும் ஒரு டிசைனை அமைக்கப்போவதில்லை. பல பிரிவுகளில் கருத்து சொல்ல இந்த டிசைன் மாற்றம் உதவும். முதலில் நார்மல் வியூவினை குறிப்பிட்ட பைலுக்குத் தேர்ந்தெடுங்கள். View மெனு சென்று Normal என்னும் பிரிவில் கிளிக் செய்திடுங்கள். முதலில் Slide Design Task Pane என்னும் பிரிவிற்குச் செல்லுங்கள். இதற்கு Format மெனு சென்று Slide Design என்பதனைத் தேர்ந்தெடுங்கள். இந்த புரோகிராம் விண்டோவின் இடது பக்கம் Slides tab என்று ஒரு பிரிவு இருக்கும். இப்போது நீங்கள் புதிய ஸ்லைட் டிசைன் எந்த ஸ்லைடுகளுக்கெல்லாம் அமைக்கப்பட வேண்டும் என விரும்புகிறோமோ அவற்றை Shift / Ctrl கீகளை அழுத்தியவாறே தேர்ந்தெடுக்கவும். பின்னர் எந்த ஸ்லைட் டிசைன் டெம்ப்ளேட் உங்களுக்குப் பிடித்திருக்கிறதோ அதனை ஸ்லைட் டிசைன் டாஸ்க் பேன் பிரிவில் தேர்ந்தெடுக்கவும். இதனைத் தேர்ந்தெடுக்கையில் அருகில் உள்ள கீழ் நோக்கிக் காணப்படும் சிறிய அம்புக் குறியில் அழுத்தவும். கிடைக்கும் மெனுவில் Apply to Selected Slide என்பதில் கிளிக் செய்திடவும். புதிய ஸ்லைட் டிசைன் தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து ஸ்லைடுகளுக்கு மட்டும் இணைக்கப்பட்டு மற்றவற்றிலிருந்து வேறுபடுத்திக் காட்டப்படும்.
யு.எஸ்.பி. போர்ட்டுகளுக்கிடையே என்ன வேறுபாடு?
யுஎஸ்.பி. போர்ட்களைப் பற்றிக் குறிப்பிடுகையில் யு.எஸ்.பி.2 என்றும் யு.எஸ்.பி. 1 என்றும் குறிப்பிடப்படுகிறது. இந்த இரண்டிற்கும் இடையே என்ன வேறுபாடு? சாப்ட்வேர் புரோகிராம்களைப் போல பதிப்பில் வேறுபாடா? அல்லது இவை இரண்டும் வெவ்வேறானவையா? இப்போது யு.எஸ்.பி. போர்ட் 1 என்பதே கிடையாது. பழைய கம்ப்யூட்டர்களில் தான் இது காணப்படுகிறது. இருப்பினும் வேறுபாட்டினைத் தெரிந்து கொள்ளலாம்.
அடிப்படை வேறுபாடு இவை இரண்டும் இயங்கும் வேகத்தில் தான் உள்ளது. யு.எஸ்.பி. 2 என்பது யு.எஸ்.பி.1 மற்றும் 1.1 போர்ட்களைக் காட்டிலும் வேகமானவை. யு.எஸ்.பி. 2 விநாடிக்கு 480 மெகா பிட்ஸ் வேகத்தில் டேட்டாவினைப் பரிமாறுகிறது. ஆனால் யு.எஸ்.பி. 1 மற்றும் 1.1. விநாடிக்கு 12 மெகா பிட்ஸ் வேகத்தில் தான் பரிமாறும். இரண்டிற்கும் இடையே தகவல்களைப் பரிமாறும் வேகத்தில் 400 மடங்கு வித்தியாசம் உள்ளது.
யு.எஸ்.பி. 1 வழி full speed என அழைக்கப்படுகிறது. யு.எஸ்.பி. 2 Hispeed என குறிக்கப்படுகிறது. சரி, இவை இரண்டும் எப்படி இணைந்து செயல்படுகின்றன. இந்த இரண்டுமே தன்னைக் காட்டிலும் குறைந்தோ அல்லது கூடுதலாக வேகத்தில் இயங்கும் டிரைவ்களுடன் செயல்படும்படி வடிவமைக்கப்பட்டுள்ளன. இவற்றை இணைத்தோ அல்லது மாற்றி மாற்றியோ பயன்படுத்துவதில் ஒன்றும் பிரச்னை வராது. உங்களுடைய கம்ப்யூட்டர் சிஸ்டம் சரியாக இயங்கும் வரை இந்த இரண்டையும் கலந்து பயன்படுத்தலாம்.
8 ஜிபி கொள்ளளவில் ஜெட்பிளாஷ் 110
ட்ரான்ஸென்ட் நிறுவனம் 8 ஜிபி அளவிலான ஜெட்பிளாஷ் 110 பென் டிரைவினை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. 64 து 21 து 10 என்ற அளவில் அமைந்துள்ள இதன் வடிவம் அனைத்து வகையிலும் பாதுகாப்பாக அமைந்துள்ளது. இதில் தனியாக மூடி என எதுவும் கிடையாது.
இணைக்கும் பகுதியை உள்ளிழுத்துக் கொள்ளலாம். நீட்டி வைத்து கொள்ளும் வகையில் லாக் தரப் பட்டுள்ளது. இதில் பலவகையான சாப்ட்வேர் புரோகிராம்கள் பல: வெப்சைட் ஆட்டோ லாக் இன், பெர்சனல் கம்ப்யூட்டர் லாக், யாரும் அறிந்து கொள்ள இயலாத வகையில் மொபைல் பேவரைட்ஸ், ரகசியமாக ஸிப் என்கிரிப்ஷன், மொபைல் இ–மெயில், டேட்டா பேக் அப் மற்றும் ஆன்லைன் அப்டேட் என ஒரு பெர்சனல் கம்ப்யூட்டரில் தரப்படும் டேட்டா செக்யூரிட்டி அனைத்தும் தரப்பட்டுள்ளன.
விண்டோஸ் விஸ்டா, விண்டோஸ், எம்.இ., எக்ஸ்பி, மேக் மற்றும் லினக்ஸ் ஆகிய ஆப்பரேட்டிங் சிஸ்டங்களில் பயன் படுத்தலாம். இந்த 8 ஜிபி பிளாஷ் டிரைவின் விலை ரூ.6,000. மூன்று ஆண்டு கால வாரண்டியுடன் கிடைக்கிறது. இந்த டிரைவ் 512 எம்பி,1ஜிபி, 2 ஜிபி மற்றும் 4 ஜிபி அளவுகளில் கிடைக்கிறது.
அந்நியச் செலவாணி மையம்
வெளிநாடுகளுக்குச் செல்வது, அந்நாட்டு பணத்தில் சம்பாதிப்பது, வெளிநாட்டு கரன்சியை வீட்டில்வைத்திருப்பது எல்லாம் இப்போடு அனைத்து வீடுகளிலும் உள்ள ஒரு பழக்கமாக மாறி வருகிறது.
நகரமானாலும் கிராமமானாலும் பத்து வீடுகளில் ஒன்றில் யாராவது ஒருத்தர் வெளிநாடுகளில் வேலை பார்க்கிறார். வெளிநாடுகளுடனான வர்த்தகம் பெருகும்போதும் சுற்றுலாப் பயணிகள் வருகையினாலும் இங்கு வெளிநாட்டு கரன்சி பரிமாற்றம் ஏற்படுகிறது. இந்த வேகத்தில் போனால் மற்ற நாடுகளில் இருப்பது போல நம் ஊர் பெட்டிக் கடைகளில் கூட வெளிநாட்டுக் கரன்சிகளைக் கொடுத்து இந்தியப் பணமாக மாற்றும் காலம் வரும்.
நான் இங்கே சொல்ல வந்தது அண்மையில் நான் சென்ற வெளிநாடு குறித்து அல்ல; பல நாட்டு கரன்சிகளுக்கான மாற்று விகிதம் குறித்து அறிவிக்கும் ஓர் இணைய தளமாகும். Forex Flower என்ற பெயரில் இயங்கும் இந்த இணைய தளம் http://www.forexflower.com/ என்ற முகவரியில் இயங்குகிறது. வேகமாக இந்த தளத்தில் அன்றைய நிலவரப்படியான கரன்சி மாற்ற விகிதத்தின் அடிப்படையில் ஒரு நாட்டின் கரன்சிக்கான அடுத்த நாட்டு கரன்சி மதிப்பு எனத் தெரிந்து கொள்ளலாம். இந்த தளத்தில் சென்று அங்கு கிடைக்கும் விரியும் மெனு பெட்டியில் எந்த கரன்சிக்கு மாற்று வேண்டுமோ அதனைத் தேர்ந்தெடுக்கவும். அடுத்து எவ்வளவு என்று அமைக்கவும். தொடக்கத்தில் மெனுவில் 1 என இருக்கும். அடுத்து எந்த கரன்சியில் மதிப்பு வேண் டுமோ அதனைத் தேர்ந்தெடுக்கவும். அடுத்ததாக உள்ள அட்ணிதணt ஞணிது நீங்கள் விரும்பும் கரன்சியில் மதிப்பு காட்டப்படும். அவ்வப்போது உலக அளவில் கரன்சி விகிதங்கள் மாறும்போது இந்த தளத்திலும் மாற்றங்கள் ஏற்படுத்தப்படுகின்றன. எனவே அன்றாடம் இந்த தளம் காட்டும் மாற்று கரன்சி மதிப்பை சரியானதாக நீங்கள் எடுத்துக் கொண்டு கையாளலாம். இவை எத்தனை தசம ஸ்தானத்தில் வேண்டும் என்பதனையும் நீங்கள் அமைக்கலாம். இந்த தளத்தின் வலது பக்கத்தில் இந்த தளம் குறித்த செய்திகளைக் காணலாம். அத்துடன் உங்கள் கருத் துக்களை அமைக்கவும் சிறிய பெட்டி தரப்பட்டுள்ளது.உங்களிடம் வெளிநாட்டு கரன்சி இருக்கிறதோ இல்லையோ இந்த தளம் சென்று அது செயல் படுவதைப் பாருங்களேன்.
மைக்ரோசாப்ட் அடிபணிந்தது
விண்டோஸ் எக்ஸ் பி வாடிக்கையாளர்களின் கோரிக்கைக்கு மைக்ரோசாப்ட் அடிபணிந்தது. விஸ்டா வந்தபிறகு அதனை மக்களிடையே கொண்டு செல்ல பல முயற்சிகளை மைக்ரோசாப்ட் எடுத்து வந்தது. மற்ற விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டங்கள் மக்களிடையே பரவியதைப் போல விஸ்டா பரவவில்லை. அதற்குப் பல காரணங்கள் இருந்தன. குறிப்பாக அப்ளிகேஷன் சாப்ட்வேர்கள் விஸ்டாவுடன் இணைந்து இயங்காதது ஒரு காரணம்.
இதனால் மக்களைக் கட்டயாமாக விஸ்டா பயன்படுத்த வழி நடத்தும் வகையில் விண்டோஸ் எக்ஸ்பி சிஸ்டத்திற்கு இனிமேல் மைக்ரோ சாப்ட் நிறுவனம் ஆதரவு கொடுக்காது. அதில் பிரச்னைகள் இருந்தால் அதற்கான தொழில் நுட்ப அறிவுரைகளை வழங்காது என அறிவித்தது. ஆனால் உலகின் பல நாடுகளில் இருந்து இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
சில மாதங்கள் நீட்டிப்பு செய்து மைக்ரோசாப்ட் அறிவிப்பு வழங்கியது. இதனை மீண்டும் மக்கள் ஏற்றுக் கொள்ளாமல் உதவி வழங்கிடும் காலத்தினை இன்னும் நீட்டிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். இப்போது ஏப்ரல் 2014 வரை செக்யூரிட்டி பேட்ச் பைல்கள் மற்றும் எக்ஸ்பிக்கான அப்டேட் பைல்கள் வழங்கப்படும் என அறிவித்துள்ளது. ஆனால் எக்ஸ்பி தொகுப்பு விற்பனை சென்ற ஜூன் 30 உடன் மூடப்பட்டுவிட்டது. இருப்பினும் டெல், எச்பி, லெனோவா மற்றும் பிற முன்னணி நிறுவனங்கள் எக்ஸ்பி தொகுப்பினைத் தங்கள் கம்ப்யூட்டர்களில் பதிந்து தர முன்னதாகவே வாங்கி வைத்திருப்பதனால் அவை தீரும் வரை இந்த டீலர்களிடம் கிடைக்கும். இன்னொரு அறிவிப்பினையும் மைக்ரோசாப்ட் வெளியிட்டுள்ளது. விஸ்டா பெற்றவர்கள் மீண்டும் எக்ஸ்பிக்கு மாற வேண்டும் என்றால் அதன் வழியாகவே எக்ஸ்பிக்கு இறங்கிக் கொள்ளும் வழியையும் அறிவித்துள்ளது. விஸ்டாவிற்குப் பெற்ற லைசன்ஸ் இதற்கும் செல்லுபடியாகும். எனவே விஸ்டா வாங்கினால் அவர்கள் எக்ஸ்பி தொகுப்பினை எந்தவித கூடுதல் கட்டணம் இன்றி பயன்படுத்தலாம்.
எல்.ஜி., எலக்ட்ரானிக்ஸ்
இந்தியாவில் தன் தொழிற்சாலையின் உற்பத்தி யை பல மடங்கு பெருக்கிட எல்.ஜி. எலக்ட்ரானிக்ஸ் முடிவெடுத்துள்ளது.
இங்கிருந்து பெருமளவில் மொபைல் போன்களை பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்திடவும் திட்டம் கொண்டுள்ளது. அண்மையில் எல்.ஜி. சீக்ரெட் கே.எப்.750 போனை அறிமுகப்படுத்திய விழாவில் இந்த தகவல்கள் தரப்பட்டன. இத்துடன் எல்.ஜி. தயாரிக்கும் புளுடூத் மற்றும் ஹெட்செட் போன்ற மொபைல் துணை சாதனங்களின் உற்பத்தியும் உயர்த்தப்படவுள்ளன. எல்.ஜி. நிறுவனத்திற்கு சீனா, பிரேஸில் மற்றும் மெக்ஸிகோ நாடுகளில் உற்பத்தி தொழிற்சாலைகள் இயங்குகின்றன. இந்தியாவில் புனே அருகே இதன் தொழிற்சாலை இயங்குகிறது. இங்கிருந்து மத்திய கிழக்கு நாடுகள், ஆப்பிரிக்கா மற்றும் ஆசிய நாடுகளுக்கு போன்கள் ஏற்கனவே ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன. இனி ஐரோப்பா மற்றும் பிற மேற்கு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கான போன்கள் இங்கு தயாராகும்.
உலகின் மிகச் சிறிய ட்ரான்சிஸ்டர் வடிவமைப்பு
மிக மிகச் சிறிய ட்ரான்சிஸ்டர் ஒன்றை மான்செஸ்டர் பல்கலை கழக விஞ்ஞானிகள் வடிவமைத்துள்ளனர். ஒரு மாலிக்யூலைக் காட்டிலும் கொஞ்சம் பெரிய அளவில் இது அமைந்துள்ளது. இதன் மூலம் மிக அதிக வேகத்தில் செயல்படும் சூப்பர் பாஸ்ட் கம்ப்யூட்டர்களை வடிவமைக்கமுடியும். மிக மிக மெல்லிய கிராபீன் என்னும் பொருள் கொண்டு இந்த ட்ரான்சிஸ்டர் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் தடிமன் ஒரு அணுவின் அளவிற்கும் அகலம் நான்கு அணுவின் அளவிற்கும் உள்ளது. இந்த ட்ரான்சிஸ்டரே முதல் நானோ பகுதியாகும் எனவும்
அறிவிக்கப்பட்டுள்ளது. நான்கு ஆண்டுகளுக்கு முன் கிராபீன் கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பயன்பாடு இன்று முழுமையடைந்துள்ளது. ஒரு சிறிய கிராபீன் கிறிஸ்டலிலிருந்து இதனை உருவாக்கினோம் என்று ஆண் ட்ரூ கெய்ம் மற்றும் கோஸ்ட்யா நோவேசெலவ் அறிவித்துள்ளனர்.
இப்படியும் சிலர்
தொழில் நுட்ப வளர்ச்சியில் அமெரிக்க நாடும் அதன் மக்களும் மிகவும் முன்னேற்றம் அடைந்துள்ளனர் என்று அனைவரும் எண்ணிக் கொண்டிருக்கிறோம். உலகிற்கு கம்ப்யூட்டரையும் இன்டர்நெட்டையும் தந்து இன்று உலக அளவில் இத்துறையில் ஆட்சி செய்து கொண்டிருக்கும் மைக்ரோசாப்ட் மற்றும் பிற நிறுவனங்கள் அமெரிக்காவில் தான் தலைமையிடத்தைக் கொண்டுள்ளன. ஆனால் அண்மையில் எடுக்கப்பட்ட ஒரு கணக்கெடுப்பில் 20 சதவிகித அமெரிக்கர்கள் இமெயில் என்பதைபார்த்ததே இல்லை என்று கூறியுள்ளனர். அதே அளவிலான எண்ணிக்கையிலான மக்கள் எந்த தகவலுக்கும் இன்டர்நெட்டைப் பயன்படுத்தியதே இல்லை என்றும் தெரிவித்துள்ளனர்.
வேர்டில் பட குழப்பம் ரீசெட் செய்திடலாமா?
வேர்ட் டாகுமெண்ட்டில் படத்தை ஒட்டுவது குறித்த பல தகவல்கள் முந்தைய இதழ்களில் வெளியாகியுள்ளன. இருப்பினும் பல வாசகர்கள் இன்னும் டெக்ஸ்ட்டுடன் இணைந்து படம் அமைப்பதில் தடுமாறுகின்றனர். படத்தை நன்றாக அமைத்த பின்னரும் இன்னும் சரியாக அமைக்கலாமே என்று முயற்சிக்கின்றனர். நீட்டிப் பார்க்கின்றனர்; குறுக்கிப் பார்க்கின்றனர். ஒன்றும் சரியாக அமையவில்லை. வந்த மாதிரியே இருந்தால் தேவலாம் என்று பார்க்கிறார்கள்.
கண்ட்ரோல் + இஸட் அழுத்தலாம் என்றால் எத்தனை முறை அழுத்தி பின்னால் செல்வது என்ற தயக்கம். இருந்த நல்ல நிலையும் போய் சரியாக படம் அமர்ந்திருக்காது. எனவே நாங்கள் அமைத்து பார்த்துவிட்டோம். ஆனால் சரியாக வரவில்லை. எனவே மீண்டும் படத்தை பழைய நிலைக்குக் கொண்டு வர என்ன செய்திட வேண்டும் என கடிதம் எழுதுகின்றனர். இவர்களுக்கான குறிப்புகளை இங்கு தருகிறேன்.
நீங்கள் வேர்ட் 2007 தொகுப்பு பயன்படுத்துபவராக இருந்தால் Picture Tools, Format ஆகிய மெனுக்களுக்குச் செல்லவும். இவை உள்ள ரிப்பன் நீங்கள் படத்தை அல்லது கிளிப் ஆர்ட்டை செலக்ட் செய்தவுடன் தோன்றும். இடது ஓரத்தில் Adjust section என்ற பிரிவு இருப்பதனைப் பார்க்கலாம்.
அங்குதான் Reset Picture button என்ற பட்டன் இருக்கிறது. அதில் கிளிக் செய்தால் படம் பழைய ஒரிஜினல் நிலைக்குத் திரும்பிவிடும். நீங்கள் வேர்ட் 2003 அல்லது அதற்கும் முந்தைய பதிப்பைப் பயன்படுத்துபவராக இருந்தால் படத்தை தேர்ந்தெடுத்தவுடன் ஒரு Picture toolbar தென்படும். அப்படி ஒரு பிக்சர் டூல் பார் கிடைக்கவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம்.
படத்தின் மீது ரைட் கிளிக் செய்துவிடவும். பின் கிடைக்கும் மெனுவில் Show Picture Toolbar என்பதில் கிளிக் செய்தால் Picture Toolbar கிடைக்கும். அல்லது View மெனு சென்று அதில் Toolbars என்னும் துணை மெனு பெற்று அதில் கடிஞிtதணூஞு என்ற இடத்தில் கிளிக் செய்திடவும். எப்படி கிடைத்தாலும் டூல்பார் திறக்கப்பட்டுவிட்டால் மீண்டும் படத்தை பழையபடி அமைத்திட ஒரே ஒரு பட்டன் தான் பாக்கி. அது வலது கோடியில் Reset Picture button என்ற பெயரில் இருக்கும். அதில் கிளிக் செய்துவிட்டால் முதல் முதலில் படம் எப்படி இருந்ததோ அந்த தோற்றத்தில் இருக்கும்
No comments:
Post a Comment