யோகாவின் நன்மைகள்
யோகா நீண்ட ஆயுளையும், உடல் மற்றும் மன ஆரோக்கியத்தையும் தருகிறது. எவ்வாறென்றால்
• உடலின் மூட்டுக்கள், முக்கியமாக முதுகுத் தண்டு. இவற்றை யோகா ஆரோக்கியமாக வைக்கிறது. யோகாசனங்கள் உடலின் முக்கிய பாகமான, சுமை தாங்கியான முதுகு தண்டை சீராக்கி, பயிற்சி தருகின்றன. இதனால் முதுகுத் தண்டு காக்கும் நரம்புகளும் வலிமை பெறுகின்றன.
• பெரும்பாலான ஆசனங்கள் முதுகுத்தண்டை முன்னும், பின்னும், பக்கவாட்டில் வளைத்தும் பயிற்சி தருகின்றன.
• அடுத்த முக்கியமான உடல் அவயம் நாளமில்லா சுரப்பிகள். இவைகள் தான் உடலில் சுரக்கும் ஹார்மோன்களை ‘கன்ட்ரோல்’ செய்கின்றன. இவைகளின் பட்டியல்
சுரப்பி செய்யும் வேலை சமநிலையில் வைக்கும் ஆசனங்கள்
பிட்யூடரி உடல் வளர்ச்சி, பாலியல் ஹார்மோன்கள் உற்பத்தி. சிரசானம், பாதஹஸ்தாசனம், விபரீத கரணி.
தைராய்டு வளர்சிதை மாற்றம் , உடல் வளர்ச்சி சர்வங்காசனம், மச்சாசனம்.
அட்ரீனலின் ஸ்ட்ரெஸ் சமயங்களில் அதிகம் சுரக்கும். உடலும், மூளையும் களைப்படையாமல் உழைக்கச் செய்யும். ஹலாசனம், சூர்ய நமஸ்காரம், பாத ஹஸ்தாசனம், மயூராசனம், தநூராசனம், சக்ராசனம்.
கணையம் உடல் வளர்ச்சி, வளர்சிதை மாற்றம் (முக்கியமாக இன்சுலீன் சுரப்பு) ஹலாசனம், தநூராசனம், மயூராசனம், புஜங்காசனம், வக்ராசனம்.
பாலியல் சுரப்பிகள் ஆண், பெண்களின் ஹார்மோன்கள் உற்பத்தி சிரசானம்,சர்வங்காசனம், விபரீதகரணி, பத்ராசனம்.
யோகாசனங்கள் ரத்த ஒட்டத்தை அதிகரித்து நாளமில்லா சுரப்பிகளுக்கு அதிக ரத்தம் கிடைக்கச் செய்கின்றன. அதிக ரத்தம் என்றால் அதிக ஊட்டச்சத்து, அதிக ஆக்சிஜன் – இவை நாளமில்லா சுரப்பிகளுக்கு கிடைப்பதால் அவை ஆரோக்கியமாக இருப்பதில் அதிசயமென்ன? இது யோகாவின் சிறப்பு அம்சம்.
• தசைப்பகுதிகள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படுகின்றன. தசைகள் வலிமை பெற்று விளங்கும்.
• உடலின் ஒவ்வொரு நிலையையும் சுத்திகரித்து போஷாக்கு அளிக்கும்.
• வீரியம், வலிமை, ஒருமுனைப்படுவதில் அபிவிருத்தி ஏற்படும்.
• உடல் எடையை குறைக்கும்.
• தினசரி, உடலுழைப்பு, வேலைகளால் ஏற்படும் களைப்பை யோகாசனங்கள் போக்கும்.
யோகாவின் சிறப்பு
• அது ஒரே பயிற்சியாக உடல், உள்ளம், ஆத்மா மற்றும் சுவாசம் ஆகியவற்றை இணைத்து பயிற்சி தருகிறது.
• யோகா இயற்கையோடு இணைந்தது. தாவரங்கள், விலங்குகளைப் போல பல யோகாசனங்கள் அமைக்கப்பட்டுள்ளன. உதராணம் – விருக்ஸாஸனம், புஜங்காசனம், மயூராசனம் முதலியன.
• மத்திய நரம்பு மண்டலத்தை நேரடியாக யோகா ஊக்குவிக்கிறது. உதராணமாக ஆஸ்த்துமாவிற்காக செய்யப்படும் ஆசனங்கள் ‘சிம்பதெடிக்’ மற்றும் ‘பாராசிம்பதெடிக்’ எனும் நரம்புகளை ‘நார்மல்’ நிலைக்கு கொண்டு வருகின்றன. இதனால் நுரையீரல் சுவாச நாளங்கள் நன்கு திறக்கின்றன. மூச்சு வருவது சுலபமாகிறது.
• யோகாப்யாசங்கள் (தியானம், பிராணாயாமா) நேரடியாக மனதின் டென்சனை போக்குகின்றன. மனதை, உடலை, ‘ரிலாக்ஸ்’ செய்வதற்கென்றே, பிரத்யேக யோகாசனங்கள் – சவாசனம், சுகாசனம், யோக நித்ரா போன்றவை உருவாக்கப்பட்டுள்ளன. மனச்சுமையை இறக்கி வைக்க யோகாசனங்கள் உதவுகின்றன.
• முன்போ சொன்னபடி, இரத்த ஒட்டத்தின் வேகத்தை யோகா அதிகரிக்கிறது. மூளை, இதயம் போன்ற உடலுப்புகள் நல்ல ரத்தத்தால் நிரப்பப்படுகின்றன. இதனால் மனம் மகிழ்ச்சியுடனும் உடல் ஆரோக்கியத்துடனும் இருக்கும். தன்னம்பிக்கை பெருகும்.
• ஆயுர்வேதத்தின் படி உடலை விட்டு வெளியேறாத கழிவுப்பொருட்களால் நோய்கள் உருவாகின்றன. சத்கிரியை, பிராணாயம் கூடிய யோக தியானம், ஆசனங்கள் இவற்றால் கழிவுப்பொருட்கள் சரியாக, சீராக வெளியேறும்.
• யோகா மனஅழுத்தத்தை குறைக்கிறது. இளமையை காக்கிறது. உடல் இயக்கங்களை நல்ல நிலையில் வைக்கிறது. திடகாத்திரமான உடலை தருகிறது. அது மட்டுமல்ல உங்களை நல்லவராக, வல்லவராக மற்றும் தொடர்ச்சியான மனஅழுத்தம் பல மனநோய்களை ஏற்படுத்தும்.
No comments:
Post a Comment