Saturday 5 May 2012

ஆன்மிக சிந்தனைகள் »சின்மயானந்தர் Page 1


உலகம் நன்மை பெறட்டும்

* உயர்ந்த லட்சியத்திற்காக நம்மை அர்ப்பணித்துக் கொண்டால் உள்ளத்தில் ஆற்றல் தூண்டப்படுகிறது. இதன் மூலம் லட்சியத்தை நோக்கி விரைந்து செல்ல முடியும்.
* கோபம், ஆசை, பொறாமை போன்ற தீய பண்புகளால் நம் ஆற்றல் வீணாகிவிடும். முயற்சிகளில் முழுவீச்சுடன் ஈடுபட முடியாமல் தடுமாற்றம் ஏற்படும். 
* கடவுள் கொடுத்த உடலும், உள்ளமும் நமக்கான சாதனங்கள். அவற்றை வைத்துக் கொண்டு நம்மை நாமே உருவாக்கிக் கொள்ள வேண்டும். அதற்கான சுதந்திரமும் நம்மிடம் தான் இருக்கிறது.
* தனக்கென எதையும் வைத்துக் கொள்ளாமல், உலக நன்மையைக் குறிக்கோளாகக் கொண்டு வாழ்பவர்களே உயர்ந்தவர்கள். அவர்களின் பின்னால் செல்ல உலகமே காத்துக் கொண்டிருக்கிறது.
* பிறருக்காக வாழவேண்டும் என்ற பொது நல உணர்வு கொண்டவர்கள், சேவை செய்வதையே நோக்கமாகக் கொண்டிருப்பர். 
* எண்ணத்தில் தூய்மையை வளர்த்துக் கொண்டால், ஒவ்வொரு பொருளிலும் புனிதம் நிறைந்திருப்பதை உணர முடியும். 
சின்மயானந்தர்


விசாலமான மனம் வேண்டும்

* பிரார்த்தனை என்பது நமக்குத் தேவையான உலக நன்மைகளைத் தருவது. அதனால் அதனைக் கற்றுக் கொள்ளுங்கள்.
* உயர்ந்த லட்சியங்களுக்காக நாம் நம்மை அர்ப்பணித்துக் கொள்ளும்போது, நமது உள்ளத்தில் அரியதொரு சக்தி தூண்டி விடப்படுகிறது.
* இறைவனிடம் நாம் கொள்ளும் பக்தியும், அதை முறைப்படி செலுத்துவதற்காக நாம் மேற்கொள்ளும் விரதங்களும் தான் நம்மைத் தூய்மைப்படுத்துகின்றன.
* பக்தி என்றாலே சந்நியாசியாகிவிட வேண்டும் என்று நினைக்க வேண்டாம். உலகை விசாலமான மனதுடன் பார்த்தாலே போதும்.
* மந்திரங்களின் மூலம் இயற்கையைப் புரிந்து கொண்டு, அதன்மூலம் நல்ல பலன்களை அடையும் பலத்தை மனத்தில் வளர்த்துக் கொள்ள வேண்டும்.
* ஒரு செயலில் மனதார ஈடுபடுங்கள். அவ்வாறான ஈடுபாடு இல்லையென்றால், சலிப்பும் சோர்வுமே உண்டாகும்.
* உங்கள் சிந்தனையை உடலுடன் இணைத்து உழைக்க வைத்துவிட்டால், எந்தச் செயலிலும் சுறுசுறுப்பும் திருப்தியுமே ஏற்பட்டுவிடும்.
- சின்மயானந்தர் 


தண்ணீரை வழிபடுங்கள்

* உணவுக்குரிய தானியங்களையும், பழங்களையும், காய்கறிகளையும் தர உதவும் மண்ணும், தண்ணீரும் வழிபாட்டுக்கு உரியதாகிறது
* தவறாத பிரார்த்தனையும், நம்பிக்கையான பக்தியும், கபடமில்லாத அன்புமயமான உள்ளமும் தான், வாழ்வில் அனைத்தையும் சாதிக்கச் செய்கிறது.
* பாலைக் கடைந்து வெண்ணெய் எடுப்பது போல, நம்மிடம் கண்ணாமூச்சி விளையாடும் கடவுளை, அன்பின் மூலமாகப் பிடிக்க வேண்டும்.
* கடவுளிடம் நாம் கொள்ளும் பக்தியும், அதை முறைப்படி செலுத்துவதற்காக நாம் மேற்கொள்ளும் விரதங்களும் நம்மைத் தூய்மைப்படுத்துகின்றன.
* கடவுள் நமக்கு உடலையும், உள்ளத்தையும் கொடுத்தார். ஆனால், அவற்றை வைத்துக் கொண்டு நம்மை நாமே புதிதாக எப்படி உருவாக்கிக் கொள்கிறோம் என்பது நம் கையில் தான் உள்ளது.
* எப்படியாவது மாற வேண்டும் என்று கூறிக் கொண்டிருந்தால் போதாது. நமக்குள் சுயசோதனை செய்து, அதற்கு ஏற்ப ஒவ்வொரு எண்ணத்தையும், செயலையும் மாற்றி வந்தால் புதிய வாழ்வு மலரும்.
- சின்மயானந்தர் 

கடமையை இன்றே செய்யுங்கள்

* சுத்தமான, பயமற்ற, கபடமற்ற, குற்றமற்ற, பகைமையற்ற எண்ணங்களை மனதில் கொள்பவன் தெய்வத்தன்மையுடன் விளங்குவான்.
* உலகத்தார் வியக்கும் வண்ணம் ஒருவனுக்கு எதிர்பார்க்க முடியாத பயன் கிடைக்க தெய்வபக்தி அவசியம். 
* எந்த செயலையும் நாளை, நாளை என்று கடத்தாமல், இன்றே செய்தால் அது நன்றாக முடியும்.
* உண்மையான பக்தியிருந்தால் தைரியம் உண்டாகும். தைரியம் இருந்தால் உண்மையான தெய்வ பக்தி உண்டாகும். தைரியத்தால் ஒருவன் இந்த பிறவியிலேயே தெய்வநிலையை பெறுவான்.
* கைத்தொழிலால் செல்வம் விளைகிறது. அறிவுத் தொழிலால் அது சேகரிக்கப்படுகிறது, 
* நாக்கைக் கட்டுதல், பிரமச்சரியம் இவற்றை பணக்காரர்கள் கடைப்பிடித்தால் நன்மையுண்டாகும். ஏழைகளுக்கு இந்த உபதேசம் அவசியமில்லை, காரணம், நாக்கு அவர்களுக்கு ஏற்கனவே கட்டித்தான் வைக்கப்பட்டுள்ளது.
* குழந்தை தாயை நம்புவது போலவும், மனைவி கணவனை நம்புவது போலவும், பார்ப்பதைக் கண் நம்புவது போலவும் தெய்வத்தை நம்ப வேண்டும்.
-பாரதியார்

மனதில் குடியிருக்கும் இறைவன்

* உள்ளம் ஒரு நிறைவைக் காண விரும்பும் போது உடலின் துன்பத்தை நாம் பொருட்படுத்துவதில்லை. இதுவே வாழ்க்கையில் உயர்வு பெற நாம் கடைப்பிடிக்க வேண்டிய தத்துவம்.
* தினமும் தியானம் செய்யும் போது மனம் பக்குவம் அடைகிறது. கஷ்டம் வரும்போது அதைச் சமாளிக்கும் நிதானம் கிடைக்கிறது. 
* உண்மையான பக்தி கொண்டவன், அனைத்து உயிர்களிடமும், அனைத்துப் பொருள்களிடமும் கடவுளைக் காண்கிறான்.
* இறைவன் நம் மனமாகிய வீட்டில் இருந்து நம்மை இயக்குகிறான். அவன் நமக்குத் தெரியாவிட்டாலும், அவனுடைய அருள் நம்முடைய வாழ்க்கையில் பல்வேறு பலன்களைத் தருகிறது.
* எங்கு சென்றாலும் மகிழ்ச்சியைத் தருபவர்கள் பண்புள்ளவர்கள். பண்பில்லாதவர்களால் அதைத் தர முடியாது.
* சாதாரண மனிதனின் சமூகத் தொண்டு கண்ணுக்குப் பெரிதாகப்படுகிறது. ஆனால், அதன் எல்லை மிகக் குறுகியது. ஞானிகள் உலக நன்மைக்காகச் செய்யும் பிரார்த்தனையின் வலிமை கண்ணுக்குப் புலப்படாதது. ஆனால் அதன் நற்பலன் எல்லை கடந்தது.
- சின்மயானந்தர்

வெற்றி தோல்வி சகஜம்

* நாம் செய்யும் பணியில் வித்தியாசம் பாராட்ட வேண்டியதில்லை. எந்தப் பணியையும் கடமை உணர்ச்சியுடன் செய்ய வேண்டியது தான் முக்கியம். அதுவே இறைவனுக்கு உகந்ததாகும். 
* உலகத்தின் புகழ்பெற்ற ஆராய்ச்சியாளர்கள், விஞ்ஞானிகள், தத்துவமேதைகள், பக்திமான்கள் ஆகியோரின் வாழ்க்கை வரலாறுகள் நமக்கு தியாகஉணர்வின் மேன்மையை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளன.
* வாழ்வில் மக்கள் பணியைச் செய்ய ஆளாக்கி விட்டவன் இறைவன் என்பதைப் புரிந்து கொண்டவர்கள் ஒருபோதும் "நான் செய்தேன் ' என்று வீண்பெருமையாகவோ, அகங்காரமோ இல்லாதவர்களாய் தங்கள் பணிகளை கடமையுணர்வோடு செய்வார்கள்.
* தியாகசீலர்கள் வெற்றி பெற்றபோதும் இறுமாப்பு கொள்ளமாட்டார்கள். தோல்வி ஏற்பட்டாலும், மனம் தளர மாட்டார்கள். எப்போதும் மனதில் அமைதியும் சாந்தமும் இருந்தால் முகத்தில் தெய்வீகஒளியைக் காணமுடியும். 
* நல்லொழுக்கம், கொள்கையில் பிடிப்பு, மனப்பூர்வமான ஈடுபாடு, அர்ப்பணிப்பு உணர்வு இருக்குமானால், செய்யும் செயல்கள் யாவும் பூரணமானதாக அமையும். அதனால் இம்மண்ணுலகே பயன் பெறும். 
-சின்மயானந்தர்

அன்போடு கொடுங்கள்

* எங்கு சென்றாலும் மகிழ்ச்சியைத் தருபவர்களே பண்பில் சிறந்தவர்கள். பண்பில்லாதவர்களோ ஓர் இடத்தை விட்டுச் சென்றபிறகே மற்றவர்கள் மகிழ்ச்சி அடைவார்கள்.
* பார்க்க முடியாத கடவுளைக் காணும் வழி காணும் காட்சி எல்லாம் கடவுளின் வடிவாகக் காண்பதே ஆகும். இறைவன் நம் கண்ணுக்குத் தெரியாவிட்டாலும் அவனுடைய அருளே நம்மை வழிநடத்துகிறது.
* தினமும் நாம் செய்ய வேண்டிய கடமை தியானம் ஆகும். ஆபத்து வந்தவுடன் கூச்சல் போட்டு ஆண்டவனை அழைப்பது தியானம் அல்ல. 
* உள்ளம் ஒரு நிறைவைக் காண விரும்பும்போது உடலின் துன்பத்தை நாம் பொருட்படுத்துவதில்லை. இதுவே வாழ்க்கையில் உயர்வு பெற நாம் கடைப்பிடிக்க வேண்டிய தத்துவம். 
* நாளும் உண்மையாக வழிபாடு செய்தால் மனம் பக்குவம் அடையும். வாழ்க்கையும் சீர்படும். வாழ்வில் துன்பம் வந்தாலும் அதைச் சமாளிக்கும் நிதானத்தையும் ஆண்டவன் அருளால் உண்டாகும்.
* எளிய காணிக்கையையும் ஆண்டவன் மிக உயர்வாக ஏற்றுக்கொள்கிறார். எப்போது? அன்பு ததும்பும் உள்ளத்தோடு எதைக்கொடுத்தாலும் ஆண்டவன் அதை உவப்புடன் ஏற்று மகிழ்கிறார். 
சின்மயானந்தர்

மகிழ்ச்சியைத் தருபவர்கள் யார்?

* எங்கு சென்றாலும் மகிழ்ச்சியைத் தருபவர்கள் பண்புள்ளவர்கள். பண்பில்லாதவர்கள் ஓர் இடத்தை விட்டுச் சென்ற பிறகே மற்றவர்களுக்கு மகிழ்ச்சியைத் தருவார்கள். 
* இறைவன் நம்முடைய மனமாகிய வீட்டில் இருந்து நம்மை இயக்குகிறான். அவன் நமக்குத் தெரியாவிட்டாலும் அவனுடைய அருள் நம்முடைய வாழ்க்கையில் நற்பலன்களை வழங்கிக் கொண்டிருக்கிறது.
* தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டது வேதம். இப்படி ஒரு பின்னணியை ஏற்படுத்தி நமக்கு எளிமையாகக் கடவுள் தத்துவத்தைப் புரிய வைப்பவை புராணங்கள்.
* உண்மையான கடவுள் பக்தி கொண்டவன். அவனால் பார்க்க முடியாத கடவுளை, அவன் பார்க்கக் கூடிய எல்லா உயிர்களிடமும், எல்லாப் பொருள்களிடமும் உணர்கிறான். 
* தினமும் நாம் செய்ய வேண்டிய கடமை தியானம். ஆபத்து வந்ததும் கூச்சல் போட்டு ஆண்டவனை அழைப்பது தியானம் அல்ல. 
* கடவுளின் பேரால் நாம் இருக்கும் விரதங்கள் நம்மைத் தூய்மைப்படுத்துகின்றன. அந்தத் தூய்மையை அனுபவிக்கும்போது, கண்விழிப்பதோ பட்டினி கிடப்பதோ நமக்கு ஒரு சிரமமாகவே தோன்றாது. 
சின்மயானந்தர்

புராணக்கதை ரகசியம்
நவம்பர் 15,2009,
13:46  IST
"புராணக்கதைகள் எதற்கு? நேரடியாகப் புராணம் கூறும் தத்துவத்தை சொன்னால் என்ன?' என்று நமக்கு சந்தேகம் வரலாம். அப்படி தத்துவங்களை சொன்னால் நம்மால் ஜீரணிக்க முடியாது. அம்மா சப்பாத்தி செய்ய மாவு பிசைகிறாள். குழந்தை அருகில் இருந்து பார்க்கிறது. மாவுடன் தண்ணீர் சேர்த்து பிசைந்து, வட்டமாகத் தேய்க்கிறாள். பின் அடுப்பில் ஏற்றி சூடாக் கினால் பதமான ரொட்டி கிடைத்து விடுகிறது. குழந்தை தனது அம்மாவிடம், ""அம்மா! எதற்காக இவ்வளவு சிரமப்படுகிறாய்? என் வயிற்றில் போக வேண்டியது இந்த மாவு தானே! ரொட்டிக்கு மூலம் இந்த மாவுதானே! பேசாமல் மாவைச் சாப்பிட்டால் போதாதா? காரியம் முடிந்து விடுமே! என்று கேட்டான்.
அம்மா குழந்தையிடம்,""கண்ணா! மாவைச் சாப்பிட்டால் உனக்கு ஜீரணம் ஆகாது!'' என்பாள். அதுமட்டுமல்ல. சப்பாத்திக்கான குருமாவும் வைத்து கதை சொல்லி, உணவைச் சாப்பிடச் செய்வாள். 
இதைத்தான் நம் பெரியவர்களும் செய்திருக்கிறார்கள். பெரிய தத்துவங்களை எளிதாக்கி நாம் ஜீரணிக்கும் பதத்தில் சுவையாகவும், விளையாட்டுப் போக்கில் நம்முள் செலுத்த வேண்டும் என்ற தாயுணர்வுடன் புராணக்கதைகளை நமக்குத் தந்திருக்கிறார்கள்.
-சின்மயானந்தர்

No comments:

Post a Comment