Showing posts with label மகராசனம். Show all posts
Showing posts with label மகராசனம். Show all posts

Saturday, 3 March 2012

மகராசனம்


மகராசனம்

Post image for மகராசனம்
மகரம் என்றால் முதலை. முதலை படுத்திருப்பதைப் போல் குப்புறப்படுத்து செய்ய வேண்டிய ஆசனம்.
செய்முறை
1. தரை விரிப்பின் மேல் குப்புறப்படுத்து கால்களை ஒன்று சேர்த்து வைத்துக் கொள்ளவும். நெற்றி (முகம்) தரையை தொட்டுக் கொண்டிருக்க வேண்டும்.
2. கைகளை தலைக்கு மேல் நீட்டி தரையை தொட்டுக் கொண்டிருக்க வேண்டும். கால்களை நன்கு நீட்டிக் கொள்ளவும்.
3. மூச்சை உள்ளிழுத்து கைகளையும், கால்களையும் தரையிலிருந்து தூக்கவும். அவை நீட்டிக் கொண்டே இருக்க வேண்டும். வயிற்றுப்பகுதியே உடலின் எடையை தாங்கும்.
4. இந்த கைகள், கால்கள் தூக்கிய நிலையில் சாதாரணமாக மூச்சுவிட்டு சில நொடிகள் இருக்கவும்.
5. மூச்சை நிதானமாக வெளியிட்டு கை, கால்களை தரைக்கு இறக்கவும்.
பலன்கள்
1. சர்க்கரை நோய் (ஞிவீணீதீமீtமீs) க்கு ஏற்ற ஆசனம்.
2. சுரப்பிகள் சரிவர இயங்கும்.
3. கால், வயிறு, இடுப்பு போன்றவை பலம் பெறும். ஊளைச்சதை குறையும்.
4. மலச்சிக்கல், வயிற்று வலி தீரும்.
5. உடல் முழுவதும் இரத்த ஒட்டம் சீராக அமையும்.
6. பெண்களின் மாதவிடாய் கோளாறுகள் நீங்கும்.
7. சுவாசப் பிரச்சனைகள் தீரும்.