Tuesday 3 April 2012

திருட்டு சாப்ட்வேர்: களத்தில் இறங்குகிறது மைக்ரோசாப்ட்--ஸ்ட்ராங் பாஸ்வேர்ட் எப்படி இருக்க வேண்டும்?--ஜிமெயில் காண தனி கீ போர்டு--விண்டோஸ் வேகம் பெற இனியவை இருபது--விண்டோஸ் 7 ஷார்ட் கட் கீகள்--பிராந்திய மொழிகளில் மைக்ரோசாப்ட்--முதல் ஆப்டிகல் ட்ராக்பால் கீ போர்ட்


திருட்டு சாப்ட்வேர்: களத்தில் இறங்குகிறது மைக்ரோசாப்ட்


கம்ப்யூட்டர் பயன்பாடு அதிகரிக்கும் வேளையில், திருட்டு நகல் சாப்ட்வேர் வரத்தும் பெருகி வருகிறது. இதனைத் தடுக்கும் வழிகளில் மைக்ரோசாப்ட் இந்தியா களத்தில் இறங்குகிறது. ஏற்கனவே தன் விண்டோஸ் மற்றும் ஆபீஸ் தொகுப்புகளைத் தானாகவே சோதனை செய்து, அவை ஒரிஜினல் இல்லை என்றால் உடனே ஒரிஜினல் சாப்ட்வேர் தொகுப்புகளை வாங்கச் சொல்லி அறிவுறுத்தி வந்தது. அத்தகைய சாப்ட்வேர் தொகுப்பு களுக்கு உதவியை நிறுத்தியது. தற்போது வாடிக்கையாளர்களையும் இணைத்தே இந்த தடுப்பு நடவடிக்கையில் இறங்கி உள்ளது. சென்ற டிசம்பர் 3 அன்று நுகர்வோர் விழிப்புணர்வு தினம் உலகெங்கும் கொண்டாடப்படுகையில், இந்த நடவடிக்கை யினை மைக்ரோசாப்ட் எடுத்துள்ளது.
தங்களை அறியாமலேயே, தாங்கள் செலுத்திய பணத்திற்கு முறையான லைசன்ஸ் இன்றி சாப்ட்வேர் தொகுப்புகளைக் கம்ப்யூட்டர்களுடன் பலர் பெறுகின்றனர். இதனால் மால்வேர் எனப்படும் தீங்கிழைக் கும் சாப்ட்வேர்கள் இந்த கம்ப்யூட்டர்களில் பரவி இயங்கத் தொடங்குகின்றன. வாடிக்கையாளர்கள் இதனால் தொல்லைக்கு உள்ளாகின்றனர். தீங்கிழைக்கும் இந்த புரோகிராம்களால், அவர்களின் பெர்சனல் தகவல்கள் திருடப்பட்டுப் பிறரால் பயன்படுத்தப்படும் நிலை உருவாகிறது. எனவே இது போன்ற திருட்டு நகல் சாப்ட்வேர்கள் தங்கள் கம்ப்யூட்டருடன் உள்ளது எனத் தெரியவந்தால், அந்த வாடிக்கையாளர்கள் www.microsoft.com/piracy என்ற இணைய தளத்தில் தங்கள் புகார்களைப் பதியலாம். அல்லது piracy@microsoft.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பலாம். அல்லது அந்த தளத்தில் தரப்பட்டிருக்கும் தொலைபேசி எண்களைத் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.
இதனை எப்படித் தெரிவிப்பது, எந்த விபரங்களைத் தர வேண்டும், போலி திருட்டு நகல் சாப்ட்வேர் எப்படி இருக்கும், என்பது போன்ற தகவல்களை அறிய விரும்பினால்http://www.micq�osob�t.com/howtotell என்ற முகவரியில் அவற்றைப் பெறலாம்.
சரி, நல்ல, உண்மையான சாப்ட்வேர் தொகுப்புகளை எங்கு வாங்குவது? என்ற கேள்வி எழுகிறதா? http://www.buyoriginalms.com என்ற இணைய தளத்திலிருந்து பெறலாம்.
மும்பை, புதுடில்லி மற்றும் லக்னோ நகரங்களில், காவல்துறை உதவியுடன், திருட்டு நகல் சாப்ட்வேர் சிடிக்களைப் பெரிய அளவில் கைப்பற்றி, விற்பனை செய்தவர்களையும், சிடிக்களைத் தயாரித்தவர்களையும் நீதிமன்றம் மூலமாக மைக்ரோசாப்ட் தண்டனை வாங்கித் தந்துள்ளது. இந்த திட்டத்தினை மைக்ரோசாப்ட் அறிவித்த பின்னர், ஏறத்தாழ ஒரு லட்சத்து 50 ஆயிரம் புகார்கள் மைக்ரோசாப்ட் நிறுவன தளத்தில் பதிவானதாக இந்த பிரிவின் துணைத்தலைவர் அறிவித்துள்ளார். சென்ற ஆண்டில் மட்டும் இந்தியாவில் போலி மென்பொருட்களால் இந்திய அரசுக்கு ரூ.12,000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. போலி சாப்ட்வேர் தயாரிப்பினைத் தடுத்தால், கூடுதலாக 44 ஆயிரம் புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும் என்றும், அதனால் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 130 கோடி டாலர் அளவிற்கு உயரும் என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எனவே அரசும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் முயற்சிக்கு ஆதரவும் ஒத்துழைப்பும் தந்து வருகிறது.

ஸ்ட்ராங் பாஸ்வேர்ட் எப்படி இருக்க வேண்டும்?


வீட்டுக்கு சாவி கூட இப்படி அப்படி இருக்கலாம்? வீதி முனை சாவி மெக்கானிக்கை அழைத்தால், அச்சாக இன்னொரு சாவி தந்திடுவார். ஆனால் நம் பாஸ்வேர்ட் சரியாக இல்லாமல், அடுத்தவர் எளிதாக அறிந்து கொள்ளும் நிலையில் இருந்தால், நம் நிலை மிக மோசமாக மாறிவிடும். அதனால் தான் கம்ப்யூட்டர் பாதுகாப்பு குறித்து பேசுபவர்களெல்லாம், வலிமையான பாஸ்வேர்ட் அமைக்க வேண்டும் என எச்சரிக்கை விடுகிறார்கள். மிக ஸ்ட்ராங்கான பாஸ்வேர்ட் அமைக்கும் சில வழிகளை இங்கு காணலாம்.
1.தங்கள் நிறுவனத்திற்கு மிகக் கட்டுக் கோப்பான தகவல் தொழில் நுட்ப கட்டமைப்பை கம்ப்யூட்டரில் அமைப்பவர்கள், இவற்றிற்கான பாஸ்வேர்ட்கள் அமைக்க, அதற்கென்று பாஸ்வேர்ட் அமைக்கும் புரோகிராம்களை நிறுவிக் கொள்ளலாம். இவை ரேண்டமைஸ்டு பாஸ்வேர்ட் என்று சொல்லப்படும், யாரும் கணிக்க இயலாத பாஸ்வேர்ட்களை அமைத்து இயக்குகின்றன. மேலும் குறிப்பிட்ட கால இடைவெளியில் அவற்றை மாற்றவும் செய்கின்றன. எனவே இத்தகைய நிறுவனங்கள், கட்டணம் செலுத்தி அத்தகைய பாஸ்வேர்ட் புரோகிராம்களை வாங்குவதுதான் நல்லது.
2. பாஸ்வேர்டில் எழுத்து, எண் மற்றும் சிறப்பு குறியீடுகளை அமைக்கவும். எழுத்துக்களைக் கூட பெரிய மற்றும் சிறிய எழுத்துக்களைக் கொண்டு அமைக்கலாம். எண்கள் தொடர்ச்சியாக இல்லாமல் இடை இடையே சிறப்புக் குறியீடுகளை அமைக்கலாம்.
3. பாஸ்வேர்ட்களை நம் நினைவில் நிறுத்திக் கொள்ளும் வகையில் எளிதாக அமைப்பதனைக் கைவிட வேண்டும். அதற்குப் பதிலாக, நினைவில் நிற்கக் கூடிய பொருளற்ற சொல் தொடர்களை அமைக்கலாம் dubidubi என்பதெல்லாம் அத்தகைய சொல் தொடர்களே. இதனை d*uBi(dU(bi என்ற படி இன்னும் நீளமாக அமைக்கலாம்.
4. பாஸ்வேர்ட்களை குறிப்பிட்ட காலத்தில் மாற்றிக் கொண்டே இருக்க வேண்டும். இன்றைய கம்ப்யூட்டர் பயன்பாட்டில், இமெயில் புரோகிராம்கள், இன்டர்நெட் பேங்கிங் சேவை, சோஷியல் நெட்வொர்க் தொடர்பு, நிறுவன வேலை இயக்கம், பொது கம்ப்யூட்டர்களில் வேலை எனப் பலவித இடங்களில் பாஸ்வேர்ட் பயன்படுத்த வேண்டியுள்ளது. இவற்றை நினைவில் வைத்து அவ்வப்போது மாற்றுவது சற்று கடினமே. இருப்பினும், இவற்றிற்கிடையே ஏதேனும் ஒரு வழி ஒன்றை தொடர்பாக வைத்து, அதன் அடிப்படையில் பாஸ்வேர்ட்களை மாற்றி வைத்துக் கொள்வது நல்லது.
5. பாஸ்வேர்ட்களில் உங்கள் பெயர், இரத்த தொடர்புடைய உறவுகளின் பெயர்கள், இவர்கள் சார்ந்த தேதிகள் ஆகியவற்றை அறவே தவிர்த்துவிடுங்கள். இவற்றை உங்களைச் சார்ந்தவர்கள் எளிதாகக் கண்டறியலாம்.

ஜிமெயில் காண தனி கீ போர்டு


கூகுள் ஜிமெயில் தளத்தில் பல ஷார்ட் கட் கீகளைப் பயன்படுத்தலாம். ஆனால் அவற்றை நினைவில் வைத்திருப்பது பலருக்கு சிரமமாயுள்ளது என்ற குற்றச் சாட்டு பொதுவாக எழுவது உண்டு. இந்த சிரமத்தைப் போக்க, கூகுள் ஜிமெயில் தளத்தில் பயன்படுத்த எனத் தனியே கீ போர்ட் ஒன்று உருவாக்கப்பட்டு விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் விலை 19.99 அமெரிக்க டாலர். விரைவில் இந்தியாவிலும் இது வரலாம்.
இது 19 கீகள் கொண்டு நம்பர் கீ பேட் போல அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு கீயிலும் ஒரு ஷார்ட் கட் வழி அமைக்கப்பட்டுள்ளது. எடுத்துக்காட்டாக ஒரு மெசேஜை ஸ்டார் இட்டு அமைப்பது, சர்ச் ஒன்றைத் தொடங்குவது, மெசேஜ் த்ரெட்களுக் கிடையே செல்வது போன்ற செயல்பாடுகளுக்கு இந்த ஷார்ட் கட் கீகள் வழி அமைத்துக் கொடுக்கின்றன. இதனை யு.எஸ்.பி. போர்ட்டில் இணைத்துப் பயன்படுத்தலாம். இதனை செட் செய்வதற்கு எனத் தனியே டிரைவர் புரோகிராம் எதுவும் தேவையில்லை. ஆனால் ஜிமெயில் இணைய தளம் சென்று அதில் ஷார்ட் கட் கீகளை இயக்கும் விருப்பத்தில் டிக் அடையாளம் ஏற்படுத்த வேண்டும்.
ஜிமெயில் இணைய தளம் இல்லாத போது, இந்த ஷார்ட் கட் கீகளில் என்ன கீகள் பயன்படுத்தப்படுகின்றனவோ, அந்த கீகளாக இவை செயல்படும். இதில் குறிப்பிடத்தக்க அம்சம் எதுவென்றால், இதனை வடிவமைத்து, உருவாக்கித் தந்தது கூகுள் நிறுவனம் இல்லை. திரைப்பட தயாரிப்பாளர் சார்லி மேசன் என்பவராவார்.
ஏற்கனவே நீங்கள் ஜிமெயில் ஷார்ட் கட் கீகளை நன்கு பயன்படுத்துபவராக இருந்தால் இந்த கீ போர்டு தேவையில்லை. இருப்பினும் விரைவான செயல்பாடு இதன் மூலம் கிடைக்கும் என்று எண்ணுபவர்களுக்கு நிச்சயம் இந்த கீ போர்டு உதவியாக இருக்கும்.
ஜிமெயிலில் ஏறத்தாழ 69 கீ போர்டு ஷார்ட் கட் கீகள் இருக்கின்றன என்று எண்ணுகையில் இந்த கீ போர்டு நம் வேலையை எளிதாக்கும் என்பதில் ஐயமில்லை. இந்தியாவில் இது கிடைக்கும் நாளை எதிர்பார்ப்போம்.
ஜிமெயில் டிப்ஸ்….
இன்று பெரும்பாலானவர்கள் பயன்படுத்தும் இலவச இமெயில் தளமாக ஜிமெயில் உருவெடுத்துள்ளது. இந்த இமெயில் அக்கவுண்ட் வைத்துக் கொண்டால் தான் கூகுள் தரும் அனைத்து வசதிகளையும் பயன்படுத்த முடியும். எனவே பயன்படுத்துகிறோமோ இல்லையோ பலரும் ஜிமெயில் தள அக்கவுண்ட் வைத்துள்ளனர்.
ஜிமெயில் தளம் சென்றவுடன் நமக்கு வந்திருக்கும் மெயில்களின் பட்டியலைப் பார்த்தால் அவை நமக்கு வந்த தேதிவாரியாக வைக்கப்பட்டிருப்பதனைப் பார்க்கலாம். பொதுவாக நாம் இமெயில்களைப் பார்த்தவுடன், அனுப்பியவர்களின் பெயரைப் பார்த்து, முக்கிய மெயில்களை முதலில் பார்ப்போம். பின்னர், மற்ற மெயில்களை சாவகாசமாகப் படிப்போம். எனவெ மெயில் வரிசையில் சில மெயில்கள் படித்தவையாகவும், சில படிக்காதவையாகவும் இருக்கும். படிக்காதவற்றைத் தேடி எடுத்து கிளிக் செய்து படிக்கும் சிரமத்தைப் போக்க, ஜிமெயில் ஒரு வசதியினைத் தந்துள்ளது. ஜிமெயில் அஞ்சல் பட்டியல் மேலாக உள்ள தேடல் பாக்ஸில் ‘is:unread in:inbox’ எனக் கொடுத்து ‘Search Mail’ கிளிக் செய்தால் நாம் படிக்காத மின் அஞ்சல்கள் மட்டும் காட்டப்படும். அவற்றைப் படிக்கலாம்; அல்லது நீக்கலாம்.
கிராஷ் ஆன பின் போல்டர்களைக் காப்பாற்ற
விண்டோஸ் எக்ஸ்பியில் நிறைய போல்டர்களைத் திறந்து வைத்து செயல்படும்போது ஒன்று கிராஷ் ஆனாலும் அனைத்தும் மூடப்படும். இதனை நாம் தவிர்க்கலாம். அதற்கான வழியை எக்ஸ்பி வைத்துள்ளது. கண்ட்ரோல் பேனலைத் திறந்து Folder Options என்னும் பிரிவினைத் தேர்ந்தெடுக்கவும். அதில் வியூ டேபிற்குச் செல்லவும். அதில் பல ஆப்ஷன்கள் தரப்பட்டிருக்கும். அவற்றில் ‘Launch folder windows in a separate process’ என்று ஒன்று இருக்கும். அதன் அருகே டிக் மார்க் அடையாளம் ஏற்படுத்தி பின் ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.

விண்டோஸ் வேகம் பெற இனியவை இருபது


விண்டோஸ் 95, 98, 2000, எக்ஸ்பி, விஸ்டா, விண்டோஸ் 7 எனப் பல நிலைகளில் ஆப்பரேட்டிங் சிஸ்டங்களை மைக்ரோசாப்ட் தந்தாலும், அவை இயங்கும் வேகம் இன்னும் அதிகமாக இருக்க வேண்டும், சிறிது கூடக் குறையக் கூடாது என்பதுதான் நம் விருப்பமாக எந்தக் காலத்திலும் உள்ளது. தொடக்கத்தில் உள்ள ஒரு சிஸ்டத்தின் வேகம் போகப் போகக் குறைவது பலருக்கு ஏமாற்றத்தைத் தருகிறது. இதில் இந்த சிஸ்டங்களைப் பயன்படுத்துபவர்களின் கவனக் குறைவும் உள்ளது. அவையும் சேர்ந்தே சிஸ்டத்தின் வேகக் குறைவிற்குக் காரணமாய் அமைந்துள்ளது. ஒரு சில நடவடிக்கைகளை மேற்கொண்டால் நிச்சயம் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை புயல் வேகத்தில் இயங்க வைக்கலாம் என்பதே உண்மை. அந்த சில நடவடிக்கைகளை இங்கு காணலாம். இந்த நடவடிக்கை குறித்த டிப்ஸ்கள், சிஸ்டம் வடிவமைப்பவர்கள், சிஸ்டம் அட்மினிஸ்ட்ரேட்டர்கள், நெட்வொர்க் அட்மினிஸ்ட் ரேட்டர் மற்றும் ஹெல்ப் டெஸ்க் வல்லுநர்கள் எனப் பலரிடம் திரட்டியவை. நீங்களும் இவற்றை முயற்சித்துப் பாருங்களேன்.
1. ஹார்ட் டிஸ்க்கின் சுழற்சி, அதன் மூலம் பைல் தேடும் நேரம் ஆகியவை சிஸ்டம் இயங்குவதில் முக்கிய இடத்தைக் கொள்கின்றன. எனவே சிதறலாகப் பதிந்த பைல்களை ஒருமுகப்படுத்தும் டிபிராக் செயல்பாட்டினை மேற்கொள்ளுங்கள். விண்டோஸ் இணைந்து வரும் டிபிராக் பைல் அல்லது ஸ்மார்ட் டிபிராக் (SmartDefrag) போன்ற மற்றவர்கள் தந்துள்ள புரோகிராம்களை இதற்குப் பயன்படுத்தலம. இந்த புரோகிராம் பெறhttp://www.onlinetechtips.com/freesoftwaredownloads/freedefragmenter/ என்ற முகவரியில் உள்ள தளத்தை அணுகவும். ஹார்ட் டிஸ்க் என்று பொதுவாக இல்லாமல் விண்டோஸ் பேஜ் பைல் மற்றும் ரெஜிஸ்ட்ரியைக் குறிப்பாக டிபிராக் செய்திட வேண்டும்.
2. தற்காலிக பைல்கள் உருவாக்கம் நம் ஹார்ட் டிஸ்க்கின் இடத்தை எடுத்துக் கொண்டு அதன் பைல் தேடும் செயல்பாட்டினைத் தடுக்கும். எனவே டெம்பரரி பைல் போல்டர், ரீசைக்கிள் பின், ஹைபர்னேஷன் போன்ற போல்டர்கள் மற்றும் டைரக்டரிகளில் உள்ள தற்காலிக பைல்களை நீக்க வேண்டும். Treesize போன்ற புரோகிராம்களின் உதவி கொண்டு எந்த புரோகிராம்கள், பைல்கள் உங்கள் டிஸ்க்கில் அதிக இடம் எடுத்துக் கொண்டுள்ளன என்று பார்த்து செயல்படவும். இந்த புரோகிராமினைப் பெறhttp://www.onlinetechtips.com/computertips/treesizefreeutilitytofindviewandfreeupharddiskspace/என்ற முகவரியில் உள்ள தளத்திற்குச் செல்லவும்.
3.விண்டோஸ் சிஸ்டத்தினை வேகமாக இயக்கலாம். இதற்கு ஸ்டார்ட் அப் புரோகிராம்கள் லோட் ஆவதை தாமதப்படுத்தலாம். இலவசமாக, ஸ்டார்ட் அப் டிலேயர் (Startup Delayer) என்ற புரோகிராம் இதற்கு உதவும். இதனைப் பெறhttp://www.onlinetechtips.com/computertips/speedupwindowsxpboot/ என்ற முகவரிக்குச் செல்லவும். பொதுவாக பல ஸ்டார்ட் அப் புரோகிராம்கள், காலப் போக்கில் நமக்குத் தேவையற்றதாக இருக்கும். இவற்றை இந்த பட்டியலில் இருந்து நீக்க msconfig என்ற கட்டளையை ரன் பாக்ஸில் இயக்கி நீக்கவும்.
4. விண்டோஸ் எக்ஸ்பி மற்றும் விஸ்டாவில் விண்டோஸ் சர்ச் இன்டெக்ஸிங் என்ற பணி தொடர்ந்து நடைபெறும். இது நடைபெறுவதனை நிறுத்தி வைக்கலாம். அதே போல, பெர்பார்மன்ஸ் ஆப்ஷன்ஸ் பெற்று, தேவையற்ற அலங்கார விண்டோக்கள், திரைக் காட்சிகளை நீக்கலாம். இந்த வழியைப் பின்பற்றி தேவையற்ற விண்டோஸ் சர்வீஸ், செட்டிங்ஸ் மற்றும் புரோகிராம்களை நீக்கலாம்.
5. விண்டோஸ் பூட் ஆகும் நேரத்தைத் துரிதப்படுத்த மைக்ரோசாப்ட் நிறுவனம் Bootvis என்னும் புரோகிராமினைத் தந்துள்ளது. அதன் தளம் சென்று இந்த புரோகிராமினை இலவசமாகப் பெற்று இயக்கவும்.
6. ரெஜிஸ்ட்ரியில் பல ரெபரன்ஸ் வரிகள் தேவையற்றதாய் சில நாட்களிலேயே மாறிவிடும். இவற்றை நீக்கலாம். கவனத்துடன் இதற்கான வழிமுறைகளை மைக்ரோசாப்ட் தளத்தில் பெற்றுக் கையாளவும்.
7. பெர்சனல் கம்ப்யூட்டர்கள் மெதுவாக இயங்குவதற்குக் காரணம், நாம் அறியாமலேயே இன்டர்நெட் வழியாக நம் கம்ப்யூட்டரை வந்தடையும் ஸ்பைவேர் புரோகிராம்களாகும். இவற்றை AdAware, Giant Antispyware, SUPER AntiSpyware போன்ற புரோகிராம் களில் ஏதேனும் ஒன்றின் துணை கொண்டு நீக்கலாம். இவை இணையத்தில் இலவசமாகவே கிடைக்கின்றன. இவற்றின் மூலமாகவும் நீக்க முடியாமல், ஹார்ட் டிஸ்க்கில் தங்கும் ஸ்பை வேர்களை HijackThis to remove spyware என்ற புரோகிராம் மூலம் நீக்கலாம்.
8. சில சாப்ட்வேர் புரோகிராம்கள் தேவையில்லாமல், கம்ப்யூட்டருடன் சிஸ்டம் வரும்போதே பதியப்பட்டு கிடைக்கும். இவற்றை நீக்க PC Decrapifier போன்ற புரோகிராம்களைப் பயன்படுத்தவும்.
9. விண்டோஸ் விஸ்டா இயக்கத்தில் User Account Control என்ற புரோகிராம் தானாகவே தொடங்கி இயங்கும். இதனை நீக்குவது விண்டோஸ் இயக்கத்தின் வேகத்தை அதிகப்படுத்தும். இது பலருக்குத் தேவையற்ற புரோகிராம் ஆகும்.
10. உங்கள் மவுஸ் செட்டிங்ஸில் கவனம் செலுத்துங்கள். அதற்கான வழிகளைச் சொல்லித் தரும் தளங்கள் இணையத்தில் உள்ளன. இதனால் வேகமாக காப்பி, பேஸ்ட், ஸ்குரோல் போன்ற செயல்களை வேகமாக மேற்கொள்ளலாம்.
11. இன்டர்நெட் தேடலில், உலாவில் அநேக பைல்கள் தற்காலிகமாக உருவாக்கப்பட்டு நம் ஹார்ட் டிஸ்க்கில் அடைந்திருக்கும். பிரவுசிங் ஹிஸ்டரி, டெம்பரரி டவுண்லோட் லிங்க்குகள், குக்கீஸ் போன்றவை உருவாகும். இவற்றை சி கிளீனர் (C Cleaner) போன்ற புரோகிராம்கள் மூலம் நீக்கலாம். இது போன்ற புரோகிராமினை, கம்ப்யூட்டர் இயக்கம் தொடங்கும்போதோ, முடிக்கும் போதோ இயக்குவது நல்லது.
12.விண்டோஸ் பூட் ஆகும் நேரத்தைக் குறைக்க அதன் லோகோ வருவதைத் தவிர்க்கலாம். இதனை எப்படி மேற்கொள்வது என்பதனைhttp://www.techrecipes.com/rx/1353/xpdisablexpbootlogo/ என்ற முகவரியில் உள்ள தளத்தில் அறியவும்.
13. தேவைப்படுகிறதோ இல்லையோ, அதிக எண்ணிக்கையில் எழுத்து வகைகளை (Fonts) நாம் கம்ப்யூட்டரில் சேர்த்து வைக்கிறோம். விண்டோஸ் தரும் எழுத்து வகைகளைக் கூட அனைத்தும் நாம் பயன்படுத்துவதில்லை. விண்டோஸ் இயங்கும் போது பாண்ட்ஸ் போல்டரில் உள்ள அனைத்து எழுத்து வகைக�ளையும் இயக்கி வைக்கிறது. எனவே இவற்றில் சிலவற்றை நீக்கி, விண்டோஸ் தொடக்கத்தில் இயக்காதபடி போட்டு வைக்கலாம்.
14. குறிப்பிட்ட கால அவகாசத்தில் நீங்கள் பைல்களை பேக்கப் செய்வது வழக்கம் என்றால், சிஸ்டம் ரெஸ்டோர் பயன்பாட்டை முடக்கி வைக்கலாம். இதனால் வேகம் கூடுதலாகும்.
15. மை டாகுமெண்ட்ஸ் போல்டரை, சிஸ்டம் பூட் ஆகும் டிரைவில் இருந்து வேறு ஒரு டிரைவில் அமைக்கலாம்.
16. சில போர்ட்களை நாம் பயன்படுத்தாமலே வைத்திருப்போம். இவற்றின் இயக்கத்தை நிறுத்தி வைக்கலாம்.
17. விஸ்டாவில் என்று ஒரு செயல்பாடு இருக்கும். இதனை நிறுத்தி வைப்பதன் மூலம் வீடியோக்களையும், படங்களையும் இணையத்தில் வேகமாக பிரவுஸ் செய்திட முடியும்.
18. இன்டர்நெட் பிரவுசிங் செய்கையில் வெப் ஆக்சிலரேட்டர்களைப் பயன்படுத்தவும். இவை நீங்கள் பார்க்க இருக்கும் தளங்களை எடுத்து கேஷ் மெமரியில் வைத்து உங்கள் நேரத்தை மிச்சப்படுத்தி, செயல்பாட்டினை வேகப்படுத்தும்.
19. நீங்கள் பயர்பாக்ஸ் பயன்படுத்துகிறீர்களா! இதன் செயல் வேகத்தை அதிகப்படுத்த ஆட் ஆன் புரோகிராம் ஒன்று FasterFox என்ற பெயரில் உள்ளது. அதனைப் பயன்படுத்தவும்.
20. உங்கள் கம்ப்யூட்டர் வடிவமைக்கப்பட்டு மாதங்கள் அல்லது ஆண்டுகள் பல ஆகிவிட்டதா? சின்ன சின்ன வேகமாகச் செயல்படும் பாகங்களை, பழையனவற்றின் இடத்தில் இணைப்பதன் மூலம் கம்ப்யூட்டரின் செயல்பாட்டைத் துரிதப்படுத்தலாம்.

விண்டோஸ் 7 ஷார்ட் கட் கீகள்


விண்டோஸ் 7 பயன்பாட்டிற்கு வந்துவிட்டது. பலரும் அதனை விரும்பிப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர். குறிப்பாக புதிய கம்ப்யூட்டர் அனைத்திலும் விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டம்தான் பதியப்பட்டு தரப்படுகிறது. இதோ நாம் வழங்கும் அதற்கான முதல் ஷார்ட் கட் கீ பட்டியல்:
முதலில் விண்டோஸ் கீயுடன் உள்ள ஷார்ட் கட் கீகளைப் பார்க்கலாம்.
விண்டோஸ் கீ + மேல் அம்புக் குறி அழுத்த விண்டோ மேக்ஸிமைஸ் செய்யப்படும்.
விண்டோஸ் கீ + கீ ழ் அம்புக் குறி –– விண்டோ மினிமைஸ் ஆகும்.
விண்டோஸ் கீ + இடது அம்புக் குறி –– விண்டோ இடது பக்கம் ஒதுக்கப்படும்.
விண்டோஸ் கீ +வலது அம்புக் குறி கீகளை அழுத்தினால் விண்டோ வலது பக்கம் ஒதுக்கப்படும்.
விண்டோஸ் கீ + ஹோம் கீ அழுத்த மற்ற விண்டோக்கள் அனைத்தும் மினிமைஸ் செய்யப்படும். மினிமைஸ் செய்யப்பட்டிருந்தால் மீண்டும் திறக்கப்படும்.
விண்டோஸ் கீ + ட்டி (T) அழுத்த டாஸ்க்பாரில் உள்ள முதல் பதிவு போகஸ் செய்யப்படும். தொடர்ந்து அழுத்தினால் அடுத்தடுத்த என்ட்ரிகள் தேர்ந்தெடுக்கப்படும்.
விண்டோஸ் கீ + ஸ்பேஸ் பார் அழுத்திப் பிடித்தபடி இருந்தால் விண்டோவின் தொடக்க நிலை காட்டப்படும்.
விண்டோஸ் கீ + ஏதேனும் ஒரு எண் (1–9) டாஸ்க் பாரில் அந்த எண் வரிசையில் உள்ள புரோகிராம் திறக்கப்படும்.
விண்டோஸ் கீ + ப்ளஸ் கீ அழுத்த விண்டோ ஸூம் செய்யப்படும்
விண்டோஸ் கீ + மைனஸ் கீ அழுத்த விண்டோஸ் ஸூம் குறைக்கப்பட்டு வழக்கமான நிலைக்கு மாறும்.

பிராந்திய மொழிகளில் மைக்ரோசாப்ட்


மைக்ரோசாப்ட் நிறுவனத்தைப் பொறுத்தவரை, இந்தியா போன்ற ஒரு பெரிய நாட்டில் தன் வர்த்தகம் என்றும் முதல் இடத்தில் இருக்க வேண்டும் எனவே எண்ணுகிறது. மைக்ரோசாப்ட் இந்தியா என்னும் இந்திய மைக்ரோசாப்ட் பிரிவு அதற்கான முயற்சிகளில் தொடர்ந்து இயங்கி வருகிறது. அண்மையில் இதன் ஹைதராபாத் ஆய்வுக் கூடம் , மைக்ரோசாப்ட் அப்ளிகேஷன்களில் பிராந்திய மொழிகளில் தகவல் உள்ளீடு செய்வதற்கான டூல்ஸ் ஒன்றைத் தயாரித்துள்ளதாக அறிவித்துள்ளது.
இந்த டூல் மூலம், இந்திய மொழி ஒன்றின் டெக்ஸ்ட்டை, ஆங்கில எழுத்துக்களின் ஒலிப் பின்னணியில் அமைக்கலாம். மைக்ரோசாப்ட் நிறுவனம் வழங்கும் சிஸ்டங்கள் மற்றும் சாப்ட்வேர் புரோகிராம்கள் அனைத்திலும் இதனை அமைக்கலாம். முதல் கட்டமாக தமிழ், இந்தி, கன்னடா, வங்காளம், மலையாளம் மற்றும் தெலுங்கு மொழிகளுக்கான டூல் தரப்படுகிறது.
15 ஆண்டுகளுக்கு முன்னால், ஜப்பானிய மொழியில் தன் அனைத்து சிஸ்டம் மற்றும் அப்ளிகேஷன் சாப்ட்வேர் தொகுப்புகள் அனைத்தையும் மைக்ரோசாப்ட் நிறுவனம் தந்தது. தொடர்ந்து தான் இலக்கு வைத்திடும் நாடுகளில் இந்த கூடுதல் வசதிகளைத் தந்த மைக்ரோசாப்ட், தற்போது இந்திய மொழிகளில் தன் கவனத்தைத் திருப்பியுள்ளது. இந்தியாவில் 1.2 கோடி பெர்சனல் கம்ப்யூட்டர் பயனாளர்களும், 4.5 கோடி இன்டர்நெட் பயன்படுத்துபவர்களும், 52.5 மொபைல் பயன்படுத்துபவர்களும் உள்ளனர். இத்தகைய பிராந்திய மொழிகளில் டூல்ஸ்களை வழங்குவதன் மூலம், வாடிக்கையாளர்களைத் தன் பக்கமே வைத்திருக்க முடியும் என மைக்ரோசாப்ட் நினைக்கிறது. டெஸ்க்டாப் அப்ளிகேஷன்கள் மற்றும் இணைய அப்ளிகேஷன்களில் பயன்படுத்தக் கூடிய வகையில் இந்த டூல்ஸ் அமையும் என்று அறிவித்துள்ளது. இவற்றின் சோதனைத் தொகுப்பினை விரைவில் தன் இணைய தளத்தில் மைக்ரோசாப்ட் தர இருக்கிறது.

முதல் ஆப்டிகல் ட்ராக்பால் கீ போர்ட்


ஆம்கெட் (Amkette) நிறுவனம், புதிய வயர்லெஸ் ஆப்டிகல் ட்ராக் பால் கொண்ட கீ போர்டு ஒன்றை அண்மையில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. ரூ.2,995 என விலை குறிக்கப்பட்டிருக்கும் இந்த கீ போர்டு, இவ்வகையில் தயாரிக்கப்பட்ட முதல் கீ போர்டு என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை விண்டோஸ் 2000, எக்ஸ்பி, விஸ்டா மற்றும் விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டங்களுடனும், மேக் மற்றும் லினக்ஸ் கம்ப்யூட்டரிலும் பயன்படுத்தலாம்.
இதில் உள்ள 800 டி.பி.ஐ. ஆப்டிகல் ட்ராக் பால் 360 டிகிரி சுற்றி இயங்கக் கூடியது. இது ஒரு வழக்கமான மவுஸ் போலவே செயல்படுகிறது. இந்த கீ போர்டு 365 மிமீது 156 மிமீ து 22 மிமீ, என்ற அளவுகளில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை எளிதாக எங்கும் எடுத்துச் செல்லலாம். நான்கு நிமிடங்கள் இதனை இயக்காமல் இருந்தால், உடனே மின் சக்தி நிறுத்தப்படும் வகையில் இதில் வழி செய்யப்பட்டுள்ளது.
இதன் ஆப்டிகல் ட்ரேக் பாலில் ஒரு ஸ்குரோல் வீல் மற்றும் இரண்டு செட் வலது மற்றும் இடது பட்டன்கள் தரப்பட்டுள்ளன. மேற் புறத்தில் பத்து மல்ட்டி மீடியா கீகள் தரப்பட்டு இன்டர்நெட் மற்றும் விண்டோஸ் மீடியா பிளேயர் போன்ற வற்றை இயக்குவதை எளிதாக்கு கின்றன. பெர்சனல் கம்ப்யூட்டர் களில் ஹோம் தியேட்டர் செட் செய்பவர்களுக்கு இந்த கீ போர்டு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

No comments:

Post a Comment