Tuesday 3 April 2012

வந்துவிட்டது பயர்பாக்ஸ் 3.5--கிளிப் போர்டு மேனேஜர்கள்--வெள்ளிவிழா கொண்டாடும் மேக் கம்ப்யூட்டர்--கம்ப்யூட்டர் பத்து வகை--வருகிறது கூகுள் குரோம் ஓ.எஸ்.--அன்லாக்கர்--குழாய் நீரில் கீ போர்டைக் கழுவலாம்!


வந்துவிட்டது பயர்பாக்ஸ் 3.5


பரயர்பாக்ஸ் ரசிகர்களின் பலவகையான வேண்டுகோள்களையும் எதிர்பார்ப்புகளையும் நிறைவேற்றும் வகையில் பயர்பாக்ஸ் 3.5 முழுமையான பதிப்பு வெளியாகியுள்ளது. சபாரி பிரவுசரின் பதிப்பு 4 வெளியாகியுள்ள நிலையில் இந்த தொகுப்பு வந்துள்ளது பிரவுசர் தயாரிக்கும் நிறுவனங்களிடையே நிலவும் கடுமையான போட்டியைக் காட்டுகிறது. உலகின் இரண்டாவது பிரபலமான பிரவுசர் என்ற பெயரை பயர்பாக்ஸ் மீண்டும் தக்கவைத்துக் கொண்டுள்ளது. இயங்கும் வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போதைய பிரவுசிங் தொழில் நுட்பமே பயன்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு முன் வெளியான பயர்பாக்ஸ் பதிப்பு 3 ஐக் காட்டிலும் பெரிய அளவில் இதில் மாற்றங்களோ வேகமோ இல்லை என்றாலும் சில புதிய வசதிகள், பிரவுசர் சந்தை போட்டியில் பயர் பாக்ஸைத் தொடர்ந்து தூக்கி நிறுத்துகின்றன.
இதில் பல புதிய வசதிகள் இருந்தாலும் அவை ஒன்றும் ஆச்சரியத்தைத் தரும் வகையில் இல்லை என்பதே பலரின் கணிப்பு. இன்டர்நெட் எக்ஸ்புளோரர் ரசிகர்களுக்குப் பழக்கமான InPrivate மற்றும் குரோம் பிரவுசர் தரும் Incognito ஆகிய Private Browsing வசதியினை பயர்பாக்ஸ் 3.5 தாங்கி வந்துள்ளது. ஏற்கனவே டிசம்பர் 2008 முதல் பீட்டா தொகுப்பினைப் பெற்று பயன்படுத்திய 8 லட்சம் பேர் இந்த வசதியினை அனுபவித்தனர். இப்போது பொதுவாக அனைவரும் பயன்பெறும் வகையில் பதிப்பு 3.5ல் தரப்பட்டுள்ளது. இதன் மூலம் நாம் இந்த பிரவுசர் மூலமாகப் பார்த்த தளங்கள் குறித்த குறிப்புகள், அந்த தளங்களில் நாம் தந்த நம் பெர்சனல் தகவல்கள் ஆகியவை பதியப்பட மாட்டாது. இதனால் நாம் பார்த்த தளங்களின் பட்டியல் யாருக்கும் கிடைக்காது. எனவே பொதுவான கம்ப்யூட்டர் மையங்களில் நாம் மற்றவர் அறியாமல் நம் பிரவுசிங் வேலையை மேற்கொள்ளலாம். இந்த வகை பிரவுசிங் போது புக்மார்க்குகளை அமைக்கலாம். பிரவுசரை மூடும்போது இவை புக் மார்க் பட்டியலில் ஏற்றப்படும்.
இந்த வகையில் குரோம் மற்றும் பிற பிரவுசர்களில் பிரைவேட் மற்றும் பப்ளிக் பிரவுசிங் ஆகிய இரண்டு வகை பிரவுசிங்குகளையும் ஒரே நேரத்தில் மேற்கொள்ளலாம். பயர் பாக்ஸில் அந்த வசதி இல்லை. பயர்பாக்ஸ் 3.5 பதிப்பு தொழில் நுட்ப அடிப்படையில் மற்றவற்றைக் காட்டிலும் சிறப்பான ஒரு அம்சத்தைக் கொண்டிருப்பதாக இணைய தள வடிவமைப்பாளர்கள் கூறி உள்ளனர். எச்.டி.எம்.எல்.5 லோக்கல் ஸ்டோரேஜ், சி.எஸ்.எஸ்.மீடியா டேக்ஸ், இறக்கிப் பயன்படுத்தக் கூடிய வகையில் எழுத்துக்கள் வசதி என டெவலப்பர்களுக்குப் பயன் தரக்கூடிய பல வசதிகள் தரப்பட்டுள்ளன.
இந்த புதிய பதிப்பில் ஜியோ லொகேட்டிங் என்னும் வசதியும் உள்ளது. இதனால் நீங்கள் உலகின் எந்தப் பகுதியில் இருந்து இயக்குகிறீர்கள் என்பதனை பிரவுசர் உணர்ந்து கொள்ளும். பிரவுசர் கிராஷ் ஆனால் மீண்டும் அதனை இயக்கும் போது அப்போது இயங்கிக் கொண்டிருந்த அனைத்து டேப்களும் திறக்கப்பட வேண்டுமா என்று கேட்கப்பட்டு அவை அனைத்தும் திறக்கப்படும். ஆனால் தற்போது அதிலும் எந்த டேப்கள் திறக்கப்பட விரும்புகிறோமோ அவற்றை மட்டும் திறக்கலாம். மேலும் கிராஷ் ஆகும்போது ஏதேனும் வெப் படிவத்தில் டெக்ஸ்ட் டைப் செய்து கொண்டிருந்தாலும் அந்த டெக்ஸ்ட்டும் மீண்டும் தரப்படும்.
இந்த பதிப்பின் வேகம் குறித்து சொல்லியே ஆக வேண்டும். சன் ஸ்பைடர் ஜாவா ஸ்கிரிப்ட் பெஞ்ச் மார்க் என்னும் சோதனை மூலம் இதனைச் சோதித்த போது இது பயர்பாக்ஸ் பதிப்பு 3 ஐக் காட்டிலும் இரண்டு மடங்கு வேகத்தில் இயங்கியது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. டேப் பிரவுசிங் பழக்கத்திற்கு வந்த நாள் முதல் பிரவுசர்கள் அனைத்தும் தங்கள் டேப் பாரில் ஏதாவது முன்னேற்றமான மாற்றங்களை ஏற்படுத்தி வருகின்றன. அந்த வகையில் இந்த பதிப்பில் சபாரி பிரவுசரில் உள்ளது போல டேப்களை அதன் வரிசையை மாற்றி அமைக்கலாம். இழுத்து நீக்கலாம். ஒரு டேப்பை இழுத்து புதிய விண்டோ ஒன்றில் அமைக்கலாம். பயர்பாக்ஸ் பதிப்பு இப்போது 70க்கும் மேற்பட்ட மொழிகளில் கிடைக்கிறது. இன்னும் சில மொழிகளிலும் இதனைத் தர வேலைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கிளிப் போர்டு மேனேஜர்கள்


விண்டோஸ் மற்றும் வேர்ட் புரோகிராம்களில் செயல்படும் கிளிப் போர்டுகள் குறித்து பலமுறை இங்கு விளக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வேர்ட் புரோகிராம் கொண்டிருக்கும் கிளிப் போர்டு எப்படி விண்டோஸ் கிளிப் போர்டினைக் காட்டிலும் கூடுதல் சிறப்பம்சங்களைக் கொண்டு நமக்குப் பல வசதிகளைத் தருகிறது என்பதனையும் நம் வாசகர்களுக்குத் தந்திருக்கிறோம்.  இங்கு இந்த கிளிப் போர்டுகளைக் கண்காணித்து அவற்றைப் பயன்படுத்தும் போது கூடுதல் வசதிகளைத் தரும் சில இலவச இணைய புரோகிராம்களைக் காணலாம்.
1. Flashpaste: இது விண்டோஸ் இயக்கத் தொகுப்பிற்கு உதவிடும் ஒரு புரோகிராம். இது கிளிப் போர்டில் காப்பி செய்யப்படும் டெக்ஸ்ட்டைக் கண்காணித்து அவற்றைத் தேவையானபோது பெற்று பேஸ்ட் செய்திட உதவுகிறது. இதன் மூலம் நாம் அடிக்கடி காப்பி செய்து பேஸ்ட் செய்திடும் டெக்ஸ்ட்டை பதிந்து வைத்து பயன்படுத்தவும் முடியும். எடுத்துக் காட்டாக நம் பெயர், முகவரி, இணைய முகவரிகள், சில இணைய அக்கவுண்ட் விபரங்கள் ஆகியவற்றை நிரந்தரமான கிளிப்பாக பதிந்து வைத்து இதிலிருந்து பெற்று பயன்படுத்தலாம்.
இத்துடன் ஒரு சிறிய மேக்ரோ மூலம் நேரம் மற்றும் நாளினை நாம் விரும்பும் பார்மட்டில் பேஸ்ட் செய்திட முடியும். அதே போல டாகுமெண்ட்களையும் இணைய பக்கங்களையும் குறிப்பிட்ட நாளில் திறக்க இதில் குறிப்புகளை எழுதி வைத்துப் பயன்படுத்தலாம். இந்த புரோகிராம் சில ஷார்ட் கட் கீகளை அமைத்திடவும் உதவுகிறது. இதனை ஒரு யு.எஸ்.பி. டிரைவிலும் வடிவமைத்திடலாம். இது முற்றிலும் இலவசமான புரோகிராம் அல்ல. முதல் 30 நாட்களுக்கு மட்டும் இதனை இலவசமாகப் பயன்படுத்தலாம். இதனைப் பெறhttp://flashpaste.com/  என்ற முகவரியில் உள்ள இணைய தளத்தினை அணுகவும்.
2. ClipMate: இதனை விண்டோஸ் 98 முதல் விஸ்டா வரையிலான ஆப்பரேட்டிங் சிஸ்டங்களில் பயன்படுத்தலாம். இதுவும் கிளிப் போர்டில் காப்பி ஆகும் விஷயங்களை கண்காணிக்கிறது. காப்பி ஆகும் தகவல்களை, அவை பிட் மேப் பைல், ஆர்.டி.எப். டெக்ஸ்ட், எச்.டி.எம்.எல். என எதுவாக இருந்தாலும் அதனை ஷார்ட் கட் கீ (Shift + Ctrl + Q) மூலம் பேஸ்ட் செய்திட செட் செய்திடலாம்.
கிளிப் போர்டில் கிளிப் செய்யப்பட்டவற்றைப் பல வகைகளில் இது நிர்வகிக்கிறது. கிளிப்களை நீக்கலாம்; எடிட் செய்திடலாம்; என்கிரிப்ட் செய்திடலாம்; எதனுடனாவது இணைக்கலாம். இன்னும் பல செயல்பாடுகளை மேற்கொள்ளலாம். இந்த கிளிப் பிரவுசரில் ஒரு ஸ்பெல் செக்கர் உள்ளது. டெக்ஸ்ட் எழுத்து மாற்றும் வசதி கொண்டுள்ளது. குறுக்கு கோடுகளை நீக்கிடும் வசதி உள்ளது. எச்.டி.எம்.எல். மற்றும் யு.ஆர்.எல் ஆகியவற்றை ஹைலைட் செய்திடும் வசதியும் தரப்பட்டுள்ளது.
இவற்றுடன் கிளிப்களை அகர வரிசைப்படுத்திப் பயன்படுத்தலாம். ஹாட் கீ அமைக்கலாம். கிளிப்களைத் தனியாகவும் பிரிண்ட் செய்திடலாம். இன்னும் பல வசதிகளைக் கொண்ட இந்த புரோகிராம் டவுண்லோட் செய்து முதல் 30 நாட்களுக்கு மட்டும் இலவசமாகப் பயன்படுத்தும் வகையில் தரப்படுகிறது. இணைய முகவரி: http://www.thornsoft.com/ யு.எஸ்.பி. டிரைவில் எடுத்துச் சென்று பயன்படுத்தக் கூடிய பதிப்பு ஒன்றும் தரப்படுகிறது.
3. ClipMagic:  இந்த புரோகிராம் தனி நபர் பயன்பாட்டிற்கு இலவசம் என்ற அறிவிப்புடன் டவுண்லோட் செய்திடக் கிடைக்கிறது. http://www.clipmagic.com/ என்ற முகவரியில் உள்ள தளத்தில் இதனைப் பெறலாம். கிளிப் போர்டில் காப்பி செய்யப்பட்ட டெக்ஸ்ட் மற்றும் இமேஜ்களை இது பதிந்து வைத்துக் கொள்கிறது. பின் அவற்றை எப்போது வேண்டுமானாலும் பேஸ்ட் செய்திடவும் எடிட் செய்திடவும் முடியும். நிறைய கிளிப்கள் இருந்தால் அவற்றை வகைப்படுத்த முடியும். தொடர்ந்து கிடைக்கும் கிளிப்களைத் தாமாக அந்த அந்த வகைகளில் பதியும் படி அமைக்க முடியும். இன்னும் சில கூடுதல் வசதிகளையும் இந்த புரோகிராம் மூலம் அமைக்கலாம்: டெக்ஸ்ட் மற்றும் இமேஜ் கிளிப்களை பிரிவியூ செய்திடலாம்; எந்த இணைய தளங்களில் இருந்து டெக்ஸ்ட் காப்பி செய்யப்பட்டது என்று நினைவில் வைக்கலாம்; இதனுடன் இணைந்த வெப் பிரவுசரில் கிளிப்களை அதன் மூலத்திலேயே காணலாம்; ஸ்கிரின் இமேஜை முழுமையாகவும் தேவையான அளவிலும் வரையறை செய்து காப்பி செய்திடலாம்; கிளிப்களை டிஸ்க்கில் காப்பி செய்திடலாம். முன்பு காப்பி செய்த கிளிப்களை எளிதாகப் பெற கிளிப் மேஜிக்கில் அதன் மீது ரைட் கிளிக் செய்து “Item Properties” தேர்ந்தெடுக்க வேண்டும். பின் அந்த குறிப்பிட்ட கிளிப்பிற்கு ஹாட் ஷார்ட் கட் கீ அமைக்கலாம். எந்த நிலையிலும் கிளிப் ஒன்றினை பேஸ்ட் செய்திடலாம்.
4.ArsClip: விண்டோஸ் இயக்கத்தின் கிளிப் போர்டுக்கான இலவச என்ஹேண்சர் புரோகிராம் என இது அறிவிக்கப்பட்டுள்ளது. கிளிப் போர்டில் இறுதியாகக் காப்பி செய்யப்பட்ட 15 டெக்ஸ்ட்களையும் 5 டெக்ஸ்ட் அல்லாதவற்றையும் இந்த புரோகிராம் நினைவில் கொள்கிறது. இதனை இன்ஸ்டால் செய்துவிட்டால் Ctrl + Shift + Z என்ற ஹாட் கீகள் மூலம் பெறலாம். இந்த புரோகிராமினை இயக்குகையில் இது சிஸ்டம் ட்ரேயில் ஐகான் ஒன்றை அமைக்கிறது. இதன் மீது ரைட் கிளிக் செய்து கிளிப்களை செலக்ட் செய்திடலாம். எப்போதும் வேண்டும் சில கிளிப்களை நிரந்தரமாக காப்பி செய்து வைக்கலாம். அவை ஒவ்வொன்றிற்கும் ஒரு ஹாட் கீ ஏற்படுத்தி வைக்கலாம். நிரந்தரமாக ஒரு கிளிப்பை வைத்திட சிஸ்டம் ட்ரே ஐகானில் ரைட் கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில் “Permanent Items”என்பதைத் தேர்ந்தெடுக்கவும். “ArsClip Permanent Items and Groups” என்னும் டயலாக் பாக்ஸ் உங்களுக்குக் கிடைக்கும். இதில் “Default” என்பதில் கிளிக் செய்திடவும். அதன்பின் “New Item”என்னும் பட்டனில் கிளிக் செய்திடவும். இனி நீங்கள் செலக்ட் செய்துள்ள கிளிப்பிற்கு ஒரு பெயரை டைப் செய்திடவும். இது ArsClip மெனுவில் காட்டப்படும். பின் இதனை இந்த புரோகிராமில் பேஸ்ட் செய்திடவும். பேஸ்ட் செய்த பின்னர் “Use Keystrokes / Commands” என்ற பாக்ஸில் டிக் செய்திடவும். இதன் மூலம் கீ ஸ்ட்ரோக்ஸ் அமைக்கலாம்.
இந்த புரோகிராம் மூலம் கிளிப் போர்டில் உள்ளவற்றை நீக்கலாம். கட்டளை ஒன்றை இயக்கலாம். இன்றைய தேதியை அல்லது ஒரு கிளிப்பினை டெக்ஸ்ட்டில் செருகலாம். இதனைப் பேஸ்ட் செய்வதற்குக் கூட ஒரு ஹாட் கீ அமைக்கலாம். அதன் பின் சேவ் செய்தால் ஒரு கிளிப்பிற்காக நீங்கள் மேற்கொண்ட, மேலே சொன்ன அனைத்தும் சேவ் செய்யப்படும். இதன் பின் “ArsClip Permanent Items and Groups” டயலாக் பாக்ஸை மூடவும்.இதன் பாப் அப் மெனுவினைப் பெறுகையில் எந்த ஒரு கிளிப்பினையும் பெர்மணன்ட் ஆக ஒரு சிறிய கிளிக் மூலம் ஆக்க முடியும்.
ஒரு செட் அப் புரோகிராம் மூலம் வந்தாலும், அது ஒரு எக்ஸிகியூட்டபிள் பைலாகத்தான் கிடைக்கிறது. இதனை ஹார்ட் டிஸ்க் அல்லது போர்ட்டபிள் பிளாஷ் டிரைவில் எந்த இடத்திலும் பதிந்து வைக்கலாம். http://www.joejoesoft.com/cms/showpage.php?cid=97என்ற முகவரியில் உள்ள தளத்தில் இதனை இலவசமாக டவுண்லோட் செய்திடலாம்.

வெள்ளிவிழா கொண்டாடும் மேக் கம்ப்யூட்டர்


அது 1984 ஆம் ஆண்டின் ஜனவரி 24. அந்த நாளில் தான் மேக் இன்டோஷ் தன் கிராபிக் இன்டர்பேஸ் கொண்ட கம்ப்யூட்டரை அதன் சிறிய மவுஸ் இணைத்து அறிமுகப்படுத்தியது. அன்று தான் மேக் கம்ப்யூட்டர் விற்பனைக்கு வந்தது. அது அன்று வித்தியாசமாகத் தெரிந்தாலும் மிக எளிதான இது இனி இருந்தே ஆகும் என்ற நிலையை எட்டியது.  முதலில் 1980 களில் ஆப்பிள் II  வெளியானது முதல் அது ஒரு உரசலான இடத்தையே பிடித்தது. இதனை அடுத்து 1980ல் வந்த Apple III யும் ஒரு சிறிய குண்டைத் தூக்கிப் போட்டது. ஆனால் இதனை அடுத்து வந்த லிஸா (Lisa) தான் வர்த்தக ரீதியாக கிராபிகல் யூசர் இன்டர்பேஸ் மற்றும் மவுஸுடன் வந்த முதல் சிஸ்டம். ஆனால் விலை 9,995 டாலர். இந்த மார்க்கட்டை அப்போது வந்த ஐ.பி.எம். பெர்சனல் கம்ப்யூட்டரும் அதனைப் போல வந்த மற்ற சிஸ்டங்களும் கைப்பற்றத் தொடங்கின.
இருப்பினும் ஆப்பிள் தனி ஒரு இடத்தைப் பிடித்தது. அந்த இடத்தை எதுவும் அடைய முடியவில்லை. ஆப்பிள் நிறுவனமும் இதனை உணர்ந்து Lisa கம்ப்யூட்டரின் விலை குறைந்த பதிப்பு ஒன்றை வெளியிட்டது. இதன் தொடர்ச்சி தான் ஜனவரி 24, 1984ல் விற்பனைக்கு வெளியான 128 கிலோ பைட்ஸ் மேக் கம்ப்யூட்டர். அதன் விலை 2,495 டாலர். அப்போது அது ஒரு பெரிய தொகைதான். ஆனால் Lisa  கம்ப்யூட்டரைக் காட்டிலும் குறை வான விலையில் இருந்ததல்லவா! இந்த விலை தாங்கக் கூடியதாக இல்லை என்று டைம்ஸ் பத்திரிக்கை எழுதியது. இருப்பினும் தன் நிலையை மேக் கம்ப்யூட்டர் மாற்றிக் கொள்ள இல்லை. இதே வேளையில் பெர்சனல் கம்ப்யூட்டர் டாஸ் இயக்கத்தில் வெளியாக மேக் கம்ப்யூட்டரும் டாஸ் கம்ப்யூட்டரும் ஒன்றுக்கொன்று இணைந்து இயங்கவில்லை என்பது அனைவரின் வருத்தமாக இருந்தது. இருப்பினும் மேக் கம்ப்யூட்டர் விற்பனை சற்று நிலையாகவே இருந்தது.
இந்த 25 ஆண்டுகளில் மேக் கம்ப்யூட்டர் பல ஏற்றத் தாழ்வுகளைச் சந்தித்துள்ளது. 1997 ஆம் ஆண்டில் ஆப்பிள் கம்ப்யூட்டருக்கு எதிர்காலம் இருக்குமா என்ற கேள்விக்குறியிடும் அளவிற்கு நிலை சென்றது. ஆனால் 2002ல் மீண்டும் இதன் தனித் தன்மை உலகிற்குக் காட்டப்பட்டது. அப்போது முதல் ஐ–மேக் கம்ப்யூட்டர் வெளியானது. டைம் இதழின் அட்டைப் படமாக இந்த ஐ–மேக் காட்டப்பட்டது. ஒரு டெஸ்க் மேல் வைக்கும் விளக்கு போல இந்த கம்ப்யூட்டர் உள்ளது என்ற கருத்து பரவியது. ஆனால் எந்த நிலையிலும் மேக் இன்டோஷ் தன்னை மாற்றிக் கொள்ளவே இல்லை. தொடர்ந்து தன் நிலையில் தனக்கென ஒரு இடத்தை இன்னும் கொண்டுள்ளது.  என்னதான் விண்டோஸ் இன்று உலகை ஆண்டாலும் அதனைப் பார்க்கையில் மவுஸைத் தொடுகையில் அதன் திரையைக் காண்கையில் அது ஆப்பிள் நிறுவனம் முதலில் அறிமுகப்படுத்திய ஒன்று என்ற எண்ணம் எழுகிறது.

No comments:

Post a Comment