இந்த வார டவுண்லோட் ஷ்யூர் டெலீட்
கம்ப்யூட்டரிலிருந்து நீங்கள் உருவாக்கிய பைல் ஒன்றை டெலீட் செய்துவிட்டீர்கள். அது அழிந்து போய்விட்டதா? நீக்கப்பட்டுவிட்டதா? யாரும் பார்க்க முடியாதபடி காணாமல் போய்விட்டதா? இல்லை, இல்லவே இல்லை. அந்த பைல் ரீசைக்கிள் பின்னுக்குச் சென்று தங்கலாம். நீங்கள் புத்திசாலியாய் இருந்தால், அதிலிருந்தும் அழித்துவிட்டிருக்கலாம். ஆனால் அப்போதும் அது கம்ப்யூட்டரிலிருந்து அழிவதில்லை. உங்கள் கம்ப்யூட்டர் அதனை அழிப்பதில்லை. அதற்குப் பதிலாக, அந்த பைல் இருந்த இடத்தை, அடுத்த பைல் வந்து தங்கலாம் என்று அறிவிக்கிறது. எனவே திறமையாக எழுதப்பட்ட ஒரு புரோகிராம் அந்த பைல் இருக்கும் இடத்தை, விதத்தை அறிந்து. பின் மீண்டும் மீட்டு உங்களுக்குத் தரலாம். அல்லது அடுத்தவர்கள் அதனைக் கண்டறியலாம். குறிப்பாக இந்த பைல்களில் நம்முடைய தனிப்பட்ட தகவல்களான, பேங்க் அக்கவுண்ட் எண், பாஸ்வேர்ட் ஆகியவை இருந்தால் அவை எந்த நிலையிலும் மற்றவர்களுக்குச் சென்றுவிடக்கூடாது.
எப்படி ரகசியசெய்தி எழுதிய தாள் ஒன்றை நாம் கிழித்துப் போட்டாலும், பொறுமையான நபர் ஒருவர் அந்த துண்டுகளைப் பொறுக்கி எடுத்து, ஒட்டி தகவலைத் தெரிந்து கொள்ளலாமோ, அதே போல கம்ப்யூட்டரில் அழிக்கப்பட்ட, நீக்கப்பட்ட ஒரு பைலை யார் வேண்டுமானாலும், சரியான புரோகிராம்கள் வழியாக எடுத்துக் கொள்ளலாம்.
தாள்களை, ஜஸ்ட் கிழிக்காமல் கடுகளவு துண்டுகளாக வெட்டி எறியும் ஷ்ரெடர் போல, நான் அழிக்கும் கம்ப்யூட்டர் பைல்கள் ஆக வேண்டும் என விரும்புகிறீர்களா! கவலையே வேண்டாம். அதற்கெனவே ஒரு சிறந்த புரோகிராம் உள்ளது. அதன் பெயர் Sure Delete. இதன் பதிப்பு 5.1.1., அண்மையில் வெளியானது. இந்த புரோகிராம் பைல்களில் உள்ள டேட்டாவினை நுணுக்கமாக அழிக்கிறது. பைல்களை மட்டுமின்றி ஒரு போல்டர் முழுவதையும் இதே போல் அழிக்க வேண்டும் என விரும்பினாலும் அழிக்கலாம். இந்த புரோகிராம் அழிக்கப்படும் ஒரு பைலின் மீது மாறான தகவல்களை குயிக் வைப் (Quick Wipe) என்ற திட்டத்தில் நான்கு முறை, டிபன்ஸ் துறை என்ற வகையில் ஏழு முறை மற்றும் சூப்பர் செக்யூர் வகையில் 24 முறை என மூன்று வகைகளில் எழுதுகிறது. இதனால் எந்த ரெகவரி பைல் மூலம் முயற்சி செய்தாலும், பைல்களை மீண்டும் எடுக்க முடியாது. ஷ்யூர் டெலீட் FAT12, FAT16, FAT32, and NTFS மற்றும் ஆகிய பைல் பார்மட்டுகளில் முழுமையான முறையில் செயல்படுவது உறுதி செய்யப் பட்டுள்ளது. எனவே விண்டோஸ் 95 தொடங்கி விஸ்டா வரை இதனைப் பயன்படுத்தலாம். விண்டோஸ் 7 சிஸ்டத்திற்கான பைல் விரைவில் வடிவமைக்கப்பட்டு கிடைக்கும். இதனை இன்ஸ்டால் செய்து இயக்குவதும் எளிதானதாகும். தேவை இல்லை என்றால் கம்ப்யூட்டரிலிருந்து இதனை எடுத்துவிடலாம்.

download link- suredelete
விண்டோஸ் ஆன்லைன் டிரைவ்
என்னதான் ஹார்ட் டிஸ்க்கின் விலை மிகவும் குறைவாக இருந்தாலும், நாம் அதில் பதியும் பைல்களின் அளவு அதிகரித்துக் கொண்டு தான் உள்ளது. சில நெருக்கடியான வேளைகளில் எந்த பைலை அழிப்பது, எந்த பைலை வைத்துக் கொள்வது என்று முடிவெடுக்க முடியாமல் குழப்பமடைகிறோம். இது போன்ற நேரங்களில் நமக்கு உதவிட பல ஆன்லைன் தளங்கள் உள்ளன. இங்கு சென்று நம்முடைய பைல்களை சேவ் செய்து வைக்கலாம். இப்படி பல தளங்கள் இருந்தாலும் இவற்றில் சில கட்டுப்பாடுகள் இருக்கும்.
குறிப்பிட்ட அளவிற்கு மேல் உள்ள பைல்களை அப்லோட் செய்து வைக்க முடியாது. நமக்கு ஒதுக்கப்படும் ஆன்லைன் டிரைவின் அளவு குறைவாக இருக்கும். திடீரென சில மாதங்கள் அல்லது நாட்கள் கழித்து கட்டணம் செலுத்தச் சொல்வார்கள். சில வேளைகளில் அந்த குறிப்பிட்ட சர்வரை அடைய முடியாது. சில நாட்களில் சர்வர் இல்லை என்ற செய்தியும் கிடைக்கும்.
இது போன்ற பிரச்னைகள் எதுவும் இன்றி நமக்கு இந்த வகையில் கிடைப்பதுதான் விண்டோஸ் லைவ் ஸ்கை டிரைவ் (Windows Live SkyDrive) வசதியாகும்.
இந்த டிரைவில் பைல்களை சேவ் செய்து வைக்க ஒவ்வொருவருக்கும் 25 ஜிபி இடம் தரப்படுகிறது. எனவே இதில் ஏறத்தாழ சராசரியான 1000 டாகுமெண்ட்களை சேவ் செய்திடலாம். 3,000 பாடல்களைப் பதிந்து வைக்கலாம். 10,000 போட்டோக்களை இதில் பாதுகாத்து வைக்கலாம். இதற்கு பாஸ்வேர்ட் பாதுகாப்பு உண்டு. அத்துடன் இந்த பைல்களை மற்றவர்கள் பார்ப்பதற்கும் அனுமதிக்கலாம். பிரைவேட் (Private) என வகைப்படுத்திவிட்டால் நீங்கள் மட்டுமே அதனைக் கையாள முடியும். ஷேர்டு (Shared) என ஒதுக்கினால் மற்றவர்களுடன் பைல்களைப் பகிர்ந்து கொள்ள முடியும். அனைவரும் பார்க்கலாம் என்றால் பப்ளிக் (Public) என வகைப்படுத்த வேண்டும்.
இதனைப் பெற என்ன செய்திட வேண்டும்? http://skydrive.live.com என்ற முகவரியில் உள்ள தளத்திற்குச் செல்லுங்கள். இதில் அக்கவுண்ட் ஒன்றைத் தொடங்கி, ஒரு மெம்பர் ஆக உங்களை ஆக்கிக் கொள்ளுங்கள். பின் அதில் தரப்படும் வழி நடத்தல்களின் படி சென்று பைல்களை அப்லோட் செய்திடலாம். உங்கள் பைல்கள் வைத்திடும் டிரைவினை, உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள மற்ற ஹார்ட் டிஸ்க் டிரைவ் பிரிவுகளில் ஒன்றாக இயக்கலாம். இதனால் நீங்கள் ரகசியமாக வைத்துப் பார்க்க வேண்டிய பைல்களை உங்கள் கம்ப்யூட்டரில் வைக்காமல் ஆன்லைன் டிரைவில் வைக்கலாம். உங்கள் அனுமதியின்றி யாரும் பார்த்துவிட முடியாது. இந்த அனைத்து வசதிகளும் இலவசம் என்பது இதன் உன்னத சிறப்பாகும்.

மைக்ரோசாப்ட் ஆன்லைன் சேவை
சிறிய மற்றும் நடுத்தர வணிக நிறுவனங்கள் தங்கள் நிர்வாக நடவடிக்கை களுக்கான செலவினைக் குறைக்கும் வழிகளை மைக்ரோசாப்ட் தன் ஆன்லைன் சேவை மூலம் வழங்குகிறது. டில்லியில் அண்மையில் இந்த சேவை அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. இதன் தொடக்க கட்டணம் மாதம் ரூ.95 (2 டாலர்). மின்னஞ்சல், இன்டர்நெட் ஒருங்கிணைப்பு, இன்டர்நெட் வழி கான்பரன்சிங் மற்றும் இவை சார்ந்த வழிகளை ஒரு நிறுவனம் தனக்கெனப் பெற்றுப் பயன்படுத்த முடியும். இந்த சேவையினை www.microsoft.com/india/onlineservicesஎன்ற முகவரியில் உள்ள மைக்ரோசாப்ட் நிறுவன இணைய தளம் சென்று பெற்று பயன்படுத்திக் கொள்ளலாம். பயன்படுத்தும் சேவைக்கேற்ப கட்டணம் செலுத்தினால் போதும். இதன் மூலம் வணிக நிறுவனங்கள் தங்களுக்கென இணைய தள சேவையை கூடுதல் செலவின்றி பெற முடியும். மேலும் இந்த சேவையினைத் தங்கள் நிறுவன வளாகம் மட்டுமின்றி, எந்த இடத்திலிருந்தும் பெற முடியும். இதனால் நிறுவனத்தின் நிர்வாகத்திறன் உயரும் வாய்ப்புகள் அதிகமாகிறது. இன்றைய போட்டி மிகுந்த உலகில், வர்த்தகத்தில் ஈடுபடும் நிறுவனங்கள் தங்களின் ஒவ்வொரு செயல்பாட்டுப் பிரிவிலும் கூடுதல் கவனத்தைச் செலுத்தி, செலவினங்களைக் கட்டுப்படுத்த வேண்டியுள்ளது. அந்த வகையில் நிர்வாகக் காரணங்களுக்கான செலவை மிச்சப்படுத்த இந்த ஆன்லைன் வசதி கை கொடுக்கும் என இதனை அறிமுகப்படுத்திய விழாவில் மைக்ரோசாப்ட் பிசினஸ் குரூப் தலைவர் ஸ்டீபன் குறிப்பிட்டார். இந்த சேவைகளை நிறுவனங்களுக்கு வழங்குவதில் மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் எச்.சி.எல். இன்போசிஸ்டம்ஸ், இன்போசிஸ் மற்றும் விப்ரோ ஆகிய முன்னணி நிறுவனங்கள் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளன. இந்த சேவை முறை, சோதனை முறையில் கடந்த ஜூலை மாதம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தியாவில் ஏறத்தாழ 1,800 பேர் இதனைப் பயன்படுத்தினார்கள். அவர்கள் நிறைவான வரவேற்பினைத் தெரிவித்ததால், சென்ற நவம்பர் 7 முதல் இது முழுமையாக அறிமுகமாகியுள்ளது. இந்த சேவைப்பிரிவில் மின்னஞ்சல்களுக்கு ஆன்லைன் எக்சேஞ்ச், இணைய தளங்களைப் பயன்படுத்த ஆபீஸ் ஷேர் பாய்ண்ட், வாடிக்கையாளர்கள் மற்றும் நிறுவன அலுவலர்கள் இடையே கலந்தாய்வு மேற்கொள்ள ஆபீஸ் லைவ் மீட்டிங், இன்ஸ்டண்ட் மெசேஜ் அனுப்பி பதில் பெற மைக்ரோசாப்ட் ஹோஸ்டட் சர்வீசஸ் மற்றும் மைக்ரோசாப்ட் கம்யூனிகேஷன்ஸ் ஆன்லைன் ஆகிய வசதிகள் தரப்படுகின்றன
எக்ஸெல் டிப்ஸ்… டிப்ஸ்….
வரிசைகள் எத்தனை?
எக்ஸெல் தொகுப்பில் வரிசைகளைத் தேர்ந்தெடுக்கையில் எத்தனை வரிசைகளைத் தேர்ந்தெடுத்திருக்கிறோம் என்று எப்படி அறிவது? எடுத்துக் காட்டாக மாணவர்களின் மதிப்பெண்களை வரிசையாக என்டர் செய்கையில், அல்லது செய்த பின் எத்தனை பேருக்கு என்டர் செய்திருக்கிறோம் என்று பார்க்க விரும்புகையில் என்ன செய்கிறோம்?
மானிட்டரில் விரலை வைத்து ஸ்கிரீனைத் தொட்டுப் பார்த்து எண்ணுவதா? அல்லது ஒவ்வொரு வரிசையாகக் கர்சரைக் கொண்டு சென்று 1,2,3 என்று கணக்கிடுவதா? அதிக எண்ணிக்கையில் இருந்தால் நிச்சயம் இவை இரண்டும் நமக்கு சரியாக வராது. எக்ஸெல் இதற்கென்றே ஒரு வசதியைக் கொண்டுள்ளது.
எக்ஸெல் தொகுப்பே உங்களுக்கு நீங்கள் செலக்ட் செய்திடும் வரிசைகளை எண்ணிச் சொல்லும். அதுவும் நீங்கள் செல்களை ஹைலைட் செய்திடும்போதே அவை எண்ணப்பட்டு எண்ணிக்கை என்னவென்று உங்களுக்குச் சொல்லப்படும். இதில் என்ன வேடிக்கை என்றால் இந்த வசதி உங்கள் கண் முன் எப்போதும் உள்ளது. ஆனால் நீங்கள் அதனை இது வரை உற்று நோக்கவில்லை. அதனை இங்கு பார்ப்போம். அடுத்த முறை நெட்டு வரிசை அல்லது படுக்கை வரிசைகளை ஹைலைட் செய்திடுகையில் படுக்கை வரிசைகளுக்கான எழுத்துக்கள் தோன்றும் இடத்திற்கு மேலாகப் பாருங்கள். அல்லது இறுதியாக ஹைலைட் ஆன செல்லுக்கு அருகாமையில் மேலாகப் பாருங்கள். எத்தனை காலம் எனக் காட்டப்படும். எடுத்துக்காட்டாக நான்கு காலம் என்றால் 4இ எனக் காட்டப்படும். காலம் முழுவதையும் தேர்ந்தெடுக்க வேண்டும். இதே போல ரோ எனப்படும் படுக்கை வரிசை செலக்ட் ஆகும்போது 4கீ எனக் காட்டப்படும். எங்கே, உடனே இந்த எண்ணிக்கையை முயற்சி செய்து பார்த்துவிடுங்கள்.

படுக்கை வரிசைகளை இடைச்சேர்க்க:
எக்ஸெல் ஒர்க் ஷீட்டில் இன்ஸெர்ட் மூலம் ஒரு வரிசையினை இணைப்பது எளிது. ஆனால் பல வரிசைகளை இணைக்க விரும்பினால் என்ன செய்வது? அதற்கான இரு வழிகளை இங்கு காணலாம். ஒவ்வொன்றாக இன்ஸெர்ட் அழுத்தி அடுத்தடுத்து வரிசைகளை இணைக்கலாம். முதல் வரிசையை இணைத்தவுடன் எப்4 கீயை அழுத்தினால், அழுத்த அழுத்த ஒரு வரிசை இணைக்கப்பட்டுக் கொண்டே இருக்கும். (எப்4 கீ அழுத்துகையில் அதற்கு முன்னால் என்ன செயல்பாடு மேற்கொள்ளப்பட்டதோ அதே செயல்பாடு திரும்ப மேற்கொள்ளப்படும் என்பதை நாம் ஏற்கனவே சொல்லி இருக்கிறோம்.)
இன்னொரு வழி தான் இங்கு புதிதாகச் சொல்லப்படுகிறது. நீங்கள் ஐந்து படுக்கை வரிசைகளை இணைக்க விரும்புவதாக வைத்துக் கொள்வோம். அவ்வாறு இணைக்குமுன், ஏற்கனவே இருக்கின்ற ஐந்து வரிசைகளைத் தேர்ந்தெடுங்கள். அதன்பின் இன்ஸெர்ட் மெனுவில் கீணிதீண் என்பதைத் தேர்ந்தெடுத்தால், எக்ஸெல் அழகாக ஐந்து படுக்கை வரிசைகளை இன்ஸெர்ட் செய்திடும்.

செல் பார்முலா :
செல் ஒன்றில் உள்ள எண்ணைக் கொண்டு, பார்முலா ஒன்றை அமைக்கிறீர்கள். அந்த செல்லில் எண் உள்ளதோ இல்லையோ, எக்ஸெல் அந்த செல்லைத் தேடி, அதில் உள்ள மதிப்பைக் கொண்டு பார்முலாவினை இயக்கத் தொடங்கும். எண் இல்லாவிட்டால் என்ன ஆகும்? அல்லது எண்ணுக்குப் பதிலாக டெக்ஸ்ட் இருந்தால் விளைவு என்ன? அதில் எண்ணை நிரப்புமாறு கட்டளை இடச் சொல்லி அமைக்கலாம். எடுத்துக்காட்டாக, A3 செல்லில் உள்ள மதிப்பைக் கொண்டு ஒரு பார்முலாவினை அமைக்கிறீர்கள். பார்முலா இப்படி அமைக்கலாம் =IF(ISNUMBER(A3), (A3*12)/52,”Enter number in cell A3″). A3 செல்லில் எண் இருந்தால், A3 * 12) / 52 என்ற கணக்கின் அடிப்படையில் மதிப்பு பார்முலாவிற்கான செல்லில் அமைக்கப்படும். இல்லை என்றால் “Enter number in cell A3.” என்ற டெக்ஸ்ட் அமைக்கப்படும்.

சோனி வழங்கும் ஆடு புலி ஆட்டம்
கம்ப்யூட்டரில் கேம்ஸ் விளையாட முடியும் என்றாலும், பல இல்லங்களில் சிறுவர்கள் கேம்ஸ் விளையாட பிளே ஸ்டேஷன்கள் என்னும் சாதனத்தைப் பயன்படுத்துவதனைக் காணலாம். இவற்றிற்கான கேம்ஸ் தயாரிப்பில் சோனி நிறுவனம் அண்மையில் புதுமையைக் கொண்டுவந்துள்ளது. தமிழில் நம் நாட்டிற்கேற்ற கேம்ஸ்களை வடிவமைத்துத் தந்துள்ளது. இதற்கென சோனி கம்ப்யூட்டர் என்டர்டெய்ன் மென்ட் மற்றும் கேம் சாஸ்திரா சொல்யூசன்ஸ் இணைந்து பல கேம்ஸ்களைத் தமிழில் உருவாக்கித் தந்துள்ளன. பிளே ஸ்டேஷன்களில் விளையாடும் வகையில் பி.எஸ்.2 (ரூ.499) மற்றும் பி.எஸ்.பி. (ரூ.999) ஆகியவை அறிமுகப்படுத்தப் பட்டுள்ளன.
இவை ஒரு கதை போல் அமைத்துத் தரப்பட்டுள்ளது. பிறந்தது முதல் வெளிநாடுகளில் வசித்த ஒருவன், தன் மூதாதையர் பிறந்த கிராமத்திற்கு வருகிறான். அங்கு அந்த கிராம விளையாட்டுக்களில் பங்கு பெறுகிறான். ஒரு காதல் ஜோடியைச் சேர்த்து வைக்கிறான். இதில் 1. பசிசி எனப்படும் தாயக்கட்டம், 2. ஆடு புலி ஆட்டம், 3. காற்றாடி விடுதல், 4.கபடி,5.கிட்டி எனப்படும் கில்லி தண்டா மற்றும் 6. நடன விளையாட்டு என கேம்ஸ்கள் தரப்பட்டு, நாம் முழுமையான ஈடுபாட்டுடன் விளையாடும் வகையில் இயங்குகின்றன. கிராமங்களில் கூட இந்த விளையாட்டுகள் மறைந்து வரும் நாட்களில், சோனி நிறுவனம் முயற்சி எடுத்து இவற்றை பிளே ஸ்டேஷன்களில் விளையாடும் வகையில் கொண்டு வந்துள்ளது, நம் பாரம்பரிய விளையாட்டுகளுக்கு புத்துணர்ச்சி கொடுக்கும் வகையில் அமைந்துள்ளது.

விண் ஸிப் 14
பல்களைச் சுருக்கி அமைக்கவும், பின் அவற்றை விரித்துப் பயன்படுத்தவும் விண்ஸிப் மிகவும் பரவலாகப் பயன்படுத்தப்படும் ஒரு புரோகிராம் ஆகும். இந்த புரோகிராமினைக் கட்டணம் செலுத்திப் பயன்படுத்த வேண்டும் என்றாலும், இதன் சோதனைப் பதிப்பு இலவசமாக இதன் நிறுவனத்தால் வழங்கப்படுவதால், பலரும் அதனையே தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றனர். விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டம் அண்மையில் வெளியானதைத் தொடர்ந்து, அதன் பல வசதிகளைப் பயன்படுத்தி விண்ஸிப் புரோகிராமின் புதிய பதிப்பு 14 அண்மையில் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கும் சோதனைப் பதிப்பு இலவசமாகக் கிடைக்கிறது.
விண்டோஸ் 7 தரும் லைப்ரரி மற்றும் ஜம்ப் லிஸ்ட் வசதிகளை விண்ஸிப் 14 நன்றாகப் பயன்படுத்திக் கொள்கிறது. விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் இணைந்து வந்தது போன்ற பயன்பாட்டு எளிமையை இது தருகிறது. ஒன்றுக்கு மேற்பட்ட போல்டர்களில் உள்ள பைல்களை விண்டோஸ் 7 லைப்ரரி மூலம் ஸிப் செய்திடலாம். பைல்கள் எங்கிருந்தாலும் அவற்றை மொத்தமாக ஒரு ஸிப் பைலில் கொண்டு வரலாம். இந்த வசதி இதற்கு முன் இல்லை. விண்ஸிப் புரோகிராமினை ஜம்ப் லிஸ்ட்டில் இணைத்து வைக்கலாம். தேவைப்படுகையில் இதனைக் கிளிக் செய்து நேரடியாகப் பயன்படுத்தலாம். பைல்களைச் சுருக்கலாம்; விரித்துப் பயன்படுத்தலாம்.
விண் ஸிப் 14, விண்டோஸ் 7 வசதிகளைப் பயன்படுத்தினாலும், இதற்கு முன் உள்ள விண்டோஸ் சிஸ்டங்களுடனும் பயன்படுத்தலாம்.
இந்த பதிப்பில் சுருக்கப்பட்ட பைல்களுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கப்படுகிறது. தானாகவே தற்காலிகமாகத் தான் உருவாக்கிய பைல்களை அழிக்கிறது. சுருக்கப்பட்ட பைல்களின் நகல்கள் ஏற்படுத்தப்பட்டிருந்தால் அவற்றையும் நீக்குகிறது. பைல்களை முன்னதாகப் பார்ப்பதற்கு மட்டும் என உருவாக்கப்பட்டிருந்தால் அவற்றையும் அழிக்கிறது.
மேலே சொல்லப்பட்ட வசதிகள் அனைத்தும்,ஏற்கனவே விண்ஸிப் புரோகிராம்களில் தரப்பட்ட வசதிகள் அனைத்திற்கும் கூடுதலாகத் தரப்பட்டுள்ளன. இந்த விண்ஸிப் பதிப்பில் .zipx என்னும் கம்ப்ரஸன் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. இது வழக்கமான சுருக்கும் நிலையைக் காட்டிலும், கூடுதலாக சிறிய அளவில் பைல்களைச் சுருக்குகிறது. ஏற்கனவே சுருக்கப்பட்ட வடிவில் இருக்கும் .jpg பைல்களை மேலும் 20% சுருக்குகிறது.
50 டாலர் கூடுதலாகச் செலுத்தினால் கூடுதல் வசதிகளுடன் விண்ஸிப் 14 கிடைக்கிறது. இதனைப் பயன்படுத்தி பைல்களை சிடி மற்றும் டிவிடிக்களில் எழுதலாம்.
விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்திலேயே பைல்களைச் சுருக்கும் வசதி இருக்கையில், ஏன் இது போன்ற தனியாக கம்ப்ரஸ் செய்திடும் புரோகிராம்களை விலை கொடுத்து வாங்க வேண்டும் என சிலர் வாதிடலாம். விண்ஸிப், விண்டோஸ் தரும் வசதிகளைக் காட்டிலும் சில கூடுதல் வசதிகளைத் தருகிறது. எளிதாக ஸிப் செய்வதும், அவற்றை விரித்துக் கொடுப்பதும் விண்ஸிப் புரோகிராமின் தனி குணங்களாகும்.
வழக்கம்போல விண்ஸிப் 14 பதிப்பின் சோதனைக்குத் தரப்படும் புரோகிராமினைhttp://www.winzip.com// என்ற முகவரியில் உள்ள தளத்தில் பெறலாம். கட்டணம் செலுத்தி வாங்க விரும்பினால் 30 டாலர் செலுத்த வேண்டும்.

மைக்ரோசாப்ட் வழங்கும் அஸுர்
வெகு காலமாக எதிர்பார்த்து வந்த ஆன்லைன் சாப்ட்வேர் அப்ளிகேஷன் சேவையினை மைக்ரோசாப்ட் வரும் புத்தாண்டு முதல் தர முடிவு செய்துள்ளது. ஜனவரி 1 முதல் விண்டோஸ் அஸூர் க்ளவுட் கம்ப்யூட்டிங் என்ற பெயரில் இந்த சேவை கிடைக்கும்.
இன்டர்நெட் மூலம் தங்களுக்குத் தேவையான சாப்ட்வேர் அப்ளிகேஷன் தொகுப்புகளையும், பைல்கள் சேவ் செய்து வைக்க டிஸ்க் இடத்தையும் பெற தற்போது மக்கள் விரும்பு கின்றனர். இதனால் பல தொல்லைகளிலிருந்து விடுபடுகின்றனர். எனவே இன்டர்நெட் சேவையினைக் கட்டணம் செலுத்திப் பெறுவது போல, இந்த சேவைகளையும் ஆன்லைனிலேயே பெற்றுப் பயன்படுத்த விரும்புகின்றனர். இந்த எதிர்பார்ப்பினை மைக்ரோசாப்ட் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள திட்டமிட்டு, ஓராண்டுக்கு முன் பரீட்சார்த்த அடிப்படையில் தந்து வந்தது. தற்போது இதனை முழுமையான கட்டமைப்பில் தர முடிவு செய்து, ஜனவரி 1 முதல் இதில் இறங்குகிறது. சென்ற வாரம் நடைபெற்ற மைக்ரோசாப்ட் சாப்ட்வேர் வல்லுநர்களின் ஆண்டுக் கூட்டத்தில், அப்பிரிவின் தலைவர் ரே ஓஸி அறிவித்தார்.
முதல் மாதத்தில் இந்த சேவை இலவசமாக வழங்கப்படும். பிப்ரவரி முதல் பயன்படுத்தப்படும் சேவைகளுக்கு மட்டும் கட்டணம் செலுத்த வேண்டியதிருக்கும். இந்த ஆன்லைன் சாப்ட்வேர் மற்றும் சேவை துறையில் மைக்ரோசாப்ட் நிச்சயம் பெரிய அளவில் இயங்க முடியும். தாமதமாகத்தான் இதனை மைக்ரோசாப்ட் இயக்க முன் வந்துள்ளது. ஏற்கனவே அமேஸான் (Amazon.com Inc) கட்டணம் பெற்றும் கூகுள் இலவசமாகவும் இந்த சேவையினை ஓரளவிற்கு வழங்கி வருகின்றனர்.
No comments:
Post a Comment